நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை அடுத்து, கோட்டக்குப்பத்தில் தொழுகை நடைபெறும் ஈத்கா மைதானம் மற்றும் பெருநாள் பஜார் நடைபெறும் தைக்கால் திடல் ஆகிய பகுதிகளை கோட்டக்குப்பம் நகராட்சி சார்பில் சுத்தம் செய்யப்பட்டது
அந்த இடங்களை நகர் மன்ற தலைவர் எஸ்.எஸ்.ஜெயமூர்த்தி அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி பாரூக், திமுக மாவட்ட பிரதிநிதியும் ஜாமிஆ மஸ்ஜித் செயலாளர் ஹாஜி பஷீர், கோட்டக்குப்பம் நகராட்சி நகர மன்ற உறுப்பினர்கள் ஜாகீர் உசேன், நாசர் அலி, ஃபர்கத் சுல்தானா அனஸ், கோட்டக்குப்பம் நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் சங்கர் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.