May 10, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

இப்ராஹிம் கார்டன் பகுதியில் இனியாவது குப்பைகள் கொட்டுவது தவிர்க்கப்படுமா? கோட்டக்குப்பம் நகராட்சியின் அதிரடி நடவடிக்கை.

கோட்டக்குப்பம் இப்ராஹிம் கார்டன் தெருமுனையில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது, இது சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கோட்டக்குப்பம் டைம்ஸ் இணையதளம் செய்தி பதிவிட்டது. குறிப்பாக, அதில் தெருமுனையில் LED லைட் பொருத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது, அதன்படி அதன் மறுநாளே LED லைட் அங்கு பொருத்தப்பட்டது.

தற்பொழுது, மேலும் குப்பைகளை கொட்டுவதை தவிர்க்க, கோட்டக்குப்பம் நகராட்சி சார்பாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

அதில் “திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016-ன் படி குப்பைகள் தெரு/சாலையோரம்/கால்வாய் முதலிய இடங்களில் கொட்டுவது தண்டனைக்குரிய குற்றமாகும். குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து தங்கள் இல்லங்களுக்கு வரும் நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். மீறுபவர்கள் மீது மேற்கூறிய சட்டப்பிரிவின் கீழ் அபராதம் விதிக்கப்படும். மேலும் நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறை மூலம் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டகுப்பம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உயர் மின் விளக்கு கம்பங்கள் அப்புறப்படுத்தப்படுகிறது

கோட்டக்குப்பத்தில் நாளை முதல் மாலை 4 மணிக்கெல்லாம் கடைகளை அடைக்க வேண்டும் என உத்தரவு.

கோட்டகுப்பதில் 72-ஆம் ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது!

Leave a Comment