May 10, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்.

25 ஆண்டுகளாக சிறையில் வாடும் முஸ்லிம் சிறைவாசிகளை சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் மற்றும் இந்தியா முழுவதும் முஸ்லிம்களின் வணக்க வழிபாடு தலங்களை அபகரிக்கும் நோக்கில் செயல்படும் பாசிச பயங்கரவாதிகளிடம் இருந்து ஜனநாயகத்தை பாதுகாக்க நீதிமன்றங்கள் நீதியின் பக்கம் நின்று நீதி வழங்க வலியுறுத்தி, அகில இந்திய மஜ்லிஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் இன்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் கோட்டக்குப்பம் நகராட்சி எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு A. அஸ்ரப்அலி நகர தலைவர் அவர்கள் தலைமை தாங்கினார் மற்றும் A.R. முகமது அலி, M.Y. பலுலுல்லா, A. கலிலூர் ரஹ்மான், I. முஹமது சலீம், J. முஹமது பஷீர், K.சர்புதீன் , A. ஜாபர் அலி அவர்கள் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு A.R. மஜீத் இன்டர்நேஷனல், H. முஹம்மது இக்பால், பாவாணன், S.A.K. ஹபீப் முஹமது, J. முகம்மது அனஸ், B. அப்துல் காதர், A. லியாகத் அலி, J. சம்சுதீன், இரா மங்கையர் செல்வன், M. முஜிபுர் ரஹமான், M.G. முபாரக், A. அன்சாரி, A.H லியாக்கத் அலி, M. முகமது அப்பாஸ் ஆகியவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

இறுதியாக யாசின் அவர்கள் நன்றியுரை கூறினார்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் காவல் நிலையம் சார்பாக பொதுமக்கள் மற்றும் காவல்துறை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு.

டைம்ஸ் குழு

புதுச்சேரி நேரு வீதியை மிஞ்சும் கோட்டக்குப்பம் காந்தி ரோடு!

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் பரகத் நகர் அல்-மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸா சார்பில் குடியரசு தின விழா நிகழ்ச்சி.

டைம்ஸ் குழு

Leave a Comment