May 10, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் 1-ம் எண் நியாயவிலைக் கடையை இரண்டாக பிரிக்க அதிகாரிகள் ஆய்வு.

கோட்டக்குப்பம் ஒன்றாம் எண் நியாயவிலைக் கடையை இரண்டாக பிரித்து புதிய நியாய விலைக் கடையை உருவாக்க இன்று (21-05-2022) வருவாய் மற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகள் ஆய்வு.

கோட்டக்குப்பம் 16,17,18,19 ஆகிய வார்டு மக்களின் நீண்ட கால கோரிக்கையான ஒன்றாம் எண் நியாயவிலைக் கடையை இரண்டாக பிரிக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக சென்ற 20-05-2022 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது..

இதனிடையில் 19-05-2022 அன்று தாசில்தார் தலைமையில் நடந்த சுமூக பேச்சி வார்த்தையில் ஜூன் மாதம் இறுதிக்குள் 1-ம் எண் நியாய விலை கடையை இரண்டாக பிரித்து கொடுக்க உறுதி அளித்தார். அதன் அடிப்படையில் இன்று 21-05-2022 காலை வானூர் வட்ட வழங்கல் அலுவலர் திரு ராதா கிருஷ்ணன் மற்றும் கூட்டுறவு சார் பதிவாளர் செல்வகுமார் மற்றும் சேல்ஸ் மேன் அஜித் குமார் ஆகியோர் கடையை பிரிக்க சாத்திய கூர்ரான இடங்களை பார்வையிட்டனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பத்தில் கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம், பொருட்கள் கொள்ளை

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் பழைய பட்டின பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்.

கோட்டக்குப்பதில் SDPI கட்சியின் சார்பாக சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சி

டைம்ஸ் குழு

Leave a Comment