கடந்த வாரம், கோட்டக்குப்பம் கிளை நூலகம் மற்றும் VAO அலுவலகக் கட்டிடங்கள் சிதலமடைந்துள்ளதைக் கண்டித்து, விழுப்புரம் மாவட்ட எச்.ஆர்.ஓ சர்வதேச அமைப்பு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தின் எதிரொலியாக, இன்று(08/10/2024) பிற்பகல் விழுப்புரம் மாவட்ட நூலக அதிகாரி மற்றும் கிளை நூலக மேலாளர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் முடிவில், கோட்டக்குப்பம் எம்.ஜி. ரோடு ஈத்கா பள்ளிவாசல் பின்புறம் புதிய இடமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில், நூலகம் இடமாற்றம் செய்யப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
இந்த நிகழ்வில், விழுப்புரம் மாவட்ட எச்.ஆர்.ஓ சர்வதேச அமைப்பின் தலைவர் நா. சுப்பரமணியன், செயலாளர் S. குமார், தொகுதி தலைவர் பாஸ்கரன், இளைஞரணி தலைவர் அ. அப்துல் ஹக்கீம் மற்றும் பிற பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.