May 10, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பகுதியில் நிலத்தடி கேபிள் மூலமாக மின்சாரம் அமைக்க கோரி மனு.

நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இருக்கும் கோட்டக்குப்பம் நகராட்சிக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் நிலத்தடி கேபிள் மூலமாக மின்சாரம் திட்டத்தை நடைமுறைப்படுத்த கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கோட்டக்குப்பம் இளமின் பொறியாளர் அவர்களுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறியுள்ளதாவது.

கோட்டக்குப்பம்‌ தற்போது தமிழக அரசால்‌ நகராட்சியாக தரம்‌ உயர்த்தப்பட்டு இருக்கிறது. கோட்டக்குப்பம்‌ நகரம்‌ வேகமாக வளர்ந்து வரும்‌ நகரமாக இருக்கிறது. தற்போது கோட்டக்குப்பத்தில்‌ 13841 வீட்டு மின்‌ இணைப்புகளும்‌ விவசாயத்திற்காக 443 மின்‌ இணைப்புகளும்‌, வணிக தேவைக்காக 2750 மின்‌ இணைப்புகளும்‌, தற்காலிக மின்‌ இணைப்பாக 432 இணைப்புகளும்‌ மற்ற மின்‌ இணைப்புகள்‌ என மொத்தம்‌ 17972 மின்‌ இணைப்புகள்‌ உள்ளன. இவற்றின்‌ மூலம்‌ 37,762 கிலோவாட்‌ மின்சாரம்‌ இந்த நகராட்சியில்‌ பயன்படுத்தப்படுகிறது. கோட்டக்குப்பம்‌ நகரம்‌ சுனாமி, தானே புயல்‌, நிசா புயல்‌, தொடர்‌ மழை என பல வித இயற்கைச்‌ சிற்றங்களுக்கு ஆளாகி இருக்கிறது. அப்போது எல்லாம்‌ மின்‌ கம்பங்கள்‌ சாய்ந்து பல நாட்கள்‌ மின்சாரம்‌ இல்லாமல்‌ கோட்டக்குப்பம்‌ மக்கள்‌ அவதிப்படும்‌ நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, எதிர்காலத்தில்‌ அப்படிப்பட்ட அவலநிலை ஏற்படாமல்‌ தவிர்க்க பூமிக்கு
அடியில்‌ புதைவட கம்பி கேபிள்‌ மூலம்‌ மின்சாரம்‌ வழங்க தேவையான
அனைத்து நடவடிக்கைகளையும்‌ உடனடியாக தொடங்கி எதிர்வரும்‌ மழைக்‌
காலத்திற்குள்‌ முடித்து புயல்‌ மழை காலத்தில்‌ தடையின்றி மின்சாரம்‌
கிடைக்கவும்‌ மின்சார வாரியத்திற்கு இழப்பு ஏற்படாமல்‌ தவிர்க்க வேண்டுமென
கேட்டுக்கொள்ளப்பட்டது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

தந்திராயன்குப்பம் கடற்கரை அலையில் சிக்கி புதுச்சேரி மாணவன் பலி.

டைம்ஸ் குழு

ஹிஜாப் தடை: கோட்டக்குப்பதில் தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்.

டைம்ஸ் குழு

மாணவிகளை கேலி கிண்டல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 27-வது வார்டு கவுன்சிலர் மனு.

டைம்ஸ் குழு

Leave a Comment