May 10, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: இன்று(03/02/2022) மட்டும் 75 பேர் மனுத்தாக்கல்.

கோட்டக்குப்பம் நகராட்சிக்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ம் தேதி நடக்க இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28-ஆம் தேதி தொடங்கியது.

முதல் இரண்டு நாட்கள் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில், மூன்றாவது நாளில் 7 பேரும், 4-வது நாளில் 14 பேரும், 5-வது நாளான நேற்று 43 பேரும் மனுதாக்கல் செய்தனர்.
புதன்கிழமை வரை 64 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், 5-ஆவது நாளான இன்று வியாழக்கிழமை (03-02-2022) அதிகபட்சமாக 75 பேர் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதன் விபரங்கள் வருமாறு,

சுயேட்சை – 33
திராவிட முன்னேற்ற கழகம் – 09
அ.இ. அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் – 17
காங்கிரஸ் கட்சி – 2
பாட்டாளி மக்கள் கட்சி – 3
மக்கள் நீதி மையம் – 3
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) – 1
நாம் தமிழர் கட்சி – 3
பாரதிய ஜனதா கட்சி – 4

இன்று மட்டும் 75 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர், இவா்களுடன் சோ்த்து இதுவரை கோட்டக்குப்பம் நகராட்சி முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்தவா்களின் எண்ணிக்கை 139-ஆக உயர்ந்துள்ளது.

மேலும், வேட்புமனு தாக்கல் செய்ய நாளை (04/02/2022) கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் மிஸ்வாக் சார்பில் 15 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு 400 பயனாளிகளுக்கு வினியோகம்.

டைம்ஸ் குழு

பெருநாள் தொழுகை வீட்டிலேயே தொழவேண்டும் என ஜமா அத்துல் உலமா சபை அறிவிப்பு..

கோட்டக்குப்பம் வணிகர்கள் சங்கம் சார்பாக சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சி

டைம்ஸ் குழு

Leave a Comment