26.2 C
கோட்டக்குப்பம்
December 16, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்.

கோட்டக்குப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு கூட்டம், கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் திரு. ராபின்சன் அவர்கள் தலைமையில் இன்று 03-12-2021, மாலை 5 மணியளவில் காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆட்டோ ஓட்டுனர்கள் திரளாக பங்கேற்றனர்.

மேலும், இந்தக் கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

  1. ஆட்டோ ஓட்டுனர்கள் அனைவரும் சுத்தமான சீருடையில் இருக்க வேண்டும்.
  2. தான் ஓட்டும் ஆட்டோவின் RC-புக், இன்சூரன்ஸ், பர்மிட் ஆகியவைகள்‌ கட்டாயம்‌ கையில்‌ வைத்திருக்கவேண்டும்‌.
  3. ஆட்டோ ஓட்டும்‌ நபர்‌ தனது ஒட்டுநர்‌ உரிமத்தை கையில்‌ வைத்திருக்கவேண்டும்‌.
  4. பொதுமக்களை சவாரிக்கு ஏற்றும்போதும்‌, இறக்கும்போதும்‌ அவர்களிடம்‌ கனிவாக பேசவேண்டும்‌.
  5. பயணிகள்‌ சொல்லும்‌ இடத்தில்‌ நிறுத்தாமல்‌, வேறு இடத்தில்‌ நிறுத்தி அவர்களிடம்‌ வாக்குவாதத்தில்‌ ஈடுபடுதல்‌ கூடாது.
  6. ஒர்‌ இடத்தில்‌ இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும்போது அதற்குண்டான தொகையை விடுத்து அதிகப்படியான தொகையை பயணிகளிடம்‌ வசூல்‌ செய்யக்கூடாது.
  7. ஆட்டோவை ஆட்டோ ஸ்டாண்டுகளில்‌ நிறுத்தும்போது வரிசையாக நிறுத்தி வைக்கவேண்டும்‌.
  8. சந்தேகமான நபர்கள்‌ யாரேனும்‌ தங்களது ஆட்டோவில்‌ பயணம்‌ செய்தாலோ அல்லது அடிக்கடி சந்தேகப்படும்படியான இடத்திற்கு அவர்கள்‌ சென்று வந்தாலோ அருகில்‌ உள்ள காவல்‌ நிலையத்திற்கு தகவல்‌ தெரிவிக்கவேண்டும்‌.
  9. ஆட்டோ ஓட்டிச்செல்லும்போது பீடி, சிகரெட்‌ அடித்தல்‌, ஹான்ஸ்‌, பான்பராக்‌ வஸ்துகளை உபயோகப்படுத்துதல்‌ கூடாது.
  10. ஆட்டோவை ஓட்டிச்செல்லும்போதும்‌, ஓரமாக நிறுத்தும்போதும்‌ போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல்‌ பார்த்துக்கொள்ளவேண்டும்‌.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

அவசர மருத்துவ முதலுதவி பெற கோட்டக்குப்பம் KVR சுகாதார மையத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

கோட்டக்குப்பத்தில் இன்று கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி: நமதூர் மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்

டைம்ஸ் குழு

கலாம் மறைவையொட்டி : கோட்டக்குப்பத்தில் இன்று கடையடைப்பு!

Leave a Comment