23.3 C
கோட்டக்குப்பம்
December 16, 2025
Kottakuppam Times
புதுச்சேரி செய்திகள்

புதுச்சேரி தமிழக எல்லையானா கோரிமேடு பகுதியில் திடீர் பதற்றம்.

விழுப்புரம் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் புதுவைக்குள் அனுமதிக்க கூடாது என்று முதல் அமைச்சர் நாராயணசாமி திட்டவட்டமாக அறிவித்தார்.

அதையொட்டிபுதுவை மாநில எல்லைகளை புதுவை போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மூடியுள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் புதுவைக்கு நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது வானூர் பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் புதுவை- கோரிமேடு எல்லையில் புதுச்சேரியில் இருந்து தமிழகத்துக்கு வரும் வாகனங்களை மறித்து தமிழ்நாட்டுக்குள்.

புதுவையில் இருந்து யாரும் வரக்கூடாது என்று வாகன ஓட்டிகளிடம் கூறி வாகனங்களை மறித்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கோட்டகுப்பம் டிஎஸ்பி அஜய் தங்கம் கோபமடைந்து இதை கேட்பதற்கு நீ யார் என்று கூறி நான்கு பேரையும் சுற்றி வளைத்தார். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த 4 பேரும் கைது செய்யப்பட்டனர் இந்த சம்பவத்தால் புதுவை தமிழக எல்லையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

தனியாா் பள்ளிகள் 40 சதவீதத்துக்கு மேல் கல்விக் கட்டணம் வசூலிக்கக் கூடாது: புதுவை கல்வித் துறை உத்தரவு

ஊரடங்கை தளர்த்தினால் கரோனா பரவல் அதிகரிக்கும்.. புதுச்சேரி சுகாதாரத்துறை எச்சரிக்கை!

புதுச்சேரியில் அதிக கொரோனா தோற்று உள்ள பகுதியாக மாறியுள்ளது முத்தியால்பேட்டை.

Leave a Comment