கோட்டக்குப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு கூட்டம், கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் திரு. ராபின்சன் அவர்கள் தலைமையில் இன்று 03-12-2021, மாலை 5 மணியளவில் காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆட்டோ ஓட்டுனர்கள் திரளாக பங்கேற்றனர்.
மேலும், இந்தக் கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- ஆட்டோ ஓட்டுனர்கள் அனைவரும் சுத்தமான சீருடையில் இருக்க வேண்டும்.
- தான் ஓட்டும் ஆட்டோவின் RC-புக், இன்சூரன்ஸ், பர்மிட் ஆகியவைகள் கட்டாயம் கையில் வைத்திருக்கவேண்டும்.
- ஆட்டோ ஓட்டும் நபர் தனது ஒட்டுநர் உரிமத்தை கையில் வைத்திருக்கவேண்டும்.
- பொதுமக்களை சவாரிக்கு ஏற்றும்போதும், இறக்கும்போதும் அவர்களிடம் கனிவாக பேசவேண்டும்.
- பயணிகள் சொல்லும் இடத்தில் நிறுத்தாமல், வேறு இடத்தில் நிறுத்தி அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுதல் கூடாது.
- ஒர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும்போது அதற்குண்டான தொகையை விடுத்து அதிகப்படியான தொகையை பயணிகளிடம் வசூல் செய்யக்கூடாது.
- ஆட்டோவை ஆட்டோ ஸ்டாண்டுகளில் நிறுத்தும்போது வரிசையாக நிறுத்தி வைக்கவேண்டும்.
- சந்தேகமான நபர்கள் யாரேனும் தங்களது ஆட்டோவில் பயணம் செய்தாலோ அல்லது அடிக்கடி சந்தேகப்படும்படியான இடத்திற்கு அவர்கள் சென்று வந்தாலோ அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவேண்டும்.
- ஆட்டோ ஓட்டிச்செல்லும்போது பீடி, சிகரெட் அடித்தல், ஹான்ஸ், பான்பராக் வஸ்துகளை உபயோகப்படுத்துதல் கூடாது.
- ஆட்டோவை ஓட்டிச்செல்லும்போதும், ஓரமாக நிறுத்தும்போதும் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.