28.7 C
கோட்டக்குப்பம்
May 10, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் வெளுத்து வாங்கும் மழை: தயார் நிலையில் மீட்பு குழு.

கோட்டக்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா் மழை யால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இனி வரும் நாட்களிலும் கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்காக விழுப்புரம் மாவட்டம் முழுவதும் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் 1,500 போலீசார், தேவையான மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். இவர்கள், மழை வெள்ளத்தினால் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளை கண்டறிந்து அப்பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் அவசர கால மீட்பு பணிக்கு தேவையான ரப்பர் படகுகள், டயர் டியூப்கள், கயிறு, பொக்லைன் எந்திரம், ஜெனரேட்டர், மரம் வெட்டும் எந்திரங்கள், மண்வெட்டி, அரிவாள் உள்ளிட்ட பல்வேறு மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.

மேலும் மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதிகளான கோட்டக்குப்பம், பொம்மையார்பாளையம், நடுக்குப்பம், ஆரோவில், மரக்காணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தனித்தனி குழுக்களாக முகாமிட்டு தங்கியுள்ளனர். அதுமட்டுமின்றி மழையால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ள பகுதிகளை கண்டறிந்து அப்பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் ஜமியத்துல் அன்வார் தீனியாத் மக்தப் மதரஸா 3-ஆம் ஆண்டு விழா

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் 4 இடங்களில் ஹைமாஸ் விளக்கு அமைப்பு.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் தந்திராயன்குப்பத்தில் கழிப்பறை கட்டும் பணி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

டைம்ஸ் குழு

Leave a Comment