கோட்டக்குப்பம் இஸ்லாமிய பொதுநலச் சங்கம் மற்றும் டாக்டர் எஸ் கே எம் நேச்சுரல் சாய்ஸ் திருச்சி இணைந்து கோட்டக்குப்பம் பெரிய தெரு மஸ்ஜிது-த் தக்வா வளாகத்தில் பெண்களுக்கான மூலிகை நாப்கின் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மூலிகை நாப்கின் தயாரிப்பு ஒரு நாள் பயிலரங்கம் ஞாயிறு(27/08/2023) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது.
இதில் ஃபைசல் அஹமத் மற்றும் ஃபகிமா ஃபைசல் அவர்கள் பயிற்சி வழங்கினார்கள். பேரா. இஸ்மாயில் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். பெண்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்று மூலிகை நாப்கின்களை தயார் செய்தனர். இந்நிகழ்ச்சிக்கு கியூஸ் பெண்கள் தாவா பிரிவு சார்பாக அனைத்து ஏற்பாடுகள் செய்து மதிய உணவு வழங்கப்பட்டது.