28.7 C
கோட்டக்குப்பம்
May 10, 2025
Kottakuppam Times
Uncategorized

கோட்டக்குப்பதில் செப்.12-இல் கொரோனா மெகா இலவச தடுப்பூசி முகாம்.

கோட்டக்குப்பதில் கொரோனா மெகா தடுப்பூசி(கோவிஷீல்டு) முகாம் 13 மையங்களில், வருகிற ஞாயிற்றுக்கிழமை (செப்.12) காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை, கோட்டக்குப்பம் பொதுசுகாதாரத் துறை சார்பில், அனைத்து நபா்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது.

  1. அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம்.
  2. பரகத் நகர் அல் மஸ்ஜிதுல் முபாரக், பள்ளிவாசல் வளாகம், கோட்டக்குப்பம்.
  3. கடை தெரு பள்ளிவாசல் (புஸ்தானியா), கோட்டக்குப்பம்.
  4. அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தந்தராயன்குப்பம்.
  5. வேதா உயர்நிலைப்பள்ளி, கரி கடை சந்து, சின்ன கோட்டக்குப்பம்.
  6. சுனாமி குடியிருப்பு பகுதி, சின்ன கோட்டகுப்பம்.
  7. சுனாமி குடியிருப்பு பகுதி, ஜமியத் நகர்.
  8. அங்கன்வாடி மையம், ரஹ்மத் நகர்.
  9. அரசு தொடக்கப்பள்ளி, நடுக்குப்பம்.
  10. அரசு தொடக்கப்பள்ளி, பெரிய முதலியார் சாவடி.
  11. அரசு ஆரம்ப தொடக்க பள்ளி, சின்ன முதலியார் சாவடி.
  12. அங்கன்வாடி மையம், மாரியம்மன் கோயில் தெரு, சின்ன முதலியார் சாவடி.
  13. சுனாமி குடியிருப்பு பகுதி, சின்ன முதலியார் சாவடி.

முதல் டோஸ்(கோவிஷீல்ட்) எடுத்துக்கொண்டு 84 நாட்களுக்கு மேல் இருப்பவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

ஆகையால், பொதுமக்கள் இந்த சிறப்பு தடுப்பூசி முகமை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தடுப்பூசி செலுத்த வரும்பொழுது, தங்களது ஆதார் அட்டையை எடுத்து வரும்படி கேட்டுக்கொள்கிறோம்.

வெளிநாடுகளுக்கு செல்ல கூடியவர்கள், பாஸ்போர்ட் எடுத்து வந்து பதிந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் சந்தேகங்கள் மற்றும் விபரங்களுக்கு:
திரு. ரவி,
9486476433
சுகாதார ஆய்வாளர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பத்தில் கொரோனா போர் வீரர் விருது (Corona Warrior Award 2020-21)

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் தாருல் உலாம் மக்தப் மதரஸா ஆண்டு விழா.

டைம்ஸ் குழு

ஞாயிறு முழு ஊரடங்கு: கோட்டக்குப்பதில் வெறிச்சோடி காணப்படும் முக்கிய சாலைகள்.

டைம்ஸ் குழு

Leave a Comment