May 10, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பாக சமத்துவ இஃப்தார் நிகழ்ச்சி

கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பாக சமத்துவ இஃப்தார் நிகழ்ச்சி இன்று(17/04/2022) ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில், கோட்டக்குப்பம் ஹாஜி உசேன் தெருவில் அமைத்துள்ள சரவி கிரீன்ஸ் கன்வென்சன் சென்டரில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, சங்கத்தின் உயர்மட்டக்குழு தலைவர் முகமது பாருக் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த, ஜாமிஆ மஸ்ஜித் இமாம் வாஹித் குர்ஆன் வசனம் ஓதினார் மற்றும் மௌலானா பாஜிலுதீன் அவர்கள் இஃப்தார் சிறப்பு பற்றி பயான் செய்தார்கள்.

விழுப்புரம் மாவட்டத்தின் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ராமகிருஷ்ணன் அவர்களும், மாநில தலைமைக் குழு பொறுப்பாளர் பேராசிரியர் ராஜ்குமார் அவர்களும் சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் அன்சர் பாஷா தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சிக்கு வியாபாரிகள், ஊர் முக்கியஸ்தர்கள், உலமாப் பெருமக்கள், நகர் மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் என நிகழ்ச்சியில் சாதி மத வேறுபாடின்றி அனைவரும் கலந்து கொண்டு மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அனைவரும் திரளாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

இறுதியில், இந்த நிகழ்ச்சியை அழகிய முறையில் ஒருங்கிணைத்த சங்கத்தின் செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர்கள், துணைச் செயலாளர்கள் மற்றும் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களுக்கு, விருந்தினர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பத்தில் சராசரி வாக்காளர் எண்ணிக்கையில் வார்டு வரையறை செய்ய வேண்டும்: அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்‌.

டைம்ஸ் குழு

பர்கத் நகர் மெயின் ரோட்டில் சேதமடைந்த மூன்று கழிவுநீர் பாதைகளை சரி செய்த கவுன்சிலர்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பதில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

டைம்ஸ் குழு

Leave a Comment