கோட்டக்குப்பம் நகராட்சிக்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ம் தேதி நடக்க இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28-ஆம் தேதி தொடங்கியது.
முதல் இரண்டு நாட்கள் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில், மூன்றாவது நாளில் 7 பேரும், 4-வது நாளில் 14 பேரும், 5-வது நாளான நேற்று 43 பேரும் மனுதாக்கல் செய்தனர்.
புதன்கிழமை வரை 64 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், 5-ஆவது நாளான இன்று வியாழக்கிழமை (03-02-2022) அதிகபட்சமாக 75 பேர் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதன் விபரங்கள் வருமாறு,
சுயேட்சை – 33
திராவிட முன்னேற்ற கழகம் – 09
அ.இ. அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் – 17
காங்கிரஸ் கட்சி – 2
பாட்டாளி மக்கள் கட்சி – 3
மக்கள் நீதி மையம் – 3
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) – 1
நாம் தமிழர் கட்சி – 3
பாரதிய ஜனதா கட்சி – 4
இன்று மட்டும் 75 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர், இவா்களுடன் சோ்த்து இதுவரை கோட்டக்குப்பம் நகராட்சி முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்தவா்களின் எண்ணிக்கை 139-ஆக உயர்ந்துள்ளது.
மேலும், வேட்புமனு தாக்கல் செய்ய நாளை (04/02/2022) கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.