Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Wed, 27 May 2026 06:31:19 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பம் வளைகுடா வாழ் மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடிய தியாகத் திருநாள்! https://www.kottakuppamtimes.com/9774/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%25b3%25e0%25af%2588%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%259f%25e0%25ae%25be-%25e0%25ae%25b5 https://www.kottakuppamtimes.com/9774/#respond Wed, 27 May 2026 06:31:16 +0000 https://www.kottakuppamtimes.com/?p=9774 கோட்டக்குப்பத்தைச் சேர்ந்த, வளைகுடா நாடுகளில் வசிக்கும் நண்பர்கள் தங்களது தியாகத் திருநாளை (பக்ரீத் பண்டிகை) சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். குவைத், அபுதாபி, கத்தார் உள்ளிட்ட பல்வேறு வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வரும் கோட்டக்குப்பத்தைச் சேர்ந்த நண்பர்கள், இந்த புனித நாளில் அங்குள்ள பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்பு பெருநாள் தொழுகைகளில் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கலந்துகொண்டனர். தொழுகை நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, அவர்கள் ஒருவரையொருவர் கட்டித்தழுவி தங்களது பெருநாள் வாழ்த்துகளையும்,...

The post கோட்டக்குப்பம் வளைகுடா வாழ் மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடிய தியாகத் திருநாள்! appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பத்தைச் சேர்ந்த, வளைகுடா நாடுகளில் வசிக்கும் நண்பர்கள் தங்களது தியாகத் திருநாளை (பக்ரீத் பண்டிகை) சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

குவைத், அபுதாபி, கத்தார் உள்ளிட்ட பல்வேறு வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வரும் கோட்டக்குப்பத்தைச் சேர்ந்த நண்பர்கள், இந்த புனித நாளில் அங்குள்ள பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்பு பெருநாள் தொழுகைகளில் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கலந்துகொண்டனர்.

தொழுகை நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, அவர்கள் ஒருவரையொருவர் கட்டித்தழுவி தங்களது பெருநாள் வாழ்த்துகளையும், அன்பையும் மகிழ்ச்சியுடன் பரிமாறிக்கொண்டனர்.

குவைத்:

அபுதாபி:

கத்தார்:

The post கோட்டக்குப்பம் வளைகுடா வாழ் மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடிய தியாகத் திருநாள்! appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/9774/feed/ 0
கோட்டக்குப்பத்தில் தொடரும் பல மணி நேர மின்வெட்டு: இருளில் தவிக்கும் மக்கள்! https://www.kottakuppamtimes.com/9772/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25af%258a%25e0%25ae%259f-6 https://www.kottakuppamtimes.com/9772/#respond Tue, 19 May 2026 18:07:56 +0000 https://www.kottakuppamtimes.com/?p=9772 கோட்டக்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பல மணி நேரமாக நீடிக்கும் மின்வெட்டால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இப்பகுதியில் இன்று காலை முதல் மாலை வரை பராமரிப்புப் பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்பட்டிருந்தது. பணிகள் முடிந்து மாலையில் மின்சாரம் வழங்கப்பட்ட நிலையில், சிறிது நேரத்திலேயே பெய்த மழையின் காரணமாக மீண்டும் மின்தடை ஏற்பட்டது. ஆனால், அதன்பிறகு தற்போது வரை மின் விநியோகம் சீரமைக்கப்படவில்லை. தொடர்ந்து...

The post கோட்டக்குப்பத்தில் தொடரும் பல மணி நேர மின்வெட்டு: இருளில் தவிக்கும் மக்கள்! appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பல மணி நேரமாக நீடிக்கும் மின்வெட்டால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இப்பகுதியில் இன்று காலை முதல் மாலை வரை பராமரிப்புப் பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்பட்டிருந்தது. பணிகள் முடிந்து மாலையில் மின்சாரம் வழங்கப்பட்ட நிலையில், சிறிது நேரத்திலேயே பெய்த மழையின் காரணமாக மீண்டும் மின்தடை ஏற்பட்டது. ஆனால், அதன்பிறகு தற்போது வரை மின் விநியோகம் சீரமைக்கப்படவில்லை.

தொடர்ந்து பல மணி நேரமாக மின்சாரம் இல்லாத காரணத்தால், வீடுகளில் உள்ள இன்வெர்ட்டர்களின் (Inverter) பேட்டரியும் தீர்ந்துவிட்டன. இதனால் கோட்டக்குப்பத்தின் பல்வேறு பகுதிகள் முழுவதுமாக இருளில் மூழ்கியுள்ளன. மின்விசிறி உள்ளிட்ட அடிப்படை மின்சாதனங்களை இயக்க முடியாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இது தொடர்பாக மின்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, “மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் சரிசெய்யப்பட்டு வருவதாகவும், இன்னும் சற்று நேரத்தில் மின் விநியோகம் வழங்கப்படும்” எனவும் தெரிவித்தனர்.

இருப்பினும், நீண்ட நேரமாகியும் மின்சாரம் வழங்கப்படாததால், எப்போது மின் விநியோகம் சீரமைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பிலும் காத்திருப்பிலும் கோட்டக்குப்பம் பகுதி மக்கள் உள்ளனர்.

The post கோட்டக்குப்பத்தில் தொடரும் பல மணி நேர மின்வெட்டு: இருளில் தவிக்கும் மக்கள்! appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/9772/feed/ 0
கோட்டக்குப்பம் இந்தியன் வங்கியில் தொழில்நுட்பக் கோளாறு: வாடிக்கையாளர் கணக்குகளில் இருந்து பணம் குறைந்ததால் பரபரப்பு https://www.kottakuppamtimes.com/9765/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25a9%25e0%25af%258d https://www.kottakuppamtimes.com/9765/#respond Sat, 09 May 2026 16:27:10 +0000 https://www.kottakuppamtimes.com/?p=9765 கோட்டக்குப்பம் எம்.ஜி. சாலையில் உள்ள இந்தியன் வங்கியின் கிளையில், வாடிக்கையாளர்களின் கணக்குகளில் இருந்து தானாகவே பணம் எடுக்கப்பட்டதாக எழுந்த புகாரால் இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியின் சர்வரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே இதற்குக் காரணம் என்றும் வங்கி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இன்று மதியம் முதல், பல வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் இருந்து ஆயிரக்கணக்கான ரூபாய் பணம் எடுக்கப்பட்டதாகக் தெரிவித்துள்ளனர். சிலருக்கு ஆயிரம் ரூபாய் முதலும், சிலருக்கு அதிகபட்சமாக...

The post கோட்டக்குப்பம் இந்தியன் வங்கியில் தொழில்நுட்பக் கோளாறு: வாடிக்கையாளர் கணக்குகளில் இருந்து பணம் குறைந்ததால் பரபரப்பு appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் எம்.ஜி. சாலையில் உள்ள இந்தியன் வங்கியின் கிளையில், வாடிக்கையாளர்களின் கணக்குகளில் இருந்து தானாகவே பணம் எடுக்கப்பட்டதாக எழுந்த புகாரால் இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியின் சர்வரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே இதற்குக் காரணம் என்றும் வங்கி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

இன்று மதியம் முதல், பல வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் இருந்து ஆயிரக்கணக்கான ரூபாய் பணம் எடுக்கப்பட்டதாகக் தெரிவித்துள்ளனர். சிலருக்கு ஆயிரம் ரூபாய் முதலும், சிலருக்கு அதிகபட்சமாக 90,000 ரூபாய் வரையிலும் பணம் கழிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் மூடிக்கிடந்த வங்கியின் முன்பு பெருமளவில் திரண்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், வங்கி வாடிக்கையாளர்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் இந்தியன் வங்கி அதிகாரிகள் மற்றும் காவல் துறை விளக்கம் அளித்துள்ளனர். அதில், “வங்கி சர்வரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே வாடிக்கையாளர்களின் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டதாகக் தெரிவிக்கின்றனர். கணக்கிலிருந்து கழிக்கப்பட்ட பணம் அனைத்தும் நாளைக்குள் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கிலேயே மீண்டும் பாதுகாப்பாக வரவு வைக்கப்படும்” என உறுதியளித்துள்ளனர்.

மேலும், “அவ்வாறு நாளைக்குள் பணம் மீண்டும் கணக்கிற்கு வராத பட்சத்தில், வாடிக்கையாளர்கள் வரும் திங்கட்கிழமை என்று வங்கிக்கு நேரில் வந்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம்” எனவும் வங்கி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

வங்கி நிர்வாகம் விளக்கமளித்த போதிலும், இந்தத் திடீர் குளறுபடி பொதுமக்களிடையே பெரும் பதற்றத்தையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. தங்கள் உழைப்புப் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையில் வங்கியில் சேமிக்கும் மக்களுக்கு, இது போன்ற தொழில்நுட்பத் தவறுகள் பெரும் பீதியை உண்டாக்கியுள்ளன.

தற்போது வங்கியின் இணையதளச் சேவை மற்றும் UPI (யுபிஐ) ஆப்ஸ்கள் மூலமாகவும், அருகிலுள்ள ஏடிஎம் (ATM) மையங்களுக்குச் சென்றும் பொதுமக்கள் தங்கள் கணக்கில் உள்ள மீதித் தொகையைத் தொடர்ந்து சரிபார்த்து வருகின்றனர். வங்கி நிர்வாகம் உறுதியளித்தபடி நாளை பணம் மீண்டும் வருமா என்ற எதிர்பார்ப்பில் வாடிக்கையாளர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

The post கோட்டக்குப்பம் இந்தியன் வங்கியில் தொழில்நுட்பக் கோளாறு: வாடிக்கையாளர் கணக்குகளில் இருந்து பணம் குறைந்ததால் பரபரப்பு appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/9765/feed/ 0
கோட்டக்குப்பத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு: மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு https://www.kottakuppamtimes.com/9751/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%2595%25e0%25af%258d https://www.kottakuppamtimes.com/9751/#respond Thu, 23 Apr 2026 03:47:59 +0000 https://www.kottakuppamtimes.com/?p=9751 கோட்டக்குப்பத்தில் இன்று(23/04/2026) காலை முதல் வாக்குப்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக மிகுந்த ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வருகை தருகின்றனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதிலிருந்தே, பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக, இளம் வாக்காளர்கள் மற்றும் பெண்கள் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றனர். வெயிலின் தாக்கம் அதிகரிப்பதற்கு முன்பே வாக்களித்துவிட வேண்டும் என்ற...

The post கோட்டக்குப்பத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு: மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பத்தில் இன்று(23/04/2026) காலை முதல் வாக்குப்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக மிகுந்த ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வருகை தருகின்றனர்.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதிலிருந்தே, பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக, இளம் வாக்காளர்கள் மற்றும் பெண்கள் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றனர். வெயிலின் தாக்கம் அதிகரிப்பதற்கு முன்பே வாக்களித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் கூட்டம் அலைமோதுகிறது.

வாக்குச்சாவடி மையங்களுக்குள் கைபேசிகள் எடுத்துச் செல்ல அனுமதி இல்லாததால், வாக்காளர்கள் மையத்தின் வெளியே அமைக்கப்பட்டுள்ள டோக்கன் கவுண்டர்களில் தங்கள் கைபேசிகளை ஒப்படைத்துவிட்டு, டோக்கன்களைப் பெற்றுக்கொண்டு வாக்களிக்கச் சென்றனர். இந்த நடைமுறை தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி சீராகப் பின்பற்றப்பட்டது.

நகரின் முக்கிய வாக்குச்சாவடிகளில் அவ்வப்போது கூட்டம் அதிகரித்தாலும், அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்களின் சிறப்பான ஏற்பாடுகளால் வாக்குப்பதிவு அமைதியாகவும், சுமுகமாகவும் நடைபெற்று வருகிறது. அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

The post கோட்டக்குப்பத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு: மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/9751/feed/ 0
தக்பீர் முழக்கத்துடன் களைகட்டிய ஈகைத் திருநாள்: கோட்டக்குப்பத்தில் ஆரத்தழுவி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்ட சகோதரர்கள்!  https://www.kottakuppamtimes.com/9716/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2580%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25b4%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%259f%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%25b3 https://www.kottakuppamtimes.com/9716/#respond Sat, 21 Mar 2026 06:21:42 +0000 https://www.kottakuppamtimes.com/?p=9716 கோட்டக்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஈகைத் திருநாள் (நோன்பு பெருநாள்) இன்று (21/03/2026) மிகுந்த உற்சாகத்துடனும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஈத்கா மைதானத்தில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் திரளான மக்கள் பங்கேற்றனர். முன்னதாக, பெருநாள் தொழுகைக்காக இன்று காலை 6:45 மணியளவில் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசல் அருகே ஜமாத்தார்கள் அனைவரும் ஒன்றுகூடினர். அங்கிருந்து அவர்கள் தக்பீர் முழக்கங்களை எழுப்பியவாறு, ஈத்கா மைதானத்தை நோக்கிச் சென்றனர். இதில், மௌலவி ஹாபிழ் S.A....

The post தக்பீர் முழக்கத்துடன் களைகட்டிய ஈகைத் திருநாள்: கோட்டக்குப்பத்தில் ஆரத்தழுவி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்ட சகோதரர்கள்!  appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஈகைத் திருநாள் (நோன்பு பெருநாள்) இன்று (21/03/2026) மிகுந்த உற்சாகத்துடனும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஈத்கா மைதானத்தில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் திரளான மக்கள் பங்கேற்றனர்.

முன்னதாக, பெருநாள் தொழுகைக்காக இன்று காலை 6:45 மணியளவில் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசல் அருகே ஜமாத்தார்கள் அனைவரும் ஒன்றுகூடினர். அங்கிருந்து அவர்கள் தக்பீர் முழக்கங்களை எழுப்பியவாறு, ஈத்கா மைதானத்தை நோக்கிச் சென்றனர்.

இதில், மௌலவி ஹாபிழ் S.A. முஹம்மது புஹாரி அன்வாரி அவர்கள் கலந்துகொண்டு சிறப்பு சொற்பொழிவு (பயான்) ஆற்றினார். தனது உரையில், “நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுத்தல், தீய பழக்கங்களில் இருந்து விலகி இருத்தல் மற்றும் இளைஞர்களை நல்வழிப்படுத்துதல்” உள்ளிட்ட கருத்துகளை அவர் ஆழமாக வலியுறுத்திப் பேசினார். தொடர்ந்து, காலை 7:30 மணிக்கு ஈத்கா மைதானத்தில் சிறப்புத் தொழுகை நடைப்பெற்றது.

அதனைத் தொடர்ந்து நோன்பு பெருநாள் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. தொழுகைக்குப் பின்னர், உலக அமைதி நிலவவும், அனைத்து மக்களின் நல்வாழ்வுக்காகவும், சமுதாயத்தில் மத நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை ஓங்கவும் வேண்டி சிறப்பு துஆ (பிரார்த்தனை) செய்யப்பட்டது.

தொழுகை நிறைவடைந்ததும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி, தங்களின் ஈகைத் திருநாள் வாழ்த்துகளை மிகுந்த மகிழ்ச்சியுடன் பரிமாறிக் கொண்டனர்.

The post தக்பீர் முழக்கத்துடன் களைகட்டிய ஈகைத் திருநாள்: கோட்டக்குப்பத்தில் ஆரத்தழுவி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்ட சகோதரர்கள்!  appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/9716/feed/ 0
சவுதி அரேபியாவில் கோட்டக்குப்பம் மக்கள் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்! https://www.kottakuppamtimes.com/9710/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259a%25e0%25ae%25b5%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25bf-%25e0%25ae%2585%25e0%25ae%25b0%25e0%25af%2587%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595 https://www.kottakuppamtimes.com/9710/#respond Fri, 20 Mar 2026 08:39:27 +0000 https://www.kottakuppamtimes.com/?p=9710 சவுதி அரேபியாவில் வசிக்கும் கோட்டக்குப்பம் நகர மக்கள், இன்று நோன்பு பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். 

The post சவுதி அரேபியாவில் கோட்டக்குப்பம் மக்கள் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்! appeared first on Kottakuppam Times.]]>
சவுதி அரேபியாவில் வசிக்கும் கோட்டக்குப்பம் நகர மக்கள், இன்று நோன்பு பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். 

The post சவுதி அரேபியாவில் கோட்டக்குப்பம் மக்கள் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்! appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/9710/feed/ 0
அபுதாபி & கத்தார் வாழ் கோட்டக்குப்பத்தினர் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்! https://www.kottakuppamtimes.com/9703/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%25b4%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa-3 https://www.kottakuppamtimes.com/9703/#respond Fri, 20 Mar 2026 08:26:49 +0000 https://www.kottakuppamtimes.com/?p=9703 அபுதாபி & கத்தார் நாட்டில் வசிக்கும் கோட்டக்குப்பம் நகர மக்கள், இன்று நோன்பு பெருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். அதிகாலையில் பள்ளிவாசல்களில் நடைபெற்ற பெருநாள் சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற அவர்கள், தொழுகைக்குப் பின் ஒருவரையொருவர் சந்தித்து வாழ்த்துக்களை பரிமாறியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

The post அபுதாபி & கத்தார் வாழ் கோட்டக்குப்பத்தினர் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்! appeared first on Kottakuppam Times.]]>
அபுதாபி & கத்தார் நாட்டில் வசிக்கும் கோட்டக்குப்பம் நகர மக்கள், இன்று நோன்பு பெருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். அதிகாலையில் பள்ளிவாசல்களில் நடைபெற்ற பெருநாள் சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற அவர்கள், தொழுகைக்குப் பின் ஒருவரையொருவர் சந்தித்து வாழ்த்துக்களை பரிமாறியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

The post அபுதாபி & கத்தார் வாழ் கோட்டக்குப்பத்தினர் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்! appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/9703/feed/ 0
குவைத்தில் கோட்டக்குப்பம் மக்கள் உற்சாக பெருநாள் கொண்டாட்டம்! https://www.kottakuppamtimes.com/9683/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25b5%25e0%25af%2588%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa https://www.kottakuppamtimes.com/9683/#respond Fri, 20 Mar 2026 07:26:20 +0000 https://www.kottakuppamtimes.com/?p=9683 குவைத் நாட்டில் வசித்து வரும் கோட்டக்குப்பம் நகர மக்கள், இன்று(20/03/2026) நோன்பு பெருநாளை வெகு விமரிசையாகவும், உற்சாகத்துடனும் கொண்டாடினர். பெருநாளை முன்னிட்டு, குவைத்தில் உள்ள பல்வேறு பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் கோட்டக்குப்பம் வாசிகள் திரளாகக் கலந்துகொண்டனர். தொழுகை நிறைவடைந்த பின்னர், அவர்கள் ஒருவரையொருவர் ஆரத் தழுவி, ‘ஈத் முபாரக்’ கூறி, தங்களது பெருநாள் வாழ்த்துக்களைப் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டனர்.

The post குவைத்தில் கோட்டக்குப்பம் மக்கள் உற்சாக பெருநாள் கொண்டாட்டம்! appeared first on Kottakuppam Times.]]>
குவைத் நாட்டில் வசித்து வரும் கோட்டக்குப்பம் நகர மக்கள், இன்று(20/03/2026) நோன்பு பெருநாளை வெகு விமரிசையாகவும், உற்சாகத்துடனும் கொண்டாடினர்.

பெருநாளை முன்னிட்டு, குவைத்தில் உள்ள பல்வேறு பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் கோட்டக்குப்பம் வாசிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.

தொழுகை நிறைவடைந்த பின்னர், அவர்கள் ஒருவரையொருவர் ஆரத் தழுவி, ‘ஈத் முபாரக்’ கூறி, தங்களது பெருநாள் வாழ்த்துக்களைப் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டனர்.

The post குவைத்தில் கோட்டக்குப்பம் மக்கள் உற்சாக பெருநாள் கொண்டாட்டம்! appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/9683/feed/ 0
ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா கமேனி படுகொலை – அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக கோட்டக்குப்பத்தில் த.மு.மு.க சார்பில் மெழுகுவர்த்தி ஏந்திய ஆர்ப்பாட்டம்! https://www.kottakuppamtimes.com/9673/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2588%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%2589%25e0%25ae%25af%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25ae%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f-%25e0%25ae%25a4%25e0%25ae%25b2%25e0%25af%2588%25e0%25ae%25b5%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25af https://www.kottakuppamtimes.com/9673/#respond Sun, 01 Mar 2026 18:40:30 +0000 https://www.kottakuppamtimes.com/?p=9673 ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியக் கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலையும், அந்நாட்டின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா கமேனி படுகொலை செய்யப்பட்டதையும் கண்டித்து, கோட்டக்குப்பத்தில் இன்று இரவு உணர்ச்சிப்பூர்வமான அமைதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் இணைந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தின. இந்த பயங்கரவாதத் தாக்குதலில் ஈரானின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா கமேனி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பலரும் கொல்லப்பட்டனர். இந்தத்...

The post ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா கமேனி படுகொலை – அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக கோட்டக்குப்பத்தில் த.மு.மு.க சார்பில் மெழுகுவர்த்தி ஏந்திய ஆர்ப்பாட்டம்! appeared first on Kottakuppam Times.]]>
ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியக் கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலையும், அந்நாட்டின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா கமேனி படுகொலை செய்யப்பட்டதையும் கண்டித்து, கோட்டக்குப்பத்தில் இன்று இரவு உணர்ச்சிப்பூர்வமான அமைதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் இணைந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தின. இந்த பயங்கரவாதத் தாக்குதலில் ஈரானின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா கமேனி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பலரும் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலைக் கண்டித்து இந்தியா முழுவதும் இன்று (மார்ச் 1) பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன. காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை பல்வேறு இடங்களில் ஈரானுக்கு ஆதரவாகவும், மறைந்த மதகுரு அயதுல்லா கமேனிக்கு இரங்கல் தெரிவித்தும் ஊர்வலங்கள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாகவே கோட்டக்குப்பத்திலும் இந்த அறப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசல் முன்பாக இன்று இரவு தராவிஹ் தொழுகை முடிந்தவுடன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (த.மு.மு.க) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தமுமுக நகரத் தலைவர் அபுதாஹிர் தலைமை தாங்கினார். பங்கேற்ற ஊர் ஜமாத்தார்கள் மற்றும் நிர்வாகிகள் கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஏகாதிபத்தியப் போக்கைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அஸ்கர் அலி, மற்றும் நகர நிர்வாகிகள் அஷ்ரப் அலி, ஜரீத், ஏகே பஷீர் அஹமது, டாக்டர் தாரிப் அலி, ஆஸ் (எ) ஆபிதீன், நூருல் அமீன், ஊர் ஜமாத்தார்கள் மற்றும் பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டு தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர்.

The post ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா கமேனி படுகொலை – அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக கோட்டக்குப்பத்தில் த.மு.மு.க சார்பில் மெழுகுவர்த்தி ஏந்திய ஆர்ப்பாட்டம்! appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/9673/feed/ 0
பி.எஃப், இ.எஸ்.ஐ முறைகேடு புகார்: கோட்டக்குப்பத்தில் தூய்மைப் பணியாளர்கள் தொடர் வேலைநிறுத்தம் – சுகாதார சீர்கேடு அபாயம்! https://www.kottakuppamtimes.com/9665/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25ae%25bf-%25e0%25ae%258e%25e0%25ae%2583%25e0%25ae%25aa%25e0%25af%258d-%25e0%25ae%2587-%25e0%25ae%258e%25e0%25ae%25b8%25e0%25af%258d-%25e0%25ae%2590-%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25b1%25e0%25af%2588%25e0%25ae%2595%25e0%25af%2587%25e0%25ae%259f%25e0%25af%2581-%25e0%25ae%25aa%25e0%25af%2581 https://www.kottakuppamtimes.com/9665/#respond Tue, 17 Feb 2026 03:10:12 +0000 https://www.kottakuppamtimes.com/?p=9665 கோட்டக்குப்பம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள், தங்களின் வாழ்வாதார உரிமைகளை வலியுறுத்தி நேற்று(16/02/2026) முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நகராட்சிப் பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. தூய்மைப் பணியாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் பி.எஃப் (PF) மற்றும் இ.எஸ்.ஐ (ESI) தொகையை, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் முறையாகச் செலுத்தவில்லை என்று புகார் எழுந்துள்ளது. தங்களின் உழைப்பிற்கான பலன் முறையாகச் சென்றடைய...

The post பி.எஃப், இ.எஸ்.ஐ முறைகேடு புகார்: கோட்டக்குப்பத்தில் தூய்மைப் பணியாளர்கள் தொடர் வேலைநிறுத்தம் – சுகாதார சீர்கேடு அபாயம்! appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள், தங்களின் வாழ்வாதார உரிமைகளை வலியுறுத்தி நேற்று(16/02/2026) முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நகராட்சிப் பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

தூய்மைப் பணியாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் பி.எஃப் (PF) மற்றும் இ.எஸ்.ஐ (ESI) தொகையை, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் முறையாகச் செலுத்தவில்லை என்று புகார் எழுந்துள்ளது. தங்களின் உழைப்பிற்கான பலன் முறையாகச் சென்றடைய வேண்டும் என்பதை வலியுறுத்தி, பணியாளர்கள் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால், கோட்டக்குப்பம் நகராட்சியின் பல வார்டுகளில் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, புனித ரமலான் மாதம் தொடங்க உள்ள நிலையில், ஊர் பகுதிகளில் சுகாதாரம் பாதிப்படைவது பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்:

​”தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை. அவர்களின் உழைப்பிற்கான பலன் அவர்களுக்கு முறையாகக் கிடைக்க வேண்டும். வரும் நாட்கள் பண்டிகைக் காலம் என்பதால், நகராட்சி நிர்வாகமும், ஊர் பிரமுகர்களும் இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும். ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, பணியாளர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்,” என வலியுறுத்தியுள்ளனர்.

The post பி.எஃப், இ.எஸ்.ஐ முறைகேடு புகார்: கோட்டக்குப்பத்தில் தூய்மைப் பணியாளர்கள் தொடர் வேலைநிறுத்தம் – சுகாதார சீர்கேடு அபாயம்! appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/9665/feed/ 0