28.7 C
கோட்டக்குப்பம்
May 10, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் போலீஸ் சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றம் சார்பில் திறன் தேர்வு.

கோட்டக்குப்பம் நகராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் 80 மாணவ மாணவியர்களுக்கு இன்று மாலை 4:00 மணி அளவில் கோட்டக்குப்பம் போலீஸ் சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றம் சார்பில் திறன் தேர்வு நடைபெற்றது.

இதில், மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. ஆனந்த் மற்றும் சாரணர் இயக்க அலுவலர் திரு. சாரதி அவர்களின் தலைமையில் நடைபெற்ற (police boys club காவல் சிறுவர் சிறுமியர்கள்) திறன் தேர்வு பயிற்சி வகுப்பில் 80 சிறுவர் சிறுமிகள் கலந்து கொண்டு மாணவர் திறன் தேர்வு பயிற்சி வகுப்புகளில் கோட்டகுப்பம் காவல் ஆய்வாளர் திரு ராபின்சன் அவர்கள் முன்னிலையில் பொது அறிவு சம்பந்தமாக, சாலை பாதுகாப்பு, போதை பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகாமல் இருப்பது தொடர்பாக மற்றும் சமூக நல்லிணக்கம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது.

இதில் சிறப்பாக பதில் அளித்த சிறுவர் சிறுமிகளுக்கு பாராட்டு சான்றிதழ் அளித்து பரிசு வழங்கி கௌரவித்தார்கள். இதில் ஏராளமான ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பதில் பாரத் பந்த் நடத்திட அனைத்து கட்சி சார்பாக இன்று கோரிக்கை விடுக்கப்பட்டது…

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் கப்ருஸ்தானியில் (மையவாடி) சிமெண்ட் பாதை அமைக்கபடுகிறது

கலைஞர் நினைவு தினம்: கோட்டக்குப்பம் 14-வது வார்டு திமுக சார்பில் மலர் மாலை அணிவித்து நலத்திட்ட உதவிகள் வழங்கல்

டைம்ஸ் குழு

Leave a Comment