May 10, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் சாலையில் சென்ற மாட்டின் மீது பைக் மோதி வாலிபர் பலி

கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட சின்ன கோட்டக்குப்பம் சமரசம் நகர் சுனாமி குடியிருப்பில் வசிப்பவர் முஹம்மது சுலைமான் (44) திருமணம் ஆகி இரண்டு மகள்கள் உள்ளனர். இவர் கோட்டக்குப்பதில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காவலராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் முஹம்மது சுலைமான் நேற்று இரவு வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். சின்ன கோட்டக்குப்பம் புதுச்சேரி – சென்னை இ.சி.ஆர் சாலை அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக வந்த மாடு மீது ஸ்கூட்டர் மோதியதில், நிலை தடுமாறி சாலையில் விழுந்த சுலைமான் பக்கவாட்டில் இருந்த வாய்க்காலில் விழுந்தார்.

அப்பகுதி வழியாக வந்த பொதுமக்கள் சுய நினைவின்றி கிடந்த சுலைமானை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்திருக்கலாம் என்று கூறியுள்ளனர்.

விபத்து தொடர்பாக கோட்டக்குப்பம் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கொரோனா பேரிடர் காலத்திலும் கோட்டக்குப்பம் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இரத்ததான முகாம்.

போதை பொருள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் தரை வழி மின் கேபிள் & விளக்குகள் அமைப்பு.

டைம்ஸ் குழு

Leave a Comment