28.7 C
கோட்டக்குப்பம்
May 10, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

37-ம் ஆண்டில் கோட்டக்குப்பம் ரப்பானிய்யா அரபிக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை


விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், கோட்டக்குப்பம் (புதுச்சேரி எல்லை அருகில்) கடந்து 36 ஆண்டுகாலமாக மார்க்க சேவை புரிந்து வரும் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டிற்கான (2018-2019) மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

கடந்த 36 ஆண்டுகாலமாக சிறந்த முறையில் இயங்கிவரும் நமது அரபிக் கல்லூரியில் இதுவரையில் 91 ஆலிம்களையும், 43 ஆபிழ்களையும், 368 பெண் ஆலிம்களையும் உருவாக்கி உலகிற்கு மார்க்கப் பணி செய்ய அற்பணித்துள்ளது.

இதனுடன் கணிணி பயிற்சி, தையல் பயிற்சி, எம்ராய்டு போன்ற தொழில்கல்வி பயிற்சிகளும் இலவசமாக கொடுக்கப்பட்டு வருகிறது. 10 மற்றும் 12-ம் வகுப்பு முடித்து மாணவர்களுக்கு மேற்படிப்புகளான B.A., B.Com., போன்ற டிகிரி படிப்புகள் படிக்க இலவசமாக ஏற்பாடு செய்து கொடுக்கப்படுகிறது.

இங்கு பயிலும் மாணவர்களுக்கு (ஆண்கள்) தங்கும் இடம், உணவு அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. தங்கள் வீட்டு பிள்ளைகளை நமது கல்லூரியில் சேர்த்து மார்க்க அறிஞர்களாக்கிட அன்புடன் அழைக்கிறோம். இந்த அறிய வாய்ப்பை உங்கள் பிள்ளைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளவும்.

கல்லூரி திறக்கும் நாள்: 30-06-2018

மாணவர் சேர்க்கை தொடர்புக்கு

தலைவர்,
அல்ஜாமிஅத்துர் ரப்பானிய்யா கல்வி மற்றும் அறப்பணி சங்கம்.
1, பள்ளிவாசல் தெரு. கோட்டக்குப்பம், வானூர் வட்டம், விழுப்புரம் மாவட்டம்.
போன்: 0413-2237936 செல்: 9003529730

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் சார்பில் ஆதார் சிறப்பு முகாம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் பழைய பட்டின பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்.

கோட்டக்குப்பம் நகராட்சியின் வார்டு மறுவரையரையில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை களைய கோரி விழுப்புரம் ஆட்சியரிடம் மனு.

டைம்ஸ் குழு

1 comment

ஷேக்முஹம்மது யூசுபி June 26, 2018 at 11:27 am

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
ரப்பானிமதரஸாஉடையகல்விதரம்.மாஷா அல்லாஹ் உலகம்அறிந்தது.ஆனால்
சமிபாகாலமாக…தரமானஆசிரியரை கண்மூடித்தனமாக நீக்குவது,
தமிழகத்தில் மாணவர்கள் கிடைக்காமல்
வெளிமாநில மாணவர்களைகெஞ்சி கூத்தாடீத்வரவழைப்பது ஊழியர்கள். ..ஆதலால் பலவிஷியத்தை சரிசெய்யவோண்டும்

Reply

Leave a Comment