நூற்றாண்டை நோக்கி பயணிக்கும் கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் மற்றும் இஸ்லாமிய அறிவு மையம் சார்பில் 78-வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக புதுவை அரசு மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் கலந்து கொண்டு தேசியக் கொடி ஏற்றி சுதந்திர தின உரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியில் அஞ்சுமன் நிர்வாகிகள், உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், உலமாக்கள், ஆசிரியர்கள், மதரசா மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு, தேசிய கீதம் பாடி, நாட்டின் சுதந்திர போராட்ட வீரர்களை நினைவுகூர்ந்தனர்.