கோட்டக்குப்பம் அஞ்சுமன் கல்விக் கழகம் சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான பயிற்சிப் பட்டறை நேற்று(06/07/2025) காலை 9:30 மணியளவில் கோட்டக்குப்பம் மிராக்கிள் பள்ளியில் நடைபெற்றது.
இந்தப் பயிற்சிப் பட்டறையில், TNPSC குரூப் 4 பாடத்திட்டத்தின் அடிப்படையில் மாணவர்களுக்கு நான்கு அமர்வுகளாகப் பிரிக்கப்பட்டு கற்பிக்கப்பட்டன. மாணவ மாணவிகள் இந்தப் பயிற்சி வகுப்பில் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று, தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கு விளக்கங்களைப் பெற்று தெளிவுபடுத்திக்கொண்டனர்.
TNPSC குரூப் 4 தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இந்தப் பயிற்சி பெரிதும் உதவியாக இருந்தது என மாணவ மாணவிகள் பட்டறை முடிவில் தெரிவித்தனர்.







