May 10, 2025
Kottakuppam Times
செய்திகள் பிற செய்திகள்

ஹஜ் மானியம் ரத்து இந்த ஆண்டுடன்…

இந்த ஆண்டுடன் முஸ்லிம்களுக்கான ஹஜ் மானியத்தை ரத்து செய்வதாக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி அறிவித்திருக்கிறார்.

இந்த ஆண்டு அதிகபட்சமாக 1.75 முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரை அனுப்பிவைக்கப்படுவார்கள் என்றும் இதுவரை இந்த அளவு பெரிய எண்ணிக்கையில் ஹஜ் யாத்திரைக்கு  யாத்ரீகர்கள் அனுப்பிவைக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இனி பெண் கல்விக்காக..
இதுவரை ஹஜ் பயணத்துக்கு மானியமாக பயன்படுத்தப்பட்ட தொகை இனிமேல் பெண் கல்விக்காக செலவிடப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹஜ் புனித யாத்திரைக்காக ஆண்டுதோறும் ரூ.500 கோடி செலவிடப்பட்டதாகத் தெரிகிறது.
சவுதி இந்தியா ஒப்பந்தம்
இந்நிலையில் விமான பயணம் மேற்கொண்டால் மட்டுமே அதிக செலவு ஏற்படும் என்றும் கடல் வழியில் மெக்காவிற்கு பயணம் மேற்கொண்டால் அதிக செலவு ஏற்படாது என்றும் கூறியுள்ளார். இதற்காக சவுதி அரேபியா இந்தியா இடையேயான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாகவும் முக்தர் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

தமிழகத்தில் இன்று 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு!

கோட்டகுப்பம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உயர் மின் விளக்கு கம்பங்கள் அப்புறப்படுத்தப்படுகிறது

KIWS சார்பாக ஆம்புலன்ஸ் சேவை, மரக்கன்று நடும் விழா மற்றும் இரத்ததான முகாம்..

Leave a Comment