May 10, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய இன்ஸ்பெக்டர்.

இந்தியாவில் ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு 1,700-ஐ கடந்திருப்பது சற்று கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும், கோட்டக்குப்பம் பகுதியில் கொரோனாவின் வீரியத்தை உணராத பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் சுற்றி திரிகின்றனர். இதனால் அவர்களை மட்டுமின்றி அவர்களை சார்ந்தவர்களுக்கும் நோய் தொற்று எளிதில் பரவுகிறது.

இந்நிலையில், கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் திரு ம. ராபின்சன் மற்றும் போலீசார், இன்று 04.01.2022, மாலை 4: 30 மணிக்கு, கோட்டகுப்பம் ரவுண்டானாவில் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் முகக்கவசம் அணியாதவர்களை அழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அப்போது முகக்கவசம் அணியாத 50 வாகன ஓட்டிகளுக்கு முகக்கவசங்களை அவர்கள் வழங்கினர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் பழைய பட்டினம் பாதையில் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி…

கோட்டக்குப்பத்தில் தொடங்கியது மக்களுடன் முதல்வர் திட்டம்! இனி எதற்கும் அலைய வேண்டியதில்லை!

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் 150-ம் ஆண்டு விழா வீண் விரயமா? விரும்பி செய்ய வேண்டிய காரியமா?

Leave a Comment