28.7 C
கோட்டக்குப்பம்
May 10, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் கொரானா கண்டறிய பட்டவர்களில் பலர் சிகிச்சை முடித்து நலமுடன் வீடு திரும்பினார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கொரானா தொற்று பாதிப்பு அதிகரித்து வந்தது.

அதன் தாக்கமாக கோட்டக்குப்பத்தில் கடந்த சில நாட்களாக, சில தொற்றுக்கள் கண்டறியப்பட்டு அரசினால் தொடர் சிகிச்சைகள வழங்கப்பட்டது.

தொற்றால பாதிக்கப்பட்ட நபர்களில் கோட்டக்குப்பம் பகுதியில் பெரும்பாலான நபர் சிகிச்சை பலன் காரணமாக அந்த தொற்று ஒழிக்கப்பட்டு, குணமுடன் வீடு திரும்பியுள்ளனர்.

அதன்படி 22 பேரில் 17 நபர்கள் சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பியுள்ளனர். விழுப்புரம் மாவட்ட சுகாதாரத்துறையினரும், கோட்டகுப்பம் பேரூராட்சி நிர்வாகத்தினரும் இணைந்து சரியான முறையில் சிகிச்சை வழங்கப்பட்டு அவர்கள் நோய்த் தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ளனர் என்பது இந்த நேரத்தில் மிகவும் குறிப்பிடத்தக்கது.

பகுதி தொற்று எண்ணிக்கைகுணமடைந்து வீடு திரும்பியவர்கள்
கோட்டக்குப்பம் 3 2
சின்ன கோட்டக்குப்பம் 3 1
6-வது வார்டு 5 4
இந்திரா நகர் (Case Transferred to Pondicherry, முத்தியால்பேட்டை பகுதியைச் சார்ந்தவர்கள், தற்போது இந்திரா நகரில் வசிக்கின்றனர்). 11 10

தற்போது சிகிச்சையில் 5 நபர்கள் உள்ளனர், கடந்த இரண்டு நாட்களாக புதிய தொற்று ஏற்படாத நிலையில் இனிவரும் காலங்களிலும் நோய்த்தொற்று ஏற்படாவண்ணம் நம்மை நாமே காத்துக்கொள்ள வேண்டும்.

ஆகவே பொதுமக்கள் அரசு அறிவித்துள்ள அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி நமது பகுதியில் தொற்று இல்லா நிலையை உருவாக்குவோம்.

கோட்டக்குப்பம் மற்றும் அதன் சுற்று வட்டார செய்திகளை உடனுக்குடன், தெரிந்து கொள்ள எங்களின் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் – https://bit.ly/3dGx0XR

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் காந்தி ரோடு அடைப்பு. தமிழகத்தில் கடைபிடிக்கப்படும் தளர்வுகளற்ற முழு அடைப்பு கோட்டக்குப்பத்திலும்.

கோட்டக்குப்பம் பகுதிகளில் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளை அச்சுறுத்தும் மாடுகள்.

கோட்டகுப்பம் முஸ்லிம் லீக் சார்பில் பெருநாள் அன்பளிப்பு..

Leave a Comment