May 10, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் நாட்டுப் பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் தந்தை – மகன் பலி

புதுச்சேரி, அரியாங்குப்பம் காக்கயான் தோப்பு பகுதியை சேர்ந்தவர் கலையரசன். இவர் தமிழகப்பகுதியான மரக்காணம் அருகே கூனிமேட்டில் உள்ள தனது மனைவி ரூபணாவை பார்ப்பதற்காக வியாழக்கிழமை பிற்பகல் வந்தார்.

பின்னர் அங்கிருந்து தனது மகன் பிரதீஷ், தீபாவளி கொண்டாட இரண்டு சக்கர வாகனத்தில் இரண்டு சாக்கு மூட்டைகளில் நாட்டு பட்டாசுகளை ஏற்றிக்கொண்டு புதுச்சேரி நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது புதுச்சேரி அருகேவுள்ள விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் கிழக்குக்கடற்கரை சாலை சந்திப்பில் வந்துகொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக, இரண்டு சக்கரவாகனத்தில் இருந்த நாட்டு பட்டாசுகள் திடீரென பயங்கர சத்ததுடன் வெடித்து சிதறின. இதில் இருசக்கர வாகனத்தில் இருத்த தந்தையும் மகனும் தூக்கி வீசப்பட்டு உடல் சிதறி உயிரிழந்தனர். இவர்களது உடல் பாகங்கள் 300 மீட்டர் தூரம் வரை சிதறி கிடந்தன.

அந்த பகுதியில் அருகே வந்த வாகனங்கள் மற்றும் அருகில் இருந்த வீட்டுகளின் கூறைகளும் சேதமடைந்தன. அந்த சாலை முழுவதும் போர்க்களம் போல் காட்சியளித்தது. பட்டாசு கொண்டுவந்த இருசக்கர வாகன பல்வேறு துண்டுகளாக சிதறின.

இந்த வெடிவிபத்து சம்பவம் நடைபெறும்போது அந்த சாலையில் சக்கர வாகனங்களில் தனித்தனியே வந்த ஷர்புதீன் மற்றும் கணேசன் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த வெடிவிபத்து சம்பவம் நடைபெறும்போது அந்த சாலையில் சக்கர வாகனங்களில் தனித்தனியே வந்த ஷர்புதீன் மற்றும் கணேசன் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இருப்பினும் விபத்து நிகழ்ந்த இடம் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதியில் வருவதால் கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் சரவணன் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரித்தார். பின்னர் நிகழ்விடத்துக்கு  இடத்திற்கு விழுப்புரம் டிஐஜி பாண்டியன்,விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.ஸ்ரீநாதா ஆகியோர் நேரில் வந்து  ஆய்வு செய்தனர்.

நிகழ்விடத்துக்கு தடய அறிவியல் துணை இயக்குநர் சண்முகம் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கிருந்த தடயங்களை சேகரித்தார்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு உடற்கூறு ஆய்வுக்காக புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த பட்டாசு விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கோட்டக்குப்பம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

நன்றி அறிவிப்பு!

சின்ன கோட்டக்குப்பம் தர்பிய்யதுல் பனாத் பெண்கள் அரபிக் கல்லூரி & மஸ்ஜிதே பிலாலலிய்யா வல் மத்ரஸா சார்பில் முப்பெரும் விழா.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் சுகாதாரத்துறையின் முக்கிய அறிவிப்பு.

டைம்ஸ் குழு

Leave a Comment