May 9, 2025
Kottakuppam Times
Uncategorized

ஐயூப் கார்டன் பகுதியில் சாக்கடை பள்ளத்தால் விபத்து அபாயம்.

சென்ற பெஞ்சல் புயலின் போது ஐயூப் கார்டன் பகுதியில், மழை நீர் வடிந்து செல்வதற்காக சாக்கடையின் பக்கவாட்டில் உடைக்கப்பட்டது. மழை நீர் வடிந்த பிறகு, சுமார் இரண்டு மாதங்கள் ஆகியும், உடைக்கப்பட்ட சாக்கடை பக்கவாட்டில் இதுவரை சரி செய்யப்படவில்லை. இதனால் அந்த இடத்தில் ஒரு பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இந்த பள்ளத்தால் போக்குவரத்திற்கு மிகவும் இடையூறாக உள்ளது. நேற்று, ஒரு கார் அந்த பள்ளத்தில் சிக்கிக் கொண்டது. மேலும், எம்.ஜி. ரோட்டில் இருந்து இடது புறம் திரும்பும் போது மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் கவிழும் அபாயமும் உள்ளது. பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை சென்று வரும் பாதையாக இருப்பதால், அப்பகுதி மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.

இது சம்பந்தமாக அப்பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். அடுத்து ஏதேனும் விபரீதம் நடக்கும் முன், உள்ளூர் நிர்வாகம் இந்த பிரச்சினைக்கு விரைவான தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பதில் 14-வது வார்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வீடு வீடாக சென்று விநியோகம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பதில் நாளை 15-வது மெகா தடுப்பூசி முகாம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் நகராட்சி சார்பில் மகளிர் தின விழா

டைம்ஸ் குழு

Leave a Comment