உலகம் முழுவதும் பரவி வரும் கொரானா நோய்த்தொற்று தமிழகத்திலும் தற்போது வேகமாக பரவி வருகிறது.
அதனை தடுக்க அரசு பலவிதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவர்களுடன் தன்னார்வலர்களும் தங்களால் இயன்ற உதவிகளையும் செய்து வருகிறார்கள்.
நோய் எதிர்ப்பு சக்தி சரியானா அளவில் இருக்கும் நபர்களுக்கு இந்த கொரோனா தாக்கினாலும் அதிலிருந்து மீண்டு வரமுடியும் என்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள நபர்களை கொரானா போன்ற கொள்ளை நோய்கள் தாக்கினால் பாதிப்பு ஏற்படும் என்றும் மருத்துவர்கள் கூறிவருகிறார்கள்.
இந்திய ஆயுஷ் அமைச்சகம் நோய்த் தொற்றைத் தடுக்க உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய, “ஆர்சனிக் ஆல்பம் 30” என்கிற ஹோமியோபதி மருந்தை உட்கொள்ளலாம் என்று பரிந்துரை செய்தது.
அதன்படி தமிழக அரசும் அந்த மருந்தை அனைவரும் உட்கொள்ளலாம் என்று அறிவிப்பு செய்துள்ளது.
நோய்த்தொற்று எண்ணிக்கை இல்லாமலிருந்த நமது பகுதியில் தற்போது ஒருசில நோய் தொற்று இருப்பதை காணமுடிகிறது. இதிலிருந்து மக்களை காக்க மத்திய அரசு அறிவித்துள்ள இந்த ஹோமியோபதி மருந்து அனைவரும் எடுத்துக்கொள்ள அறிவுறுத்துங்கள் என்றும். அதை நீங்களே வழங்குங்கள் என்றும் நமது கோட்டகுப்பம் டிஎஸ்பி அவர்கள் நமக்கு அறிவுறுத்தினார்கள்.
அதை ஏற்று கோட்டக்குப்பம் பகுதியிலும் நோய்த்தொற்று பரவாமல் இருக்க மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கூடிய ஹோமியோபதி மருந்து வழங்கும் நிகழ்ச்சி நடத்த உள்ளோம் என்பதை கோட்டகுப்பம் செயல் அலுவலர் அவர்களுக்கும் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் தெரிவித்த நிலையில் அவர்களும் இதை தாராளமாக செய்யுங்கள் என்று ஒப்புதல் அளித்தனர்.
அதன்படி இன்று 04-07-2020 சனிக்கிழமை, காலை 10 மணி அளவில் முதற்கட்டமாக 500 குடும்பங்களுக்கு, அதாவது சுமார் 4000 நபர்கள் பயன்படுத்தக்கூடிய அளவிற்கு இன்று அந்த ஆர்சனிக் ஆல்பம் 30 என்கிற மருந்து வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நிகழ்ச்சி கோட்டக்குப்பம் ஜாமியா மஸ்ஜித் திடலில், காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்நிகழ்ச்சியை கோட்டகுப்பம் செயல் அலுவலர் அவர்களும் சுகாதாரத் துறை ஆய்வாளர் ரவி அவர்களும் கலந்து கொண்டு இந்த மருந்தின் பலன் குறித்து மக்களுக்கு எடுத்து வைத்தனர்.
இந்த மருந்தை அனைவரும் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.
அதேபோன்று நோய் பரவலை தடுக்க என்னென்ன செய்ய வேண்டும் என்ற ஆலோசனைகளையும் வழங்கினர். மேலும் அவர்கள் இந்த மருந்து வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு வழங்கினர்.
அதனைத்தொடர்ந்து நமது ஜாமியா மஸ்ஜித் முத்தவல்லி பாருக் அவர்களும், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் அப்துல் ஹமீது அவர்களும், முன்னாள் முத்தவல்லிகள் இஹ்சானுல்லா மற்றும் பகுருதீன் ஜமாலி அவர்களும், பட்டினத்தார் தெரு ரஹ்மானியா பள்ளி செயலாளர் வி.ஆர் இப்ரஹிம் அவர்களும், புஸ்தனியா பள்ளி முத்தவல்லி அப்துல் ஹக்கீம் அவர்களும், ரஹ்மத் நகர் முத்தவல்லி சாகுல் ஹமீது அவர்களும், பரக்கத் நகர் இணை முத்தவல்லி பிலால் முஹம்மத் அவர்களும் கலந்து கொண்டு இந்த மருந்து உட்கொள்ள வேண்டிய அவசியம் குறித்து மக்களுக்கு எடுத்துரைத்தனர்.
அதன்படி மருந்து அனைவருக்கும் வழங்கப்பட்டது. இந்த மருந்து வழங்கப்படும் தகவலறிந்து பொதுமக்கள் அனைவரும் ஆர்வமாக வந்து தங்களின் விபரங்களை தெரிவித்து மருந்துகளை வாங்கி சென்றனர். நாம் முதல்கட்டமாக 500 குடும்பங்களுக்கு, அதாவது 4000 நபர்கள் உட்கொள்ளக் கூடிய அளவிற்கு மருந்துகளை வைத்திருந்தனர்.
அதிகப்படியான மக்கள் வந்த காரணத்தினால், இரண்டாம் கட்ட முகாமில் வழங்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டு, மருந்தை கிடைக்கப்பெறாதவர்களுக்கு பின்னர் வழங்கப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியினை மிஸ்வாக் குழுவினர் – மிஸ்வாக்கின் செயலாளர் முகமது ரபி, மிஸ்வாக் பொருளாளர் ஆசாத் அலி, மிஸ்வாக் துணைத்தலைவர் சர்புதீன், செயற்குழு உறுப்பினர் முகமது அலி மற்றும் காலித் இவர்களுடன் மீடியா சாதிக் அவர்களும் ஏற்பாடு செய்திருந்தனர். மிஸ்வாக் செயற்குழு உறுப்பினர்கள் சித்தீக் மரைக்காயர் ஏ.ஆர் சாதிக் பாஷா ஆகியோர் கலந்துக்கொண்டு பயனாளிகளுக்கு மருந்துகளை வழங்கினார்கள்.
இறுதியாக இந்த நிகழ்ச்சி வந்த அனைவருக்கும் மிஸ்வாக்கின் செய்தித்தொடர்பாளர் அமீர் பாஷா அவர்கள் நன்றியுரை கூறினார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் இது மிக முக்கியமான நிகழ்ச்சி இதுபோன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று மிஸ்வாக் குழுவிற்கு அறிவுரை கூறினார்கள்.
இந்த மருந்தினை வாங்க ஆர்வம் காட்டிய மக்களுக்கு மிஸ்வாக் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
நிகழ்ச்சியில் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றி மருந்துகளை வாங்கிக் கொள்ள வேண்டும் என்று மிஸ்வாக் குழுவினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்திய நிலையில் மக்கள் அனைவரும் சூழ்நிலையை கருதி தங்களை தாங்களே தயார் படுத்தி சமூக இடைவெளியுடன் மருந்துகளை வாங்கிச் சென்றது மிகவும் சிறப்புக்குரியதாகும்.

























