May 10, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் உள்ளாட்சித் தேர்தல்: வாக்குப் பதிவு நிறைவு. எந்தத்த வார்டில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு. முழு விபரம்.

தமிழ்நாட்டில் காலை 7 மணிக்குத் தொடங்கிய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று (சனிக்கிழமை) ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது.

காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. 5 மணி முதல் 6 மணி வரை கரோனா நோயாளிகள் வாக்களித்தனர்.

வாக்குப் பதிவு நிறைவடைந்ததையடுத்து, வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்படும் பணிகள் முடிவடைந்தது.

கோட்டக்குப்பம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை 76 சதவீத வாக்குகள்  பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக வார்டு 23-ல் 90 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது. அதன் முழு விபரம் பின்வருமாறு,

வாக்கு எண்ணிக்கை 22-ம் தேதி நடைபெறுகிறது. உள்ளாட்சி அமைப்புகளின் புதிய உறுப்பினர்கள் மார்ச் 2-ம் தேதி பதவியேற்கின்றனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் பேரூராட்சியில் தேசியக் கொடி ஏற்றினார் செயல் அலுவலர் இராமலிங்கம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் நகராட்சியின் புதிய 27 வார்டு வரைவு பட்டியல் வெளியீடு (Exclusively only on KottakuppamTimes.com).

டைம்ஸ் குழு

ஈகைப் பெருநாள் தொழுகை அறிவிப்பு…

Leave a Comment