May 10, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் 1-ம் எண் ரேஷன் கடையை இரண்டாக பிரித்து பெரிய தெருவில் உள்ள நகராட்சி கடைகளை ஒதுக்க கோரி கவுன்சிலர்கள் மனு.

கோட்டக்குப்பம் 1-ம் எண் ரேஷன் கடையை இரண்டாக பிரித்து, புதியதாக உருவாகும் ரேஷன் கடையை பெரிய தெருவில் இருக்கும் நகராட்சி கடையில் அமைக்க கோரி 16-வது, 17-வது மற்றும் 18-வது வார்டு கவுன்சிலர்கள் கூட்டாக நகர்மன்ற தலைவர் எஸ். எஸ். ஜெயமூர்த்தி அவர்களிடம் மனு அளித்துள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது,

“கோட்டக்குப்பம்‌ நகராட்சி எல்லைக்குட்பட்ட ஒன்றாம்‌ எண்‌ ரேசன்‌ கடையில்‌ 1515 குடும்ப அட்டைகள்‌ மேல்‌ உள்ளதை இரண்டு கடைகளாக பிரிக்க வேண்டி பல வருடங்களாக மக்கள்‌ கோரி வருகின்றனர்‌. அதன்‌ அடிப்படையில்‌ அரசும்‌ அந்த கடையை இரண்டாக பிரிக்க அனைத்து நடவடிக்கைகளை எடுக்க துவங்கி இருகின்றது. அதன்‌ ஒரு பகுதியாக நாங்கள்‌ எங்கள்‌ வார்டுகளில்‌ உள்ள குடும்ப அட்டைகளில்‌ விவரங்களை சேகரித்து வட்ட வழங்கல்‌ அலுவலர்‌ மற்றும்‌ கூட்டுறவு சங்கத்திற்க்கு கொடுத்து உள்ளோம்‌. தற்போது தற்காலியகமாக ரேசன்‌ கடை அமைக்க பெரிய தெருவில்‌ அமைந்து இருக்கும்‌ இரண்டு நகராட்சி கடைகளை வழங்கி மக்களுக்கு உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்‌”, என குறிப்பிடப்பட்டுள்ளது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் மிஸ்வாக் சார்பாக 340 பயனாளிகளுக்கு பெருநாள் அன்பளிப்பு.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் பகுதி மக்களின் அன்பைப் பெற்ற டிஎஸ்பி அஜய் தங்கம் இடமாற்றம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் காவல்துறையினர் டென்ட் மற்றும் ஒலிபெருக்கி அமைத்துள்ளனர்.

Leave a Comment