May 10, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பகுதி மக்களின் அன்பைப் பெற்ற டிஎஸ்பி அஜய் தங்கம் இடமாற்றம்.

கோட்டக்குப்பம் பகுதியில் டிஎஸ்பி-யாக (மாவட்ட துணை கண்காணிப்பாளர்) கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றிய வந்த திரு. அஜய் தங்கம் அவர்கள் திருச்சி கண்டோன்மெண்ட் உதவி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கோட்டக்குப்பம் பகுதியில் பணிபுரிந்தபோது கோட்டக்குப்பத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சமூக விரோதிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தியும், அனைத்து தரப்பு மக்களையும் சமமாக பாவித்து தன்னுடைய கடமையை சிறப்பாக செய்துள்ளார்கள்.

மேலும், கோட்டக்குப்பம் பகுதியில் இயங்கும் சமூக அமைப்புகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து அவர்கள் செய்யும் சமூகப் பணிகளை ஆதரித்து வந்துள்ளார்கள்.

கொரானா காலத்தில் கோட்டக்குப்பத்தில் நெருக்கடி நிலை ஏற்பட்டபோது அதை லாவகமாக கையாண்டு பெருந்தெற்றை குறைக்க சிறப்பாக பணி செய்து வந்துள்ளார்கள்.

சென்ற ஆண்டு, கொரானா நோய்த்தொற்று சம்பந்தமாக மிஸ்வாக் அமைப்பின் சார்பாக வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோவை மிகவும் மனமுவந்து பாராட்டி உற்சாகப்படுத்தினார்கள். மேலும், மிஸ்வாக் அமைப்பு சார்பாக “ஆர்சனிக் ஆல்பம் 30” எனும் ஹோமியோபதி மருந்தை, பொதுமக்களுக்கு வினியோகிக்க வேண்டும் என்று அறிவுரையும் வழங்கியவர்களும் நமது டிஎஸ்பி அவர்கள்.

அதேபோன்று, கோட்டக்குப்பம் பகுதியில் உள்ளூர் செய்திகளில் வழங்குவதில் முன்னணி இணைய தளமாக இருக்கும் நமது “கோட்டக்குப்பம் டைம்ஸின்” செயலி வெளியீட்டு நிகழ்ச்சியில் தலைமை தாங்கி, அந்த செயலியை பொது மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார் என்பதும் சிறப்புக்குரிய செய்தியாகும்.

நமது கோட்டக்குப்பம் டைம்ஸ் இணையதளத்தில் அரசு, தனியார் மற்றும் சமூக அமைப்புகள் செய்யும் அனைத்து நடவடிக்கைகளையும் மற்றும் அரசின் பொது அறிவிப்புகளையும் உடனடியாக நமது இணையதளத்தில் வெளியிட்டு பொதுமக்களுக்கு தெரிவித்து வந்ததை வெகுவாகப் பாராட்டியுள்ளார்கள்.

அரசின் அனைத்து நிகழ்ச்சிகளையும் மற்றும் பொது நிகழ்ச்சிகளையும், பொதுமக்களுக்கு உங்கள் இணையதளம் மூலம் கொண்டு சேர்ப்பது சிறப்பான பணி என்றும் எங்களை ஊக்கப்படுத்தியது எங்கள் பணிக்கு கிடைத்த வெகுமதியாகக் கருதுகிறோம்.

கோட்டக்குப்பம் மற்றும் அதை சுற்றி அமைந்துள்ள பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட மிகச் சிறப்பாக பணியாற்றிய திரு. அஜய் தங்கத்தின் பணிகளை நமது “கோட்டக்குப்பம் டைம்ஸ்” பாராட்டி மிகுந்த கனத்த இதயத்துடன் வழி அனுப்பி வைக்கிறது.

எங்கு சென்றாலும் சிறப்பாக பணியாற்ற, வாழ்த்துகிறோம். 💐💐💐

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

வெளிநாடு வாழ் கோட்டக்குப்பம் நண்பர்கள் ஹஜ் பெருநாள் கொண்டாட்டம் [புகைப்படங்கள்]..

டைம்ஸ் குழு

இப்ராஹிம் கார்டன் பகுதியில் இனியாவது குப்பைகள் கொட்டுவது தவிர்க்கப்படுமா? கோட்டக்குப்பம் நகராட்சியின் அதிரடி நடவடிக்கை.

டைம்ஸ் குழு

முத்தியால்பேட்டை கோட்டக்குப்பம் எல்லையில் நான்கு சக்கர வாகனங்களுக்கு தடை

Leave a Comment