Lockdown Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Sun, 09 Jan 2022 04:47:13 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg Lockdown Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 ஞாயிறு முழு ஊரடங்கு: கோட்டக்குப்பதில் வெறிச்சோடி காணப்படும் முக்கிய சாலைகள். https://www.kottakuppamtimes.com/5619/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259e%25e0%25ae%25be%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b1%25e0%25af%2581-%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25b4%25e0%25af%2581-%25e0%25ae%258a%25e0%25ae%25b0%25e0%25ae%259f%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581-%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d https://www.kottakuppamtimes.com/5619/#respond Sun, 09 Jan 2022 04:45:39 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5619 தமிழகத்தில் கொரோனா  பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஞாயிறு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கோட்டக்குப்பதில் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன.  அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. பால் விநியோகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உணவு நிறுவனங்கள் ஆட்கள் மூலம் உணவு விநியோகம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே திட்டமிடப்பட்டுள்ள திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகளுக்கு அனுமதி உண்டு. நிகழ்ச்சிக்கு செல்பவர்கள் அழைப்பு பத்திரிகைகளைக் காண்பிக்க வேண்டும். திருமண நிகழ்ச்சிகளுக்கு 100...

The post ஞாயிறு முழு ஊரடங்கு: கோட்டக்குப்பதில் வெறிச்சோடி காணப்படும் முக்கிய சாலைகள். appeared first on Kottakuppam Times.]]>
தமிழகத்தில் கொரோனா  பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஞாயிறு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கோட்டக்குப்பதில் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன. 

அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. பால் விநியோகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உணவு நிறுவனங்கள் ஆட்கள் மூலம் உணவு விநியோகம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே திட்டமிடப்பட்டுள்ள திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகளுக்கு அனுமதி உண்டு. நிகழ்ச்சிக்கு செல்பவர்கள் அழைப்பு பத்திரிகைகளைக் காண்பிக்க வேண்டும். திருமண நிகழ்ச்சிகளுக்கு 100 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவர்.

மேலும் ரோந்து வாகனங்கள் மூலம், போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post ஞாயிறு முழு ஊரடங்கு: கோட்டக்குப்பதில் வெறிச்சோடி காணப்படும் முக்கிய சாலைகள். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5619/feed/ 0
கோட்டக்குப்பதில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிப்பு. https://www.kottakuppamtimes.com/5616/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25ae%2595%25e0%25af%258d-2 https://www.kottakuppamtimes.com/5616/#respond Sat, 08 Jan 2022 16:01:14 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5616 கோட்டக்குப்பதில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு காவல்துறை சார்பில் அபராதம் விதிக்கப்பட்டது. ஒமைக்ரான் தொற்று பரவலை தடுக்கும் விதமாக காவல் துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டன. கோட்டக்குப்பம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், கடந்த சில தினங்களாக காவல் ஆய்வாளர் திரு. ராபின்சன் அவர்கள் தலைமையில் முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, முகக்கவசம் அணியாதவர்களுக்கு இலவசமாக முகக்கவசங்கள் வழங்கி வந்தார். மேலும், விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்...

The post கோட்டக்குப்பதில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிப்பு. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பதில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு காவல்துறை சார்பில் அபராதம் விதிக்கப்பட்டது. ஒமைக்ரான் தொற்று பரவலை தடுக்கும் விதமாக காவல் துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டன.

கோட்டக்குப்பம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், கடந்த சில தினங்களாக காவல் ஆய்வாளர் திரு. ராபின்சன் அவர்கள் தலைமையில் முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, முகக்கவசம் அணியாதவர்களுக்கு இலவசமாக முகக்கவசங்கள் வழங்கி வந்தார். மேலும், விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், இன்று(08/01/2022) கோட்டக்குப்பதில் காவல் ஆய்வாளர் தலைமையில், முகக்கசவம் அணியாத பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் 6 பேருக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அவர்களுக்கு காவல் ஆய்வாளர் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்.

இனிவரும் காலங்களில் பொது மக்கள், வியாபாரிகள், கடை ஊழியர்கள் அனைவரும் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது மற்றும் கைகளை அடிக்கடி கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது போன்ற ‘கோவிட் கட்டுப்பாட்டு நெறிமுறைகள்‘ கண்டிப்பாக கடைபிடிக்குமாறு கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

The post கோட்டக்குப்பதில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிப்பு. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5616/feed/ 0
தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு – முழு விவரம்! https://www.kottakuppamtimes.com/4645/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25b4%25e0%25ae%2595%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%258a%25e0%25ae%25b0%25e0%25ae%259f%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581-%25e0%25ae%25ae%25e0%25af%2587%25e0%25ae%25b2%25e0%25af%2581 https://www.kottakuppamtimes.com/4645/#respond Sun, 20 Jun 2021 07:36:49 +0000 https://www.kottakuppamtimes.com/?p=4645 தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.  தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 21 ஆம் தேதி (திங்கள்கிழமை) நிறைவடைய உள்ள நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் அனைவரும் எதிர்பார்த்த பொதுப்போக்குவரத்து சேவை அனுமதிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்குள் 50% பயணிகளுடன் பேருந்து போக்குவரத்து சேவை அனுமதிக்கப்பட்டுள்ளது.  கரோனா தொற்று குறைந்த 23 மாவட்டங்களில் 50% பயணிகளுடன்...

The post தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு – முழு விவரம்! appeared first on Kottakuppam Times.]]>
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 21 ஆம் தேதி (திங்கள்கிழமை) நிறைவடைய உள்ள நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதில் அனைவரும் எதிர்பார்த்த பொதுப்போக்குவரத்து சேவை அனுமதிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்குள் 50% பயணிகளுடன் பேருந்து போக்குவரத்து சேவை அனுமதிக்கப்பட்டுள்ளது. 

கரோனா தொற்று குறைந்த 23 மாவட்டங்களில் 50% பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி:

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக, இந்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25-3-2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு சில தளர்வுகளுடன் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கு30-6-2021 வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.  தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் பொருட்டு, அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், மருத்துவ வல்லுநர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில், கொரோனா பெருந்தொற்று நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த, முழு ஊரடங்கு தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்த ஊரடங்கு வரும் 21-6-2021 அன்று காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும் நிலையில், 19-6-2021 அன்றுமருத்துவ வல்லுநர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், நோய்த் தொற்றின் தன்மையினை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும், நோய்த் தொற்று பரவாமல் தடுத்து, மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கத்திலும், இந்த  ஊரடங்கை28-6-2021 காலை 6-00 மணி வரை, நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளேன்.

மேலும் மாவட்டங்களில் உள்ள நோய்த் தொற்று பாதிப்பின் அடிப்படையில், மாவட்டங்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.

வகை 1 – (11 மாவட்டங்கள்)
கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள்

வகை 2 – (23 மாவட்டங்கள்)
அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்கள்.

வகை 3-  (4 மாவட்டங்கள்)
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மேற்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்களுள், வகை 1-ல் உள்ள 11 மாவட்டங்களுக்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் மட்டும் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

மேலும், வகை 2-ல் உள்ள 23 மாவட்டங்களில், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கான நேரத் தளர்வுகளும், கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கும்அனுமதி அளிக்கப்படுகிறது.

•    தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
•    காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
•    உணவகங்கள் மற்றும் அடுமணைகளில் (hotels, restaurants and bakeries) பார்சல் சேவை மட்டும் காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை அனுமதிக்கப்படும்.  மின் வணிகம் (e-commerce) மூலம் உணவு விநியோகம் செய்யும் அனைத்து மின் வணிக நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.
•    இதர மின் வணிக சேவை நிறுவனங்கள் (E-commerce) அனைத்தும் காலை 06.00 மணி முதல் இரவு 09.00 வரை இயங்கலாம்.
•    இனிப்பு மற்றும் காரவகை விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் இரவு9.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
•    அரசின் அனைத்து அத்தியாவசியத் துறைகள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். இதர அரசு அலுவலகங்கள், 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். 
•    சார் பதிவாளர் அலுவலகங்கள் முழுமையாக இயங்க அனுமதிக்கப்படும்,
•    அனைத்து தனியார் நிறுவனங்கள், 33% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
•    ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள்100 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும். 
•    இதர தொழிற்சாலைகள் 33% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
•    மின் பொருட்கள், பல்புகள், கேபிள்கள், ஸ்விட்சுகள் மற்றும் ஒயர்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
•    மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
•    ஹார்டுவேர் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
•    வாகனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
•    வாகனங்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மற்றும் விநியோகஸ்தர்களது கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
•    கல்விப் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
•    வாகன விநியோகஸ்தர்களது வாகன பழுதுபார்க்கும் மையங்கள்காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
•    காலணிகள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
•    கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
•    மிக்சி, கிரைண்டர், தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோக மின் பொருட்களின் விற்பனை மற்றும் பழுதுநீக்கும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
•    மண்பாண்டம் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். •    மின் பணியாளர் (Electricians), பிளம்பர்கள் (Plumbers), கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் (Motor Technicians) மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் சேவை கோருபவர் வீடுகளுக்குச் சென்று பழுது நீக்கம் செய்ய காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இ-பதிவுடன் அனுமதிக்கப்படுவர்.
•    செல்பேசி மற்றும் அதனைச் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
•    கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
•    அனைத்து வகையான கட்டுமானப் பணிகள் அனுமதிக்கப்படும்.
•    பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிருவாகப் பணிகள் அனுமதிக்கப்படும்.
•    காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை விளையாட்டு பயிற்சி குழுமங்கள் இயங்கவும், பார்வையாளர்கள் இல்லாமல், திறந்த வெளியில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும், அனுமதிக்கப்படும்.
•    திரையரங்குகளில், தொடர்புடைய வட்டாட்சியரின் அனுமதி பெற்று வாரத்தில் ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.
•    வாடகை வாகனங்கள், டேக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படுவர்.  மேலும், வாடகை டேக்ஸிகளில், ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படுவர்.
•    வீட்டு வசதி நிறுவனம் (HFCs) வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs), குறு நிதி நிறுவனங்கள் (MFIs) 33 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். மேலும், வகை 3-ல் உள்ள 4 மாவட்டங்களில், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கான நேரத் தளர்வுகளும், கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
•    தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
•    காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
•    உணவகங்கள் மற்றும் அடுமணைகளில் (hotels, restaurants and bakeries) பார்சல் சேவை மட்டும் காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை அனுமதிக்கப்படும்.  மின் வணிகம் (e-commerce) மூலம் உணவு விநியோகம் செய்யும் அனைத்து மின் வணிக நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.
•    இதர மின் வணிக சேவை நிறுவனங்கள் (E-commerce) அனைத்தும் காலை 06.00 மணி முதல் இரவு 09.00 வரை இயங்கலாம்.
•    இனிப்பு மற்றும் காரவகை விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் இரவு9.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
•    குழந்தைகள், சிறார்கள், மாற்றுத் திறனாளிகள், முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள், பெண்கள், விதவைகள் ஆகியோருக்கான இல்லங்கள் மற்றும் இவை தொடர்புடைய போக்குவரத்து இ-பதிவில்லாமல் அனுமதிக்கப்படும்.
•    சிறார்களுக்கான கண்காணிப்பு / பராமரிப்பு, சீர்திருத்த இல்லங்களில் பணிபுரிவோர் இ-பதிவில்லாமல் அனுமதிக்கப்படுவர்.
•    அனைத்து வகையான கட்டுமானப் பணிகள் அனுமதிக்கப்படும்.
•    அனைத்து அரசு அலுவலகங்கள், 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். 
•    சார் பதிவாளர் அலுவலகங்கள் முழுமையாக இயங்க அனுமதிக்கப்படும்,
•    அனைத்து தனியார் நிறுவனங்கள், 50% பணியாளர்களுடன் அனுமதிக்கப்படும்.
•    ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 100 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.
•    இதர தொழிற்சாலைகளும் 50 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும். 
•    மின் பணியாளர் (Electricians), பிளம்பர்கள் (Plumbers), கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் (Motor Technicians) மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் சேவை கோருபவர் வீடுகளுக்குச் சென்று பழுது நீக்கம் செய்ய காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை இ-பதிவுடன் அனுமதிக்கப்படுவர்.
•    மின் பொருட்கள், பல்புகள், கேபிள்கள், ஸ்விட்சுகள் மற்றும் ஒயர்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
•    மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
•    ஹார்டுவேர் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
•    வாகனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
•    கல்விப் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
•    வாகன விநியோகஸ்தர்களது வாகன பழுதுபார்க்கும் மையங்கள்காலை 9.00 மணி முதல் மாலை7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
•    வாகனங்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மற்றும் விநியோகஸ்தர்களது கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
•    காலணிகள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
•    கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
•    பாத்திரக் கடைகள், பேன்ஸி, அழகு சாதனப் பொருட்கள், போட்டோ/ வீடியோ கடைகள், சலவைக் கடைகள். தையல் கடைகள், அச்சகங்கள், ஜெராக்ஸ் கடைகள்காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
•    மண்பாண்டம் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை காலை 9.00 மணி முதல் மாலை7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். •    தேநீர்க் கடைகளில் காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை பார்சல் சேவை மட்டும்  அனுமதிக்கப்படும்.
•    மிக்சி, கிரைண்டர், தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோக மின் பொருட்களின் விற்பனை மற்றும் பழுதுநீக்கும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
•    செல்பேசி மற்றும் அதனைச் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல்மாலை7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
•    சாலையோர உணவுக் கடைகளில் பார்சல் சேவை மட்டும்  காலை 6.00 மணி முதல் மாலை7.00 மணி வரை  அனுமதிக்கப்படும்.
•    கணினி வன்பொருட்கள், மென்பொருட்கள், மின்னனு சாதனங்களின் உதிரிபாகங்கள் (Computer Hardware, Software, Electronic Appliances Spare Parts) விற்பனை செய்யும் கடைகள்  காலை 9.00 மணி முதல் மாலை7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
•    கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
•    அழகு நிலையங்கள், சலூன்கள் (Beauty Parlour, Saloons, Spas) குளிர் சாதன வசதி இல்லாமலும், ஒரு நேரத்தில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
•    காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை விளையாட்டு பயிற்சி குழுமங்கள் இயங்கவும், பார்வையாளர்கள் இல்லாமல், திறந்த வெளியில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும், அனுமதிக்கப்படும்.
•    பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிருவாகப் பணிகள் அனுமதிக்கப்படும்.
•    திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் 100 நபர்கள் மட்டும் பணிபுரியும் வகையில் நடத்த அனுமதிக்கப்படும்.படப்பிடிப்பில் பங்கேற்றும் பணியாளர்கள் / கலைஞர்கள் அவசியம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு படப்பிடில் கலந்து கொள்ள வேண்டும்.
•    படப்பிடிப்புகளுக்கு பிந்தைய தயாரிப்பு பணிகள் அனுமதிக்கப்படும்.
•    திரையரங்குகளில், தொடர்புடைய வட்டாட்சியரின் அனுமதி பெற்று வாரத்தில் ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.
•    மாவட்டத்திற்குள் பொது பேருந்து போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமலும், 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.
•    நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி மெட்ரோ இரயில் போக்குவரத்து, 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.
•    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கிடையே பொது பேருந்து போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமலும், 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.
•    வாடகை வாகனங்கள், டேக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவில்லாமல் செல்ல அனுமதிக்கப்படுவர்.  மேலும், வாடகை டேக்ஸிகளில், ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படுவர்.  
•    வீட்டு வசதி நிறுவனம் (HFCs) வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs), குறு நிதி நிறுவனங்கள் (MFIs) 50 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். பொது திருமணநிகழ்வுகளுக்கு,வகை 2 மற்றும் 3-ல் குறிப்பிட்டுள்ள மாவட்டங்களுக்கிடையேஇ-பாஸ் பெற்று பயணம் செய்ய அனுமதிக்கப்படும்.இதற்கான இ-பாஸ் திருமணம் நடைபெற உள்ள மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியரிடமிருந்து இணையவழியாக (https://eregister.tnega.org) விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.  மேலும், திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.  நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து இ-பாஸ் பெற்று பயணிக்க அனுமதிக்கப்படும்.

கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொது மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும்,கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும், கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்றவும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை/ சிகிச்சை பெறவும் கேட்டுக்கொள்கிறேன்.
மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கொரோனா தொற்றினை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

The post தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு – முழு விவரம்! appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/4645/feed/ 0
அமலானது தளா்வில்லா பொதுமுடக்கம்: கோட்டக்குப்பதில் காலை முதலே வெறிச்சோடிய சாலைகள். https://www.kottakuppamtimes.com/4474/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2585%25e0%25ae%25ae%25e0%25ae%25b2%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%25a4%25e0%25ae%25b3%25e0%25ae%25be%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%25b2%25e0%25ae%25be-%25e0%25ae%25aa%25e0%25af%258a%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25ae https://www.kottakuppamtimes.com/4474/#respond Mon, 24 May 2021 04:26:23 +0000 https://www.kottakuppamtimes.com/?p=4474 தமிழகத்தில் ஒரு வாரத்துக்கான தளா்வில்லாத பொது முடக்கம் இன்று(24-05-2021) முதல் நடைமுறைக்கு வந்தது. கொரோனா பரவல் அதிகரித்ததையடுத்து, தமிழகத்தில் கடந்த 10-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் 24-ஆம் தேதி நிறைவடையவிருந்த நிலையில், தளா்வில்லா பொது முடக்கத்தை ஒரு வார காலத்துக்கு நீட்டித்து அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மே 22,23) அனைத்துக் கடைகளும் இரவு 9 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது....

The post அமலானது தளா்வில்லா பொதுமுடக்கம்: கோட்டக்குப்பதில் காலை முதலே வெறிச்சோடிய சாலைகள். appeared first on Kottakuppam Times.]]>
தமிழகத்தில் ஒரு வாரத்துக்கான தளா்வில்லாத பொது முடக்கம் இன்று(24-05-2021) முதல் நடைமுறைக்கு வந்தது.

கொரோனா பரவல் அதிகரித்ததையடுத்து, தமிழகத்தில் கடந்த 10-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் 24-ஆம் தேதி நிறைவடையவிருந்த நிலையில், தளா்வில்லா பொது முடக்கத்தை ஒரு வார காலத்துக்கு நீட்டித்து அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மே 22,23) அனைத்துக் கடைகளும் இரவு 9 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது.

வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்காக, கோட்டக்குப்பம்-முத்தியால்பேட்டை காந்தி சாலையிலுள்ள கடைகளில் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா். இரு சக்கர வாகனங்களில் பெரும்பாலானோா் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையடுத்து, தளா்வில்லா முழு பொதுமுடக்கம் இன்று காலை முதல் அமலுக்கு வந்தது. இதனால் நேற்று பரபரப்பாக காணப்பட்ட காந்தி சாலைகள் இன்று வெறிச்சோடி காணப்பட்டது.

இந்த பொதுமுடக்கத்தின்போது, மருந்தகங்கள், நாட்டு மருந்துக் கடைகள், கால்நடை மருந்தகங்கள் ஆகியவை இயங்கும். பால் விநியோகம், குடிநீா் மற்றும் தினசரி பத்திரிகை விநியோகம் ஆகியவை நடைபெறும். உணவகங்கள் அனைத்திலும் பாா்சல்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும், அது மேலும் பரவாமல் தடுப்பதற்கும் அதன் சங்கிலி உடைக்கப்பட வேண்டும். அதற்காகத்தான் இந்த முழு பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆகவே, பொதுமக்கள் அரசு சொல்லும் வழிமுறைகளை முறையாக பின்பற்றி இந்த கொரோனா பாதிப்புலிருந்து நம்மையும் நம் குடும்பத்தாரையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

The post அமலானது தளா்வில்லா பொதுமுடக்கம்: கோட்டக்குப்பதில் காலை முதலே வெறிச்சோடிய சாலைகள். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/4474/feed/ 0
கோட்டக்குப்பம் பள்ளிவாசல்களின் தொழுகை சம்மந்தமாக முக்கிய அறிவிப்பு! https://www.kottakuppamtimes.com/4340/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25b3%25e0%25af%258d%25e0%25ae%25b3%25e0%25ae%25bf%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%259a https://www.kottakuppamtimes.com/4340/#respond Sat, 24 Apr 2021 08:22:26 +0000 https://www.kottakuppamtimes.com/?p=4340 கொரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை வழிகாட்டுதலின்படி வருகின்ற ஞாயிற்றுக்கிழமைகளில், முழுஅடைப்பு(லாக்டவுன்) காரணமாக ஐவேளைத் தொழுகைகள் மற்றும் தராவிஹ் தொழுகைகள் வீடுகளிலேயே நிறைவேற்றி கொள்ளுமாறு ஜாமிஆ மஸ்ஜித் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதேபோல், பர்கத் நகர் பள்ளிவாசல் மற்றும் மஸ்ஜிதே புஸ்தானியா பள்ளிவாசல்களிலும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

The post கோட்டக்குப்பம் பள்ளிவாசல்களின் தொழுகை சம்மந்தமாக முக்கிய அறிவிப்பு! appeared first on Kottakuppam Times.]]>
கொரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை வழிகாட்டுதலின்படி வருகின்ற ஞாயிற்றுக்கிழமைகளில், முழுஅடைப்பு(லாக்டவுன்) காரணமாக ஐவேளைத் தொழுகைகள் மற்றும் தராவிஹ் தொழுகைகள் வீடுகளிலேயே நிறைவேற்றி கொள்ளுமாறு ஜாமிஆ மஸ்ஜித் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அதேபோல், பர்கத் நகர் பள்ளிவாசல் மற்றும் மஸ்ஜிதே புஸ்தானியா பள்ளிவாசல்களிலும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

The post கோட்டக்குப்பம் பள்ளிவாசல்களின் தொழுகை சம்மந்தமாக முக்கிய அறிவிப்பு! appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/4340/feed/ 0
இன்று முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் புதிய கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது. https://www.kottakuppamtimes.com/4335/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25af%2581-%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25b0%25e0%25ae%25b5%25e0%25af%2581-%25e0%25ae%25a8%25e0%25af%2587%25e0%25ae%25b0-%25e0%25ae%258a%25e0%25ae%25b0%25e0%25ae%259f%25e0%25ae%2599 https://www.kottakuppamtimes.com/4335/#respond Tue, 20 Apr 2021 06:41:17 +0000 https://www.kottakuppamtimes.com/?p=4335 தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு அறிவித்துள்ள இரவு நேர ஊரடங்கு மற்றும் புதிய கட்டுப்பாடு இன்று முதல் அமலுக்கு வருகிறது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, தமிழகத்தில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு இன்று அமலுக்கு வருகிறது. அதன்படி இரவு நேரங்களில் தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் இயங்காது. வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்துகள்...

The post இன்று முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் புதிய கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது. appeared first on Kottakuppam Times.]]>
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு அறிவித்துள்ள இரவு நேர ஊரடங்கு மற்றும் புதிய கட்டுப்பாடு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, தமிழகத்தில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு இன்று அமலுக்கு வருகிறது.

அதன்படி இரவு நேரங்களில் தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் இயங்காது. வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்துகள் பகல் நேரத்தில் மட்டுமே இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடற்கரைகள், பூங்காக்கள், வனவிலங்கு பூங்காக்கள் உள்ளிட்டவை மூடப்பட்டு பொதுமக்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் கடும் கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓட்டல்கள், டீக்கடைகள், காய்கறி கடைகள், பலசரக்கு கடைகள் உட்பட அனைத்து கடைகள், வணிக வளாகங்கள், ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். திருமண நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ளவும், தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு தடையில்லை என்றும், பெட்ரோல்- டீசல் பங்க்குகள் வழக்கம்போல் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரவுநேர ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள். மார்க்கெட்டுகள்,பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள்,வழிபாட்டுத தலங்கள் உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில் தற்காலிகச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு!

மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும். அன்றைய தினம் இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட், காய்கறி கடைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் மற்றும் அனைத்து கடைகள் செயல்பட அனுமதி கிடையாது. மீறினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இன்று முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் புதிய கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/4335/feed/ 0
நாளை முதல் கோட்டகுப்பதிலும் இரவு 8 மணி வரை கடைகள் இயங்க அனுமதி. https://www.kottakuppamtimes.com/2729/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%25b3%25e0%25af%2588-%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2 https://www.kottakuppamtimes.com/2729/#respond Mon, 31 Aug 2020 14:15:08 +0000 https://www.kottakuppamtimes.com/?p=2729 கொரானா நோய்த்தொற்றின் காரணமாக அரசு தமிழகம் முழுவதும் பல விதமான அறிவிப்புகள் மூலம் பொது முடக்கத்தை அமுல்படுத்தி வந்துள்ளது. அந்த அறிவிப்புகள் ஆகஸ்ட் 31 வரை முடிந்த நிலையில் புதிய தளர்வுகளை தமிழக முதலமைச்சர் அவர்கள் நேற்று அறிவித்தார். அதன்படி பலவிதமான அறிவிப்புக்கு மத்தியில் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் என்ற ஒரு ஆறுதல் அறிவிப்பையும் அறிவித்துள்ளார்கள். நமது கோட்டக்குப்பம் பகுதிகளில்...

The post நாளை முதல் கோட்டகுப்பதிலும் இரவு 8 மணி வரை கடைகள் இயங்க அனுமதி. appeared first on Kottakuppam Times.]]>
கொரானா நோய்த்தொற்றின் காரணமாக அரசு தமிழகம் முழுவதும் பல விதமான அறிவிப்புகள் மூலம் பொது முடக்கத்தை அமுல்படுத்தி வந்துள்ளது.

அந்த அறிவிப்புகள் ஆகஸ்ட் 31 வரை முடிந்த நிலையில் புதிய தளர்வுகளை தமிழக முதலமைச்சர் அவர்கள் நேற்று அறிவித்தார்.

அதன்படி பலவிதமான அறிவிப்புக்கு மத்தியில் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் என்ற ஒரு ஆறுதல் அறிவிப்பையும் அறிவித்துள்ளார்கள்.

நமது கோட்டக்குப்பம் பகுதிகளில் ஆரம்பத்தில் மதியம் 2 மணி வரை கடைகள் செயல்பட்டது. பிறகு அது மாலை 7 மணி வரை நீட்டிக்கப்பட்டது. மறுபடியும் மாலை 5 மணி வரை குறைக்கப்பட்டது. தற்போது மாலை 6 மணி வரை கடைகள் செயல்பட்டு வருகிறது.

இந்த நேர கட்டுப்பாடு காரணமாக அனைத்து வியாபாரிகளும் மிகுந்த சிரமத்திற்கும் நஷ்டத்திற்கு உள்ளாக்கினார்கள்.

வியாபாரிகள் மட்டுமல்ல நுகர்வோர்களும் தங்கள் பொருள்களை குறிப்பிட்ட கால நேரத்தில் வாங்கிவிட வேண்டும் என்ற அவசர கதியில் தினமும் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருந்தனர்.

இதனால் பலவிதமான நெருக்கடிகளும் பலவிதமான சுமைகளும் மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் ஏற்றப்பட்டது.

இரவு 6 மணி வரை மட்டுமே கடைகள் இயங்க வேண்டும் என்ற சூழ்நிலை இருந்ததால் மாலை 6 மணிக்கு மேல் நடைபெறக்கூடிய பல வியாபாரங்கள் நடைபெறாமல் மூடப்பட்டன. அதில் உணவகங்களும், டீக்கடைகளிலும், மளிகை கடைகள், துணிக்கடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் கடைகளும் அடங்கும். இதனால் இந்த வியாபாரம் செய்த வியாபாரிகளும் கஷ்டப்பட்டார்கள். அதை வாங்க முடியாமல் நுகர்வோர்களும் கஷ்டப்பட்டார்கள். இந்த குறைகளை நீக்க வேண்டும் என்று நமது ஊரில் பல அமைப்புகள் பல தடவை நமது உள்ளூர் நிர்வாகத்தை அணுகி கோரிக்கை வைத்தபோது, அரசு வழிகாட்டலின் படியே நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று ஒற்றை வரியில் பதில் சொல்லி அதை முடித்துக் கொண்டார்கள்.

இதனால் வியாபாரிகள் மிகவும் சிரமத்திற்கு கடந்த நான்கு மாதங்களாக தள்ளப்பட்டனர். இந்நிலையில் நேற்று அறிவிக்கப்பட்ட பல தளர்வுகளில் கடைகள் இரவு 8 மணி வரை திறந்திருக்கும் என்ற ஒரு அறிவிப்பு செய்யப்பட்டது. இந்த அறிவிப்பை மேற்கோள்காட்டி இன்று நமது பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் திரு ராமலிங்கம் அவர்களை தொடர்பு கொண்டு நாம் கேட்டிருந்தோம். கோட்டகுப்பத்தில் அரசு அறிவித்தபடி கடைகள் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிப்பீர்களா என்று கேட்டிருந்தோம்.

அதற்கு அவர்கள் தங்களுக்குள் ஆலோசித்து சொல்வதாக சொன்னார்கள். அதன்படி நம்மை தொடர்புகொண்டு தற்போது செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அதாவது நாளை முதல் கோட்டகுப்பம் பகுதியில் அனைத்து கடைகளும் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் என்று வணிகப் பெருமக்கள் மத்தியில் ஒரு ஆறுதல் செய்தியை தெரிவித்துள்ளார்கள்.

ஆகவே வியாபாரப் பெருமக்கள் நாளை முதல் தங்கள் கடைகளை இரவு 8 மணிவரை நடத்திக்கொண்டு தங்கள் வியாபாரத்தை செய்துக் கொள்ளலாம் என்று அறிவுறுத்துகிறார்கள்.

மேலும் அரசு அறிவித்த கட்டுப்பாடுகளான முகக்கவசம், சமூக இடைவெளி போன்றவற்றை நிச்சயமாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவித்து உள்ளார்கள்.

இந்த அறிவுறுத்தல்களை பின்பற்றி நோய்த்தொற்று ஏற்படா வண்ணம் வியாபாரத்தை வியாபாரப் பெருமக்கள் செய்துகொள்ள வேண்டும். அதே போன்று நுகர்வோர்களும் பிறருக்கு நோய்த்தொற்று பரவாமல் அரசு அறிவித்த அனைத்து வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

The post நாளை முதல் கோட்டகுப்பதிலும் இரவு 8 மணி வரை கடைகள் இயங்க அனுமதி. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/2729/feed/ 0
தமிழ்நாட்டில் இ-பாஸ் முறை ரத்து, பல புதிய தளர்வுகள் – 20 முக்கிய தகவல்கள் https://www.kottakuppamtimes.com/2725/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25b4%25e0%25af%258d%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2587-%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%25b8%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25b1 https://www.kottakuppamtimes.com/2725/#respond Sun, 30 Aug 2020 14:20:01 +0000 https://www.kottakuppamtimes.com/?p=2725 வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்கள் மூலம் தமிழ் நாட்டிற்குள் நுழைய இ-பாஸ் நடைமுறை தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே இ-பாஸ் இன்றி பொது மக்கள் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல், அவசர தேவைகளுக்காக வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு பயணிக்க...

The post தமிழ்நாட்டில் இ-பாஸ் முறை ரத்து, பல புதிய தளர்வுகள் – 20 முக்கிய தகவல்கள் appeared first on Kottakuppam Times.]]>
வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்கள் மூலம் தமிழ் நாட்டிற்குள் நுழைய இ-பாஸ் நடைமுறை தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆனால், தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே இ-பாஸ் இன்றி பொது மக்கள் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல், அவசர தேவைகளுக்காக வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு பயணிக்க இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

எனினும் மாவட்டங்களுக்கு மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான ஆட்கள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு எந்தவிதமான அனுமதியும் தேவை இல்லை என்று இந்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் தெரிவித்திருந்தது.

தமிழகத்தில் வேறு என்னென்ன தளர்வுகள்?

  • அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. இதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அரசால் விரைவில் வெளியிடப்படும்
  • இதன்மூலம் ஒரு நாளுக்கு தரிசனத்துக்கு வரும் அதிகபட்ச பக்தர்களின் எண்ணிக்கையும் கர்ப்பகிரகம் போன்ற புனித இடத்தில் ஒரே நேரத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மாவட்டத்திற்கு உள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்தும் சென்னை பெருநகர பேருந்து போக்குவரத்தும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் உடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
  •  சென்னை மெட்ரோ ரயில் போக்குவரத்தும் செப்டம்பர் 7ம் தேதி முதல் அனுமதிக்கப்படும்.
  • வணிக வளாகங்கள் ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் 100 சதவிகித பணியாளர்களுடன் மத்திய அரசின் குளிர்சாதன வசதி கொண்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மற்றும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதிக்கப்படும்.
  •  வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் இயங்குவதற்கான தடை தொடரும்.
  •  சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கடைகளும் இரவு 8 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும்.
  •  உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. இரவு 9 மணி வரை வாங்கலாம்.
  •  தமிழ்நாடு முழுவதும் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 100 சதவிகித பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.
  •  எனினும் தவிர்க்க இயலாத பணிகள் தவிர தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய ஊக்குவிக்கப்டுகிறார்கள்.
  •  தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள் கேளிக்கை விடுதிகள் மற்றும் பிற விருந்தோம்பல் சேவைகள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது.
  •  உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சிக்கான பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் இயங்க அனுமதிக்கப்படுகிறது. எனினும் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.
  • அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 100 சதவிகித பணியாளர்களுடன் இயங்கும். தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் மற்றும் தொழிற்சாலை போன்ற பணியிடங்களில் தடுப்பு அலுவலர் ஒருவர் நியமிக்கப்படுவார்.
  • நீலகிரி மாவட்டத்திற்கும் கொடைக்கானல் ஏற்காடு போன்ற மலை வாசஸ்தலங்கள் செல்லும் சுற்றுலா பயணிகள் மாவட்ட ஆட்சித்தலைவரின் அனுமதி பெறுவது அவசியம்
  • மாநிலம் முழுவதும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144ன் கீழ் பொது இடங்களில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடக் கூடாது என்ற தடை உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும்.
  • தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்த விதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.
  • பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை இயங்குவதற்கான தடை தொடரும். எனினும், இந்நிறுவனங்கள் இணைய வழிக் கல்வி கற்றல் தொடர்வதுடன், அதனை ஊக்குவிக்கலாம்.
  • மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்.
  • மதம் சார்ந்த கூட்டங்கள், சமூக, அரசியல், பொழுதுபோக்கு, கலாசார நிகழ்வுகள், கல்வி விழாக்கள், பிற கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த உள்ள தடை தொடரும்.

ரயில் – விமான போக்குவரத்து

மாநிலங்களுக்கு இடையேயான ரயில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்ட தடங்களில் மட்டும் செயல்படும். எனினும், மாநிலத்திற்குள் பயணியர் ரயில்கள் செயல்பட 15.9.2020 வரை அனுமதியில்லை. 15.9.2020க்குப் பிறகு, தமிழ்நாட்டிற்குள் பயணியர் ரயில்கள் அனுமதிப்பது பற்றி, சூழ்நிலைக்கேற்ப முடிவு எடுக்கப்படும்.

தற்போது நாள்தோறும் சென்னை விமான நிலையத்தில் வெளி மாநிலங்களில்இருந்து 25 விமானங்கள் தரையிறங்க அனுமதித்துள்ள நிலையில், இனி 50 விமானங்கள் வரை தரையிறங்க அனுமதிக்கப்படுகிறது.

இது தவிர கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, தூத்துக்குடி, சேலம் ஆகிய விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள நிலை தொடரும்.



-நன்றி பிபிசி

The post தமிழ்நாட்டில் இ-பாஸ் முறை ரத்து, பல புதிய தளர்வுகள் – 20 முக்கிய தகவல்கள் appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/2725/feed/ 0
கொரோனா ஊடரங்கு: செப்டம்பர் 30வரை நீட்டிப்பு, புதிய தளர்வுகள் என்ன? https://www.kottakuppamtimes.com/2722/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258a%25e0%25ae%25b0%25e0%25af%258b%25e0%25ae%25a9%25e0%25ae%25be-%25e0%25ae%258a%25e0%25ae%259f%25e0%25ae%25b0%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581-%25e0%25ae%259a%25e0%25af%2586%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25ae%25e0%25af%258d%25e0%25ae%25aa https://www.kottakuppamtimes.com/2722/#respond Sat, 29 Aug 2020 15:23:16 +0000 https://www.kottakuppamtimes.com/?p=2722 கொரோனா பொது முடக்கம்: செப்டம்பர் 30வரை தொடரும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அடுத்த மாதம் 7ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவை இயக்கலாம் என்றும் உள்துறை அமைச்சகம் இன்று புதிதாக வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள உத்தரவில் புதிய வழிகாட்டுதல்கள் என்ன என்பது விவரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை செப்டம்பர் 30ஆம் தேதிவரை மூடப்பட்டிருக்கும்....

The post கொரோனா ஊடரங்கு: செப்டம்பர் 30வரை நீட்டிப்பு, புதிய தளர்வுகள் என்ன? appeared first on Kottakuppam Times.]]>
கொரோனா பொது முடக்கம்: செப்டம்பர் 30வரை தொடரும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அடுத்த மாதம் 7ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவை இயக்கலாம் என்றும் உள்துறை அமைச்சகம் இன்று புதிதாக வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள உத்தரவில் புதிய வழிகாட்டுதல்கள் என்ன என்பது விவரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை செப்டம்பர் 30ஆம் தேதிவரை மூடப்பட்டிருக்கும். எனினும், ஆன்லைன் கல்வி, தொலைதூர கல்வி ஆகியவை தொடர்ந்து நடத்தப்படுவது ஊக்கவிக்கப்படும்.

ஆன்லைன் வகுப்புகள் நடத்த ஏதுவாக, 50 சதவீத ஆசிரியர்கள், ஆசியரியர்கள் அல்லாதவர்கள் பள்ளிகளுக்கு வரவழைக்கலாம். அவர்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ளவர்கள் செப்டம்பர் 21ஆம் தேதி முதல் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி பள்ளிகளுக்கு வரலாம்.

ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்கள், கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே இருந்தால், அவர்கள் தன்னார்வ அடிப்படையில் பள்ளிகளுக்கு சென்று வர அனுமதிக்கப்படுவார்கள்.

உயர்கல்வி பயிலும் மற்றும் ஆராய்ச்சிப்பணியில் இருப்பவர்கள், சூழ்நிலைக்கு ஏற்ப மத்திய உள்துறையுடன் மத்திய உயர்கல்வித்துறை நடத்தும் ஆலோசனை அடிப்படையில் பணிகளை தொடங்க அனுமதிக்கப்படுவார்கள்.

மெட்ரோ ரயில் சேவை அமலில் உள்ள மாநிலங்களில், வரும் செப்டம்பர் 7ஆம் தேதி முதல் படிப்படியாக இயங்க அனுமதிக்கப்படும். அதுவும் மத்திய நகர்ப்புற வளர்ச்சித்தறை அமைச்சம் வெளியிடும் வழிகாட்டு நெறிகள் அடிப்படையில் இருக்கும்.

சமூக, கல்வி, விளையாட்டு, பொழுதுபாக்கு, கலாசாரம், மதம், அரசியல் நிகழ்ச்சிகளில் அதிகபட்ச வரம்பாக 100 பேர் பங்கேற்க அனுமதிக்கப்படும். இந்த அனுமதி வரும் செப்டம்பர் 21ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். அதில் பங்கேற்பவர்கள் அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும். அனைவரும் தெர்மல் ஸ்கேனிங், கை சுத்திகரிப்பான்கள் மற்றும் சானிட்டைசர்கள் பயன்படுத்தப்படுவது அவசியமாகும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

எனினும், திருமண நிகழ்வுகளில் அதிகபட்சமாக 50 பேருக்கு மேல் பங்கேற்கக்கூடாது என்றும், இறுதி நிகழ்வுகளில் அதிகபட்சமாக 20 பேருக்கு மிகாமல் இருப்பது கட்டாயம் என்றும் இந்த நடைமுறை வரும் செப்டம்பர் 20 வரை பொருந்தும். அதற்கு மறு தினத்தில் இருந்து இந்த எண்ணிக்கை 100 ஆக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகள், நீச்சல் குளங்கள், கேளிக்கை பூங்காக்கள், திரையரங்குகள் ஆகியவை தொடரந்து மூடப்பட்டிருக்கும். எனினும், திறந்தவெளி திரையரங்குகள் செப்டம்பர் 21ஆம் தேதிக்கு பிறகு திறக்க அனுமதிக்கப்படும்.

கொரோனை வைரஸ் கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு இடையே, எவ்வித உள்ளூர் பொது முடக்கத்தையும் மாவட்ட, மாநில அரசுகள் மத்திய அரசு ஆலோசனையின்றி விதிக்கக்கூடாது.

மாவட்டங்களுக்கு இடையிலும், மாநிலங்களுக்கு இடையிலும் ஆட்கள் மற்றும் சரக்குகளின் நடமாட்டத்துக்கு கட்டுப்பாடு இருக்கக்கூடாது. அத்தகைய நடவடிக்கைகளுக்கு எவ்வித தனி அனுமதியும் தேவையில்லை.

பயணிகள் ரயில்களின் இயக்கம், வான் வழியாக பயணம் செய்வோர், வந்தேபாரத் திட்டம் மூலம் பயணம் செய்வோரின் நடமாட்டம், இந்திய கடல் மாலுமிகள் ஆகியோரின் நடமாட்டங்களை ஒழுங்குமுறைப்படுத்த விரைவில் தனி வழிகாட்டுதல் நெறிகள் வெளியிடப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

– நன்றி பிபிசி தமிழ்

The post கொரோனா ஊடரங்கு: செப்டம்பர் 30வரை நீட்டிப்பு, புதிய தளர்வுகள் என்ன? appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/2722/feed/ 0
கோட்டக்குப்பத்தில் நாளை தளர்வில்லா முழு அடைப்பு: செயல் அலுவலர் அறிவிப்பு https://www.kottakuppamtimes.com/2358/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%25b3-3 https://www.kottakuppamtimes.com/2358/#respond Sat, 04 Jul 2020 10:00:45 +0000 https://www.kottakuppamtimes.com/?p=2358 கோட்டக்குப்பம் மிஸ்வாக் சார்பாக இன்று “ஆர்சனிக் ஆல்பம் 30” வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கோட்டக்குப்பம் பேரூராட்சி செயல் அலுவலர் அவர்கள் தெரிவித்ததாவது, “நாளை ஞாயிற்றுக்கிழமை நமதூர் மக்கள் முழு அடைப்பை கடைபிடிக்க வேண்டும் என்றும், நாளை மருந்தகம் தவிர மற்ற அனைத்து கடைகளையும் அடைக்கப்பட வேண்டும் என்று கூறினார். மேலும் வெளியூரிலிருந்து யாரேனும் நமது ஊருக்கு வந்தால் தகவல் தரும்படி அறிவித்தார். கோட்டக்குப்பம் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, எங்களின்...

The post கோட்டக்குப்பத்தில் நாளை தளர்வில்லா முழு அடைப்பு: செயல் அலுவலர் அறிவிப்பு appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் மிஸ்வாக் சார்பாக இன்று “ஆர்சனிக் ஆல்பம் 30” வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கோட்டக்குப்பம் பேரூராட்சி செயல் அலுவலர் அவர்கள் தெரிவித்ததாவது, “நாளை ஞாயிற்றுக்கிழமை நமதூர் மக்கள் முழு அடைப்பை கடைபிடிக்க வேண்டும் என்றும், நாளை மருந்தகம் தவிர மற்ற அனைத்து கடைகளையும் அடைக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

மேலும் வெளியூரிலிருந்து யாரேனும் நமது ஊருக்கு வந்தால் தகவல் தரும்படி அறிவித்தார்.

கோட்டக்குப்பம் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, எங்களின் செயலியை பதிவிறக்கம் செய்யவும் – https://play.google.com/store/apps/details?id=com.kottakuppamtimes.news

The post கோட்டக்குப்பத்தில் நாளை தளர்வில்லா முழு அடைப்பு: செயல் அலுவலர் அறிவிப்பு appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/2358/feed/ 0