May 10, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் மதநல்லிணக்கம் – மனிதநேயம் மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி சமூக நல்லிணக்க மனித சங்கிலி.

கோட்டக்குப்பத்தில் மதநல்லிணக்கம் – மனிதநேயம் மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி சமூக நல்லிணக்க மனித சங்கிலி; 500 க்கும் மேற்ப்பட்டோர் கைகளை கோர்த்தப்படி ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பினர்.

மத அடிப்படையில் மக்களுக்கு இடையே பகையை ஏற்படுத்தி அமைதியை சீர்குலைக்க நினைக்கும் பிரிவினைவாத சக்திகளை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி, இன்று தமிழகம் முழுவதும் 500 இடங்களில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடைபெற்றது.

அதேபோல், கோட்டக்குப்பத்தில் சுமார் 4 – மணி அளவில் காயிதே மில்லத் வளைவு அருகில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடைபெற்றது. இதில் சுமார் 10-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் இந்த மனித சங்கிலியில் பங்கேற்று கண்டன முழக்கம் எழுப்பினர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பதில் கபசுர குடிநீர் மற்றும் வெற்றி வேர் மாஸ்க் மக்களுக்கு விநியோகம்.

டைம்ஸ் குழு

தமிழகத்தில் துல்ஹஜ் பிறை தென்பட்டது: பக்ரீத் பெருநாள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் நகராட்சியின் நிலைக்குழு, ஒப்பந்தக்குழு, வரி விதிப்பு மேல்முறையீடு குழு உறுப்பினர்கள் தேர்வு.

டைம்ஸ் குழு

Leave a Comment