28.7 C
கோட்டக்குப்பம்
May 10, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் த.மு.மு.க. இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பில் மகளிருக்கான மார்க்க சொற்பொழிவு பொதுக்கூட்டம்.

த.மு.மு.க. இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பில் மகளிர்க்கான மார்க்க சொற்பொழிவு பொதுக்கூட்டம், கோட்டக்குப்பம் ஷாதி மஹால் எதிரில் தைக்கால் திடலில் 12/02/2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணி அளவில் நடைபெற்றது.

கோட்டக்குப்பம் நகர செயலாளர் A.சாபுன்னிசா அவர்கள் தலைமை தாங்கினார். A. உனிசா பாத்திமா இறைவசனம் ஓதி துவக்கி வைத்தார்.

ஆயிஷா அப்னான் கிராஅத் தமிழாக்க விளக்கம் அளித்தார். ஷாகிதா பானு TMMP நகர துணை செயலாளர் வரவேற்புரை வழங்கினார்.

நிகழ்ச்சியில், பாத்திமா சபரிமாலா பங்கேற்று பெண்ணே உன் நோக்கம் என்ன என்ற தலைப்பிலும், ஜான் ராணி மாநில பொருளாளர் தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை சஹாபா பெண்களின் தியாகமும் இன்றைய பெண்களின் நிலைமையும் என்ற தலைப்பில், ஜுமானா தஹ்சீன் கல்வி என்ற தலைப்பிலும், ஃபிர்தோஸ்ந நிஷாத் (முபல்லிகா) ஈமான் ஆகிய தலைப்புகளில் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.

நகர துனை செயலாளர் அ. நுருன்னிசா நன்றியுரையாற்றினார்..

தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை நிர்வாகிகள் A.பரக்கதன்னிசா துணை செயலாளர்,
ஜெய்னுல் அரேபியா, நசீரா பானு, ஹாஜிரா பேகம், தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை கோட்டக்குப்பம் நகர (TMMP) நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த மகளிர்க்கான மார்க்க சொற்பொழிவு பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான
பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பத்தில் கொரானா கண்டறிய பட்டவர்களில் பலர் சிகிச்சை முடித்து நலமுடன் வீடு திரும்பினார்.

கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் சார்பாக டென்ட் வழங்கப்பட்டது.

கோட்டக்குப்பம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் ஜும்மா தொழுகை விளக்க பயிற்சி

Leave a Comment