22.3 C
கோட்டக்குப்பம்
December 16, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் நாளை 5-ஆவது மெகா தடுப்பூசி முகாம்! 12 இடங்களில் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில், கோட்டக்குப்பதில் நாளை ஞாயிற்றுக்கிழமை(10-10-2021), 12 முகாம்களில் காலை 8 மணி முதல் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது.

  1. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம்.
  2. பரகத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம்.
  3. ரஹமத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம்.
  4. சிவன் கோயில், சின்ன கோட்டக்குப்பம்.
  5. அங்கன்வாடி மையம், சத்யா நகர், சின்ன கோட்டக்குப்பம்.
  6. அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தந்தராயன்குப்பம்.
  7. அங்கன்வாடி மையம், ஜமியத் நகர்.
  8. அங்கன்வாடி மையம், கோட்டக்குப்பம் காலனி.
  9. அங்கன்வாடி மையம், கோட்டைமேடு.
  10. அரசு நடுநிலைப் பள்ளி, பெரிய முதலியார் சாவடி.
  11. அரசு ஆரம்ப தொடக்க பள்ளி, சின்ன முதலியார் சாவடி
  12. ஜெயமுத்து மாரியம்மன் கோயில், சின்ன முதலியார் சாவடி.

முதல் டோஸ்(கோவிஷீல்ட்) எடுத்துக்கொண்டு 84 நாட்களுக்கு மேல் இருப்பவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

ஆகையால், பொதுமக்கள் இந்த சிறப்பு தடுப்பூசி முகாமை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தடுப்பூசி செலுத்த வரும்பொழுது, தங்களது ஆதார் அட்டையை எடுத்து வரும்படி கேட்டுக்கொள்கிறோம்.

வெளிநாடுகளுக்கு செல்ல கூடியவர்கள், பாஸ்போர்ட் எடுத்து வந்து பதிந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தடுப்பூசி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா ஒழிக்கும் வகையில் தடுப்பூசி முகாமை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக்கொண்டு தங்கள் பங்கை செலுத்திட தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் சந்தேகங்கள் மற்றும் விபரங்களுக்கு:
திரு. ரவி,
9486476433
சுகாதார ஆய்வாளர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் பகுதியில் குப்பைகளை எரிக்கும் மர்ம நபர்கள்: பொதுமக்கள் அச்சம்

டைம்ஸ் குழு

தந்திராயன்குப்பம் & ஆரோவில் கடற்கரையில் கடல் நீர் உள்வாங்கியது: மீனவர்கள் அச்சம்

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் உற்சாகமாக கொண்டாடப்பட்ட நோன்பு பெருநாள்.  [புகைப்படங்கள்]

Leave a Comment