May 10, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

தந்திராயன்குப்பம் கடற்கரை அலையில் சிக்கி புதுச்சேரி மாணவன் பலி.

கோட்டக்குப்பம் அருகே கடலில் குளித்த பள்ளி மாணவன், அலையில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.புதுச்சேரி, குமரகுருபள்ளம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் மகன் சக்திவேல்,15; இவர், அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு பயில்கிறார்.

இவர், நேற்று மாலை 3.00 மணிக்கு, கோட்டக்குப்பம் அருகேவுள்ள தந்திராயன்குப்பம் கடற்கரையில், தனது உறவினர்கள் விஷ்வா, சந்துரு, அரிஷ்குமார் ஆகியோரோடு குளிக்கசென்றார். திடீரென கடல் அலையில் சிக்கிய சக்திவேலை, அரிஷ்குமார் மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.அவரை பரிசோதித்த செய்த டாக்டர்கள் சக்திவேல் இறந்ததை உறுதிபடுத்தியுள்ளனர். கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

இந்திய அரசியலமைப்பு சட்ட விழிப்புணா்வு சைக்கிள் பயணம்

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் கொரோனா பரவல் தடுப்பு குறித்து செயல் அலுவலர் அவர்களின் காணொளி.

கோட்டக்குப்பம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: இன்றைய(01-02-2022) வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் விவரம்.

டைம்ஸ் குழு

Leave a Comment