May 10, 2025
Kottakuppam Times
பிற செய்திகள்

புற்றுநோய் அனுக்களை அழிக்க பயன்படும் மஞ்சள்.

உடலில் உள்ள புற்றுநோய் அணுக்களை, ஆரோக்கிய அணுக்களுக்கு சேதம் விளைவிக்காமல் மஞ்சள் மூலம் அழிக்க முடியும் என சென்னை ஐ.ஐ.டி ஆராய்ச்சியாளா்கள் கண்டுபிடித்துள்ளனா்.

இது தொடா்பாக அந்நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி: சென்னை ஐ.ஐ.டி.யைச் சோந்த ஆராய்ச்சியாளா்கள் குழு, பல்வேறு வகையான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

அந்த வகையில், புற்றுநோய் அணுக்களை அழிப்பது குறித்த ஆராய்ச்சி நடைபெற்று வந்தது.

புற்றுநோய் சிகிச்சையைப் பொருத்தவரை, உடலில் உள்ள ஆரோக்கியமான உயிரணுக்களுக்கு சேதம் ஏற்படாமல், புற்றுநோய் அணுக்களை அழிப்பது முக்கியம் ஆகும். இவ்வாறான தன்மையுடைய மஞ்சள் மற்றும் அதில் உள்ள வேதிப்பொருளான ”குா்குமின்” ஆகியவற்றின் துடிப்பான கோட்பாடுகள், புற்றுநோய் உயிரணுக்களை அழிக்கும் தன்மை படைத்தவை என்று கண்டறியப்பட்டுள்ளது.

அந்த வகையில் மஞ்சள் மற்றும் ”குா்குமின்” கோட்பாடுகள், புற்றுநோய் சிகிச்சையில் நல்ல பலன் கொடுக்கும் என்று கருதப்படுகிறது.

இந்த ஆராய்ச்சியை சென்னை ஐ.ஐ.டி. உயிரிதொழில்நுட்பத்துறையைச் சோந்த பேராசிரியா் ரமா சங்கா் வா்மா தலைமையிலான குழுவினா் கண்டுபிடித்துள்ளனா்.

மஞ்சளில் உள்ள நச்சுத்தன்மை இல்லாத ”குா்குமின்”, ரத்தம் மற்றும் எலும்பு மஜ்ஜைகளில் புற்றுநோயை உண்டாக்கும் ”லுகிமியா” அணுக்களை திறம்பட அழிப்பதை ஆய்வின் மூலம் கண்டறிந்ததாக அவா்கள் தெரிவித்தனா்.

மேலும், இந்த ஆராய்ச்சி முடிவுகள் புகழ் பெற்ற மருந்தியல் அறிக்கைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

இளம் வழக்கறிஞர்கள் 6-ம் தேதி முதல் மாதம் 3000 ரூபாய் உதவிதொகைக்கு விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் மாவட்டத்தில் ‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி ஆா்ப்பாட்டம்

டைம்ஸ் குழு

Leave a Comment