கோட்டக்குப்பத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடப்பதால், வரும் 26, 27ம் தேதிகளில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது.
கொரோனா பரவலை தடுக்க, ஞாயிறுதோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்தாண்டு செப்., துவங்கி, கடந்த 12ம் தேதி வரை, 23 மெகா முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. கடந்த 19ம் தேதி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, முகாம் ரத்து செய்யப்பட்டது. இந்த வாரம், 24ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடத்துவது குறித்து நேற்று வரை அறிவிக்கப்படவில்லை.
சுகாதாரத்துறை உயரதிகாரிகள் கூறுகையில், ‘வரும் 27ம் தேதி, ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கு, போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது. அதே நாளில், தடுப்பூசி முகாம் நடத்துவது இயலாது. இதனால், வரும் 26, 27 ஆகிய தேதிகளில், மெகா தடுப்பூசி முகாம் நடக்காது’ என்றனர்.


