26.2 C
கோட்டக்குப்பம்
December 16, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் கலவரத்தில் பெண்களுக்கு பாலியல் சித்ரவதை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், அதை கட்டுப்படுத்த தவறியதாக கூறி அந்த மாநில பா.ஜனதா அரசை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தியும், வானூர் சட்டமன்ற தொகுதி சார்பாக நேற்று மாலை மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், கோட்டகுப்பம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாகவும், வானூர் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாகவும், கண்டமங்கலம் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாகவும், இக்கூட்டத்திற்கு வட்டார தலைவர்கள் காசிநாதன் ஏழுமலை ராதா மற்றும் கோட்டகுப்பம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் பாரூக் ஆகியோர் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சிறுவை டி. ராமமூர்த்தி கலந்து கொண்டார். மாநிலச் செயலாளர் பாபு சத்தியமூர்த்தி, மாவட்ட விவசாய தலைவர் அப்துல் ஹக்கீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோட்டகுப்பம் நகர மன்ற உறுப்பினர் சாதிக் பாஷா, சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் முபாரக், கோட்டகுப்பம் நகர துணை தலைவர் ரஹ்மத்துல்லாஹ், பொதுச் செயலாளர் சாகுல், நஜீர் பாஷா, இளைஞர் காங்கிரஸ் தலைவர் இஸ்மத் அலி, ஓ பி சி நகர தலைவர் எம் டி அன்சாரி, வானூர் வட்டார துணைத் தலைவர் அகமதுல்லா, நகர செயலாளர் அகமதுல்லாஹ், சுந்தரமூர்த்தி, சிறுபான்மை பிரிவு தலைவர் ஆதார் பாஷா , இளைஞர் காங்கிரஸ் நகர செயலாளர் அக்பர், பைசுர் ரஹ்மான், செயற்குழு உறுப்பினர் முகமது இக்பால் ஆகியோர் கலந்துகொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

தமுமுக – மமக சார்பில் 115 குடும்பங்களுக்கு ரமலான் அன்பளிப்பு ஃபித்ரா உணவுப்பொருட்கள் வினியோகம்.

டைம்ஸ் குழு

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநாடு

கோட்டக்குப்பத்தில் விபரம் தெரியாத அதிகாரிகள் மனு தாக்கல்; சந்தேகம் கேட்க வந்தவர்கள் ஏமாற்றம்.

டைம்ஸ் குழு

Leave a Comment