barkath nagar Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Thu, 05 Dec 2024 16:14:46 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg barkath nagar Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பம் பர்கத் நகர் பரிதாபங்கள்! https://www.kottakuppamtimes.com/9119/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25a4%25e0%25af%258d-%25e0%25ae%25a8-5 https://www.kottakuppamtimes.com/9119/#respond Thu, 05 Dec 2024 16:14:42 +0000 https://www.kottakuppamtimes.com/?p=9119 புயலோ பெருமழையோ ஏற்பட்டால் கோட்டக்குப்பம் பகுதியில் முதலில் பாதிக்கப்படுவது பர்கத் நகர் பகுதியாக இருந்து வருகிறது. அதன்படி தற்பொழுது ஏற்பட்ட ஃபெஞ்சல் புயலில் பர்கத் நகர் பகுதியும் பாதிக்கப்பட்டுள்ளது. புயல் வந்தால் மழை வரும், மழை நீரால் அப்பகுதி முழுவதும் மழை நீரால் சூழப்பட்டு இயல்பு வாழ்க்கையை பாதிக்கும். அதன் பிறகு, நகராட்சி செயல்பாட்டால் அந்த தேங்கிய தண்ணீரை வெளியேற்றப்படும் இதுவே வாடிக்கையாக உள்ளது. அது போன்று இப்போது வந்த...

The post கோட்டக்குப்பம் பர்கத் நகர் பரிதாபங்கள்! appeared first on Kottakuppam Times.]]>
புயலோ பெருமழையோ ஏற்பட்டால் கோட்டக்குப்பம் பகுதியில் முதலில் பாதிக்கப்படுவது பர்கத் நகர் பகுதியாக இருந்து வருகிறது. அதன்படி தற்பொழுது ஏற்பட்ட ஃபெஞ்சல் புயலில் பர்கத் நகர் பகுதியும் பாதிக்கப்பட்டுள்ளது.

புயல் வந்தால் மழை வரும், மழை நீரால் அப்பகுதி முழுவதும் மழை நீரால் சூழப்பட்டு இயல்பு வாழ்க்கையை பாதிக்கும். அதன் பிறகு, நகராட்சி செயல்பாட்டால் அந்த தேங்கிய தண்ணீரை வெளியேற்றப்படும் இதுவே வாடிக்கையாக உள்ளது.

அது போன்று இப்போது வந்த புயலால் பெரும் பாதிப்பு இல்லாவிட்டாலும் 13, 12, 11, 10, 7, 8, 9-வது எக்ஸ்டென்ஷன் போன்ற குறுக்குத் தெருக்களில் மழை நீர் சூழ்ந்தது. இதனால் இப்பகுதியை சேர்ந்த மக்கள் இரு தினங்கள் பெறும் அவதிப்பட்டார்கள். சில வீடுகளில் வீட்டு உபயோக பொருட்கள் பழுதாகிவிட்டது.

இது ஆண்டாண்டு காலமாக வாடிக்கையாக இருந்து வருகிறது. தற்போதைய வடகிழக்கு பருவமழையில் ஜமியத் நகர் பகுதி முழுவதும் தண்ணீரால் மூழ்கி அப்பகுதி மக்களை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியது. அப்பகுதியில் வீடு கட்டி குடியேறிய குடியிருப்பு வாசிகளுக்கு ஒவ்வொருவருக்கும் லட்ச ரூபாய்க்கும் மேற்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இது அப்பகுதி மக்களின் பெரும் பாதிப்பாக கருதப்படுகிறது. அவ்வாறு ஒரு ஆள் மூழ்கும் அளவிற்கு அளவிற்கு வெள்ள நீர் சூழ்ந்த அந்தப் பகுதியில் மூன்று நாட்கள் கழித்து குடிநீர் வினியோகம் சீர் செய்யப்பட்டுள்ளது.

ஆனால், பெரும் பாதிப்பு ஏற்படாத பர்கத் நகர் பகுதியில் கடந்த ஆறு நாட்களாக மக்களுக்கு சரியான குடிநீர் வினியோகம் இல்லாமல் அல்லல்பட்டு வருகிறார்கள்.

மக்களின் துயர் துடைக்க 22-வது மற்றும் 15-வது வார்டு நகரமன்ற உறுப்பினர்கள் பெரும் முயற்சி செய்து பகுதி மக்களின் பெறும் கஷ்டத்தை சிறிது போக்க குடிநீர் லாரிகளின் மூலமாக கொடுத்து வருகிறார்கள். இருந்தாலும் அவர்கள் கொடுக்கும் தண்ணீர் மக்களின் அனைத்து தேவைகளுக்கும் பூர்த்தியாகாமல் மக்கள் பெரும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

குடிநீரை சேமித்து வைக்கும் கீழ்நிலை தொட்டி (சம்பு) அமைந்திருக்கும் பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் குடிநீரை சேமித்து வைக்கவும், சேமித்த நீரை மேல் தொட்டிக்கு ஏற்றவும் முடியவில்லை என்று வழக்கமான காரணங்களை கூறி வருகிறார்கள்.

இந்த நிலை கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து வருவது மிகவும் வேதனைக்குரியது. வெள்ள நீர் சூழும் பகுதியில் சம்பு தொட்டியை கட்டினால், தண்ணீர் வரத்தானே செய்யும் அந்த அடிப்படை விசயம் தெரிந்தவர்கள் அப்பகுதியில் வெள்ளநீர் சூழாத வகையில் அப்பகுதியை இதுவரையில் பாதுகாக்காது ஏன்? ஒவ்வொரு மழைக்காலத்திலும், ஜெனரேட்டர்கள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டதாக நகராட்சி நிர்வாகம் கூறுவது வழக்கமாகிவிட்டது. ஆனால், இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக, ஜெனரேட்டர்களை உயரமான இடத்தில் வைப்பதற்கான நடவடிக்கை ஏன் இதுவரை எடுக்கப்படவில்லை என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

தாழ்வான அப்பகுதியை வெள்ளநீர் சூழாத வகையில் மேடாக இதுவரையும் மாற்றி வைக்காமல் சிறிது மழை பெய்தாலும் அப்பகுதியில் வெள்ள நீ சூழ்ந்து விடுகிறது. இதனால் தண்ணீர் ஏற்றுவதற்கான சூழ்நிலை அமையாமல் அதற்கான சுவிட்சைகளை போடுவதற்கு முடியாமல் ஊழியர்கள் தவிப்பதையும் காரணமாக சொல்லி வருகிறார்கள்.

நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு வரி இனங்களை அதிக அளவில் வசூலித்து வரும் கோட்டக்குப்பம் நகராட்சி, பர்கத் நகர் பகுதியை A-zone என்று அறிவித்துவிட்டு அதிகப்படியான வரி வசூல் செய்து கொண்டு அதற்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல் இந்த 10 ஆண்டுகளாக இதே காரணங்களை சொல்லி அப்பகுதி மக்களை வஞ்சித்து வருவது மிகவும் கண்டனத்துக்குரியது.

ஆண்டுதோறும் ஏற்படும் பருவ மழையில் அடிக்கடி மூழ்கும் அப்பகுதியை வெள்ளம் சூழா வண்ணம் பாதுகாக்க இதுவரையில் நிரந்தரமான திட்டம் தீட்டாமல் தற்காலிக ஏற்பாடுகளை செய்து அப்பகுதி மக்களை கஷ்டப்படுத்தி வருகிறார்கள்.

கடந்த சனிக்கிழமை முதல் சரியான குடிநீர் கிடைக்காமல் கடந்த ஆறு நாட்களாக அப்பகுதி மக்கள் பெரும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

அப்பகுதி மக்களின் சிரமத்தை அறிந்து தனக்காக வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களை பாதுகாக்கும் நோக்கில் நகர மன்ற உறுப்பினர்கள் பம்பரமாக சுழன்று வேலை செய்தாலும் அவர்களின் அதிகப்படியான சக்தியை செலவு செய்து அவர்கள் வேலை செய்தாலும் அப்பகுதி மக்களின் தேவைகளை அவர்களால் முழுமையாக நிறைவேற்ற முடியாமல் மிகவும் அவர்களும் சிரமப்படுகிறார்கள்.

இந்த அவல நிலையை நகராட்சி நிர்வாகம் தற்காலிக சமாளிப்பாக இல்லாமல் வருங்காலங்களில் அப்பகுதியில் மழைநீர் தேங்கா வண்ணமும் இடர் காலங்களில் சீரான குடிநீர் வழங்க கூடிய வகையில் திட்டங்களை தீட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இதில், இன்னும் ஒரு பெரிய கொடுமை என்னவென்றால் குடிநீர் வழங்கக்கூடிய கீழ்நிலை தொட்டியும் அப்பகுதி மக்கள் அன்றாடம் வெளியேற்றும் கழிவுநீரை சேகரிக்கும் தொட்டியும் ஒரே இடத்தில் அமைந்து இருப்பது இன்னும் வியப்புக்குரியது.

தற்போது சூழ்ந்துள்ள வெள்ளத்தில் குடிநீர் தொட்டி நீரும், கழிவுநீர் தொட்டி நீரும் ஒன்றாக கலந்திருப்பது பெரும் ஆபத்தாக உள்ளது. இவ்வாறு சரியான திட்டமிடல் இல்லாமல் இரு தொட்டிகளையும் ஒரே இடத்தில் அமைத்திருப்பது மக்களின் சுகாதாரத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்தும்.

கழிவுநீர் வெளியேற்ற வழி இல்லாமல் அப்பகுதி மக்கள் பல போராட்டங்கள் செய்த நிலையில் கழிவு நீர் சேகரிக்கும் தொட்டியை அமைத்து அங்கிருந்து மோட்டார் மூலம் கழிவு நீரை வெளியேற்றும் வகையில் அமைக்கப்பட்டது. அந்த கழிவு நீரை வெளியேற்றுவதற்கு பல தடவை கோரிக்கை மனு கொடுத்தும் செய்யாத நிலையில் மக்கள் பெரும் போராட்டம் செய்ததின் விளைவாகவே இந்த கழிவுநீர் வெளியேற்றதற்கான வழிவகை செய்தார்கள்.

அதேபோன்று, தற்போது குடிநீர் தொட்டி அருகே வெள்ளநீர் சூழாமல் இருக்க போராட்டத்தை இந்த நகராட்சி நிர்வாகம் எதிர்பார்த்து காத்திருக்கிறதா? அப்போதுதான் அதற்கு வழிவகை செய்வார்களா என்று அப்பகுதி மக்கள் கேட்கிறார்கள்.

அனைத்து வசதிகளையும் ஒருங்கேபெற்ற இக்காலகட்டத்திலும் இப்பகுதி மக்கள் குடிநீருக்காக சிரமப்படுவது மிகவும் துரதிஷ்டவசமானது.

தற்போது பர்கத் நகர் குடிநீர் பைப்புகள் சரி செய்யப்பட்டு இன்று மாலை முதல் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. எனினும் மழை மீண்டும் வந்தால் அதே பழைய நிலைமைக்கு தள்ளப்படும். பர்கத் நகரின் இந்த பரிதாப நிலைக்கு எப்போதுதான் நிரந்தர தீர்வு கிடைக்கும்!!??

The post கோட்டக்குப்பம் பர்கத் நகர் பரிதாபங்கள்! appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/9119/feed/ 0
கோட்டக்குப்பம் பரகத் நகர் அல் மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸா சுதந்திர தின கொடியேற்றும் நிகழ்ச்சி https://www.kottakuppamtimes.com/8189/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25b0%25e0%25ae%2595%25e0%25ae%25a4%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%2595-9 https://www.kottakuppamtimes.com/8189/#respond Tue, 15 Aug 2023 06:43:18 +0000 https://www.kottakuppamtimes.com/?p=8189 கோட்டக்குப்பம் பரகத் நகர், அல்-மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸா பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பாக இந்திய சுதந்திர தின கொடியேற்ற நிகழ்ச்சி இன்று (15.08.2023) சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளிவாசல் முத்தவல்லி எஸ் பிலால் முஹம்மது அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளியின் இமாம் மௌலவி அக்பர் சாதிக் அவர்கள் கிராத் ஓதி ஆரம்பித்தார்கள். பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஹாஜி E. அப்துல் ஹமீது தேசிய கொடி ஏற்றினார்கள். இந்நிகழ்ச்சியில், ஜாமிஆ...

The post கோட்டக்குப்பம் பரகத் நகர் அல் மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸா சுதந்திர தின கொடியேற்றும் நிகழ்ச்சி appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் பரகத் நகர், அல்-மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸா பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பாக இந்திய சுதந்திர தின கொடியேற்ற நிகழ்ச்சி இன்று (15.08.2023) சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பள்ளிவாசல் முத்தவல்லி எஸ் பிலால் முஹம்மது அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளியின் இமாம் மௌலவி அக்பர் சாதிக் அவர்கள் கிராத் ஓதி ஆரம்பித்தார்கள். பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஹாஜி E. அப்துல் ஹமீது தேசிய கொடி ஏற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில், ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி U.முகமது ஃபாருக், செயலாளர் ஹாஜி N. பஷீர் அஹமது, துணை செயலாளர் ஹாஜி A.K. பஷீர் அகமது, துணை முத்தவல்லி ஹாஜி K.R. அப்துல் ரவூப், ஜாமிஆ மஸ்ஜித் முன்னாள் முத்தவல்லிகள் ஹாஜி A. இஹ்சானுல்லாஹ், ஹாஜி A. பக்ருதீன் ஃபாரூக், ஹாஜி A.முஹம்மது பாரூக், முன்னாள் கவுன்சிலர் K. நஜீர், புஸ்தானியா மஸ்ஜித் செயலாளர் ஹாஜி V.R. முஹம்மது இப்ராஹிம், புஸ்தானியா மஸ்ஜித் முன்னாள் முத்தவல்லி ஹாஜி M.I.அப்துல் ஹக்கீம் (முஜீப்), ஜாமிஆ மஸ்ஜித் உறுப்பினர்கள் A.அமீர் பாஷா, அபூதாஹீர், ஹாஜாத் அலி ஆகியோர் ஊர் மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து செய்திகள், இந்திய சுதந்திரத்திற்கான முஸ்லிம்களின் பங்கு குறித்தும் சிறப்புரையாற்றினார்கள்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை பள்ளியின் நிர்வாகிகள் பொருளாளர் S.முகமது இப்ராஹிம், துணை முத்தவல்லி L. முகமது பாரூக், துணை செயலாளர் E. முஹம்மது ஷரீப் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் பள்ளிவாசலின் செயலாளர் K. அப்துல் நாசர் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பள்ளியின் நிர்வாகிகள், மதரசா மேம்பாட்டு குழு உறுப்பினர்கள், ஊர் ஜமாத்தார்கள், மதரஸா மற்றும் பள்ளி மாணவர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டார்கள். துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

The post கோட்டக்குப்பம் பரகத் நகர் அல் மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸா சுதந்திர தின கொடியேற்றும் நிகழ்ச்சி appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/8189/feed/ 0
நாளை பர்கத் நகர் அல் மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸாவின் ஐம்பெரும் விழா தொடக்கம். https://www.kottakuppamtimes.com/8052/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%25b3%25e0%25af%2588-%25e0%25ae%25aa%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25a4%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%259c https://www.kottakuppamtimes.com/8052/#respond Fri, 26 May 2023 13:49:29 +0000 https://www.kottakuppamtimes.com/?p=8052 கோட்டக்குப்பம் பர்கத் நகர் அல் மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸா சார்பில் பாரம்பரிய வரலாற்று கண்காட்சி, மதரஸா ஆண்டு விழா, பெண்களுக்கான மார்க்க விழிப்புணர்வு சிறப்பு சொற்பொழிவு, புதிய மதரஸா கட்டிட திறப்பு விழா மற்றும் 10, 12-ம் வகுப்பு சிறந்த மாணவர்களுக்கு பரிசளிப்பு ஆகிய உள்ளடக்கிய ஐம்பெரும் விழா நாளை மே 27, 28 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பர்கத் நகர் மதரஸா வளாகத்தில் நடைபெறவுள்ளது. நிகழ்ச்சியின் முதலாவதாக,...

The post நாளை பர்கத் நகர் அல் மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸாவின் ஐம்பெரும் விழா தொடக்கம். appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் பர்கத் நகர் அல் மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸா சார்பில் பாரம்பரிய வரலாற்று கண்காட்சி, மதரஸா ஆண்டு விழா, பெண்களுக்கான மார்க்க விழிப்புணர்வு சிறப்பு சொற்பொழிவு, புதிய மதரஸா கட்டிட திறப்பு விழா மற்றும் 10, 12-ம் வகுப்பு சிறந்த மாணவர்களுக்கு பரிசளிப்பு ஆகிய உள்ளடக்கிய ஐம்பெரும் விழா நாளை மே 27, 28 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பர்கத் நகர் மதரஸா வளாகத்தில் நடைபெறவுள்ளது.

நிகழ்ச்சியின் முதலாவதாக, நமது வரலாற்று மற்றும் கடந்த காலத்தின் பழைய அரிய புகைப்படங்களை காட்சிப்படுத்தும் “கோட்டக்குப்பம் பாரம்பரியம் கண்காட்சி“, நாளை காலை 9 மணி அளவில் பர்கத் நகர் 9-வது கிராஸ் பழைய மதரசா வளாகத்தில் நடைபெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து, காலை 9: 30 மணி முதல் மாலை 6:30 மணி வரை மதரசா ஆண்டு விழா மற்றும் மாலை 6:45 மணி முதல் 7 45 மணி வரை காயல்பட்டினம் ஆலிமா M.A.S. முத்து கதீஜா அவர்களின் சிறப்புரை ஆற்றும் பெண்களுக்கான சிறப்பு சொற்பொழிவு நடைபெறும்.

மேலும், ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணி அளவில் சென்னை பாலவாக்கம் மௌலானா A.U. அபூபக்கர் அவர்களின் சிறப்புரை ஆற்றும் மதரசா புதிய கட்டிட திறப்பு விழா. நிகழ்வின் முடிவில் மதியம் 1:00 மணி அளவில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சிறந்த மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அல் மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸாவின் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

The post நாளை பர்கத் நகர் அல் மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸாவின் ஐம்பெரும் விழா தொடக்கம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/8052/feed/ 0
கோட்டக்குப்பம் பரகத் நகர் அல்-மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸா குடியரசு தின விழா. https://www.kottakuppamtimes.com/7660/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25b0%25e0%25ae%2595%25e0%25ae%25a4%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%2595-8 https://www.kottakuppamtimes.com/7660/#respond Thu, 26 Jan 2023 07:43:03 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7660 கோட்டக்குப்பம் பரகத் நகர் பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பாக இந்திய திருநாட்டின் 74-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்வின் முக்கிய நிகழ்ச்சியாக தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் முத்தவல்லி S. பிலால் முஹம்மது அவர்கள் தலைமை தாங்கினார். கோட்டகுப்பம் பேரூராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர் ஹாஜி E. அப்துல் ஹமீது கொடியேற்றி வைத்தார்கள். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பள்ளியின் இமாம் அக்பர் சாதிக் சலாஹி அவர்கள் கிராத்...

The post கோட்டக்குப்பம் பரகத் நகர் அல்-மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸா குடியரசு தின விழா. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் பரகத் நகர் பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பாக இந்திய திருநாட்டின் 74-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

நிகழ்வின் முக்கிய நிகழ்ச்சியாக தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் முத்தவல்லி S. பிலால் முஹம்மது அவர்கள் தலைமை தாங்கினார். கோட்டகுப்பம் பேரூராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர் ஹாஜி E. அப்துல் ஹமீது கொடியேற்றி வைத்தார்கள்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பள்ளியின் இமாம் அக்பர் சாதிக் சலாஹி அவர்கள் கிராத் ஓதி அனைவரையும் வரவேற்றார்கள்.

இந்த நிகழ்வில் ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி U.முகம்மது பாரூக், ஜாமிஆ மஸ்ஜித் துணை செயலாளர் ஹாஜி A.K. பஷீர் அகமது, துணை முத்தவல்லி ஹாஜி K.R. அப்துல் ரவூப், முன்னாள் கவுன்சிலர் K. நஜீர், புஸ்தானிய பள்ளிவாசல் செயலாளர் ஹாஜி V.R. முஹம்மது இப்ராஹிம், புஸ்தானியா பள்ளிவாசல் முன்னாள் மூத்தவல்லி ஹாஜி M.I.அப்துல் ஹக்கீம் முஜீப், ஜாமிஆ மஸ்ஜித் உறுப்பினர் A.அமீர் பாஷா மற்றும் பலர் குடியரசு தின வாழ்த்து செய்திகள் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் சமுதாய அமைப்பின் நிர்வாகிகளும், அரசியல் கட்சியின் பொறுப்பாளர்களும், பொதுமக்களும் மாணவச் செல்வங்களும் பெருந்திரளாக கலந்து கொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை பரக்கத் நகர் பள்ளிவாசல் துணை முத்தவல்லி L. முகம்மது பாரூக், பொருளாளர் S. முகமது இப்ராஹிம் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

இறுதியில் பள்ளியின் செயலாளர் K.அப்துல் நாசர் அவர்கள் நன்றி கூற துஆவுடன் நிகழ்ச்சி இனிதுற்றது.

The post கோட்டக்குப்பம் பரகத் நகர் அல்-மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸா குடியரசு தின விழா. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7660/feed/ 0
கோட்டக்குப்பம் பரகத் நகர் அல் மஸ்ஜிதுல் முபாரக் வல்-மதரஸா நிர்வாகத்தின் சார்பாக சுதந்திர தின நிகழ்ச்சி. https://www.kottakuppamtimes.com/7157/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25b0%25e0%25ae%2595%25e0%25ae%25a4%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%2595-6 https://www.kottakuppamtimes.com/7157/#respond Mon, 15 Aug 2022 12:06:25 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7157 நாட்டின் 75-வது சுதந்திர தின நிறைவு நிகழ்ச்சியும், 76-ஆம் ஆண்டு தொடக்க நிகழ்சியும் கோட்டக்குப்பம் பரகத் நகர் அல் மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸா நிர்வாகத்தின் சார்பாக சிறப்பாக இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளிவாசல் முத்தவல்லி பிலால் முஹம்மது அவர்கள் தலைமையேற்று நடத்த பள்ளியின் இமாம் அக்பர் சலாஹி அவர்கள் கிராஅத் ஓதி துவங்கி வைத்தார்கள். நிகழ்ச்சியில் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் அப்துல் ஹமீது, முன்னாள் ஜாமிஆ மஸ்ஜித்...

The post கோட்டக்குப்பம் பரகத் நகர் அல் மஸ்ஜிதுல் முபாரக் வல்-மதரஸா நிர்வாகத்தின் சார்பாக சுதந்திர தின நிகழ்ச்சி. appeared first on Kottakuppam Times.]]>
நாட்டின் 75-வது சுதந்திர தின நிறைவு நிகழ்ச்சியும், 76-ஆம் ஆண்டு தொடக்க நிகழ்சியும் கோட்டக்குப்பம் பரகத் நகர் அல் மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸா நிர்வாகத்தின் சார்பாக சிறப்பாக இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பள்ளிவாசல் முத்தவல்லி பிலால் முஹம்மது அவர்கள் தலைமையேற்று நடத்த பள்ளியின் இமாம் அக்பர் சலாஹி அவர்கள் கிராஅத் ஓதி துவங்கி வைத்தார்கள்.

நிகழ்ச்சியில் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் அப்துல் ஹமீது, முன்னாள் ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லிகள் இஹ்சானுல்லாஹ், ஃபக்ருதீன் பாருக் ஜமாலி, முஹம்மது பாரூக் இன்னாள் முத்தவல்லி முகமது பாரூக், புஸ்தானியா பள்ளி முன்னாள் முத்தவல்லி அப்துல் ஹக்கீம், ஜாமிஆ மஸ்ஜித் துணை முத்தவல்லி அப்துல் ரவூப், துணை செயலாளர் பசீர் அஹமது, முன்னாள் கவுன்சிலர் நஷீர், புஸ்தானியா பள்ளிவாசல் செயலாளர் முஹம்மது இப்ராஹிம், ஜாமிஆ மஸ்ஜித் உறுப்பினர் அமீர் பாஷா, 18-வது வார்டு கவுன்சிலர் அனஸ் மற்றும் பலர் சுதந்திர தின வாழ்த்துச் செய்திகளை மக்களுக்கு தெரிவித்தார்கள்.

நிகழ்ச்சியில் பரகத் நகர் பள்ளிவாசல் செயலாளர் அப்துல் நாசர், துணை முத்தவல்லி முகமது பாருக், பொருளாளர் முஹம்மது இபுராஹிம், துணை செயலாளர் முஹம்மது ஷரிப் மதரஸா பொறுப்பாளர் முஹம்மது ஷரீஃப் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.

நிகழ்ச்சியில் மஹல்லா வாசிகள், ரப்பானியா மதரஸா மாணவர்கள், பரகத் நகர் மதரஸா மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டார்கள்.

The post கோட்டக்குப்பம் பரகத் நகர் அல் மஸ்ஜிதுல் முபாரக் வல்-மதரஸா நிர்வாகத்தின் சார்பாக சுதந்திர தின நிகழ்ச்சி. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7157/feed/ 0
நாளை ஈத்காவில் பரகத் நகர் பள்ளிவாசல் மதரஸா கட்டுமான பணிக்காக பொது வசூல். https://www.kottakuppamtimes.com/6954/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%25b3%25e0%25af%2588-%25e0%25ae%2588%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25b0%25e0%25ae%2595%25e0%25ae%25a4%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%2595%25e0%25ae%25b0 https://www.kottakuppamtimes.com/6954/#respond Sat, 09 Jul 2022 15:28:35 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6954 கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஹஜ்ஜுப் பெருநாள் நாளை 10/07/2022 ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 7 மணிக்கு ஈத்காவில் தொழுகை நடைபெறும். ஈத்காவில் பரகத் நகர் பள்ளிவாசல் மதரஸா கட்டுமான பணிக்காக ஜாமிஆ மஸ்ஜித் அனுமதியோடு பொது வசூல் செய்யப்பட உள்ளது. மேற்படி, பணிக்காக ஜமாத்தார்கள் தாராளமாக நிதி உதவி செய்யுமாறு அல் மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரசா நிர்வாக குழு சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

The post நாளை ஈத்காவில் பரகத் நகர் பள்ளிவாசல் மதரஸா கட்டுமான பணிக்காக பொது வசூல். appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஹஜ்ஜுப் பெருநாள் நாளை 10/07/2022 ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 7 மணிக்கு ஈத்காவில் தொழுகை நடைபெறும்.

ஈத்காவில் பரகத் நகர் பள்ளிவாசல் மதரஸா கட்டுமான பணிக்காக ஜாமிஆ மஸ்ஜித் அனுமதியோடு பொது வசூல் செய்யப்பட உள்ளது. மேற்படி, பணிக்காக ஜமாத்தார்கள் தாராளமாக நிதி உதவி செய்யுமாறு அல் மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரசா நிர்வாக குழு சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

The post நாளை ஈத்காவில் பரகத் நகர் பள்ளிவாசல் மதரஸா கட்டுமான பணிக்காக பொது வசூல். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6954/feed/ 0
பரகத் நகரின் பிரதான பகுதியில் மின் விளக்கு அமைத்து மக்களின் பல வருட கோரிக்கையை நிறைவேற்றிய கவுன்சிலர். https://www.kottakuppamtimes.com/6344/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25ae%25b0%25e0%25ae%2595%25e0%25ae%25a4%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%25a4%25e0%25ae%25be%25e0%25ae%25a9-%25e0%25ae%25aa%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25a4 https://www.kottakuppamtimes.com/6344/#respond Mon, 18 Apr 2022 12:48:48 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6344 பரகத் நகர் இணைக்கும் பிரதான சாலையான வாட்டர் டேங்க் மெயின் ரோட்டில், கடந்த பல வருடங்களாக முதல் நான்கு மின்கம்பங்களில் மின்விளக்கு இல்லாமல், அந்த பகுதி முழுவதும் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்பட்டு வந்தது. மேலும், இது சம்பந்தமாக கோட்டக்குப்பம் பேரூராட்சியாக இருக்கும் பொழுதே பலமுறை மின்விளக்கு அமைக்க கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று 22-வது வார்டு கவுன்சிலர் Y. நாசர் அலி...

The post பரகத் நகரின் பிரதான பகுதியில் மின் விளக்கு அமைத்து மக்களின் பல வருட கோரிக்கையை நிறைவேற்றிய கவுன்சிலர். appeared first on Kottakuppam Times.]]>
பரகத் நகர் இணைக்கும் பிரதான சாலையான வாட்டர் டேங்க் மெயின் ரோட்டில், கடந்த பல வருடங்களாக முதல் நான்கு மின்கம்பங்களில் மின்விளக்கு இல்லாமல், அந்த பகுதி முழுவதும் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்பட்டு வந்தது. மேலும், இது சம்பந்தமாக கோட்டக்குப்பம் பேரூராட்சியாக இருக்கும் பொழுதே பலமுறை மின்விளக்கு அமைக்க கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று 22-வது வார்டு கவுன்சிலர் Y. நாசர் அலி அவர்கள் தனது சொந்த செலவில் 4 மின் கம்பங்களுக்கு மின் விளக்கு பொருத்தியுள்ளார். இதனால், இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய நகர்மன்ற கவுன்சிலர் Y. நாசர் அலி அவர்களுக்கு அப்பகுதி மக்கள் நன்றியை தெரிவித்து வெகுவாக பாராட்டினர்.

The post பரகத் நகரின் பிரதான பகுதியில் மின் விளக்கு அமைத்து மக்களின் பல வருட கோரிக்கையை நிறைவேற்றிய கவுன்சிலர். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6344/feed/ 0
புதுப்பிக்கப்பட்ட பரகத் நகர் அங்கன்வாடி மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு https://www.kottakuppamtimes.com/6315/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f-%25e0%25ae%25aa%25e0%25ae%25b0%25e0%25ae%2595%25e0%25ae%25a4%25e0%25af%258d https://www.kottakuppamtimes.com/6315/#respond Mon, 18 Apr 2022 08:24:16 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6315 புதுப்பிக்கப்பட்ட பரகத் நகர் பால்வாடி (குழந்தைகள் அங்கன்வாடி மையம்) மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பரகத் நகர் பகுதியில் கடந்த 15 ஆண்டுகாலமாக குழந்தைகள் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த குழந்தைகள் மையத்தில் ஆண்டுக்கு முப்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆரம்பக் கல்வி கற்று வருகிறார்கள். மேலும் கர்ப்பிணிப் பெண்களுக்கு அந்தந்த காலகட்டத்திற்கு தேவையான தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதேபோன்று, பிறந்த குழந்தைகளுக்கான தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகிறது....

The post புதுப்பிக்கப்பட்ட பரகத் நகர் அங்கன்வாடி மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு appeared first on Kottakuppam Times.]]>
புதுப்பிக்கப்பட்ட பரகத் நகர் பால்வாடி (குழந்தைகள் அங்கன்வாடி மையம்) மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பரகத் நகர் பகுதியில் கடந்த 15 ஆண்டுகாலமாக குழந்தைகள் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.

இந்த குழந்தைகள் மையத்தில் ஆண்டுக்கு முப்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆரம்பக் கல்வி கற்று வருகிறார்கள். மேலும் கர்ப்பிணிப் பெண்களுக்கு அந்தந்த காலகட்டத்திற்கு தேவையான தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

அதேபோன்று, பிறந்த குழந்தைகளுக்கான தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகிறது. அரசின் சிறப்பு முகாம்களின் மூலம் போடப்படும் கொரோனா தடுப்பூசி, போலியோ சொட்டு மருந்து போன்ற அனைத்து நிகழ்வுகளும் இந்த பால்வாடியில் நடைபெற்று வருகிறது.

நூற்றுக்கணக்கான தாய்மார்களும், கர்ப்பிணிகளும் பயன்படுத்திவரும் இந்த குழந்தைகள் மையம் அமைந்துள்ள இடம் சம தளத்தில் இல்லாமல் குண்டும் குழியுமாக இருந்து வந்தது. மேலும் கட்டிடம் தரை முழுவதும் பழுதடைந்து இருந்து வந்தது. மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி கட்டிடத்தின் உள்ளே செல்ல முடியாத அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தி வந்துள்ளது.

இதை அப்பகுதி மக்கள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நகர்மன்ற உறுப்பினர் Y. நாசர் அலி அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றபோது, அவர் அந்த வார்டில் முதல் வேலையாக இந்த பாதையை சீரமைக்கும் பணியை மேற்கொண்டார். கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த சீரமைக்கும் பணிகள் முடிவுற்று தற்போது மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நகர்மன்றத் தலைவர் S.S. ஜெயமூர்த்தி அவர்கள் தலைமை தாங்கி திறந்துவைத்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாக நகர்மன்றத் துணைத் தலைவர் ஜீனத் முபாரக், பரகத் நகர் பள்ளிவாசல் முத்தவல்லி பிலால் முஹம்மத், செயலாளர் அப்துல் நாசர், நகர்மன்ற உறுப்பினர்கள் ஜாகீர் உசேன், முஹம்மது பாரூக், வீரப்பன், சுகுமார், சண்முகம், ஜாமிஆ மஸ்ஜித் உறுப்பினர்கள் அமீர் பாஷா, ஹாஜாத் அலி, பரக்கத் நகர் ஜமாத்தார்கள் அப்துல் குத்தூஸ், அஸ்ரப் அலி, யஹ்யா, சேட்டு (எ) சர்புதீன், ஹபீப், கிவ்ஸ் சங்க நிர்வாகிகள் ரியாஸ், இலியாஸ், பயாஸ், திமுக பிரமுகர்கள் கமால், ஜாகிர் உசேன், மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டார்கள்.

மேலும் ஸ்மார்ட் டிவி(Smart TV), குழந்தைகள் நாற்காலி, புத்தகங்கள் மற்றும் அங்கன்வாடிக்கு தேவையான இதர பொருட்கள் Y. நாசர் அலி அவர்கள் வழங்கினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post புதுப்பிக்கப்பட்ட பரகத் நகர் அங்கன்வாடி மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6315/feed/ 0
பழுதடைந்த பால்வாடியை பளபளப்பாக மாற்றிய பரகத் நகர் கவுன்சிலர்…! https://www.kottakuppamtimes.com/6274/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25ae%25b4%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%259f%25e0%25af%2588%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4-%25e0%25ae%25aa%25e0%25ae%25be%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25af%2588-%25e0%25ae%25aa%25e0%25ae%25b3%25e0%25ae%25aa https://www.kottakuppamtimes.com/6274/#respond Sun, 17 Apr 2022 11:14:29 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6274 கோட்டக்குப்பம் நகராட்சியின் பரகத் நகர் பகுதியில் இயங்கி வரும் பால்வாடி (குழந்தைகள் மையம்) மழைக்காலங்களில் மழை தேங்கியும் மற்ற நாட்களில் சாலையிலிருந்து பால்வாடி கட்டிடத்தின் உள்ளே செல்ல சமமான பாதை இல்லாமல் பொதுமக்களும் குழந்தைகளும் மிகவும் சிரமப்பட்டு வந்தார்கள். தடுப்பூசி போடுவதற்கு வரும் கர்ப்பிணிப் பெண்களும், தாய்மார்களும் மிகுந்த சிரமத்துடன் அக்கட்டிடத்தை பயன்படுத்தி வந்துள்ளார்கள். மேலும் குழந்தைகள் அமரும் இடம் சமதளமாக இல்லாமல் தரை முழுவதும் பழுதடைந்து இருந்தது. இதனைக்கண்ட...

The post பழுதடைந்த பால்வாடியை பளபளப்பாக மாற்றிய பரகத் நகர் கவுன்சிலர்…! appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் நகராட்சியின் பரகத் நகர் பகுதியில் இயங்கி வரும் பால்வாடி (குழந்தைகள் மையம்) மழைக்காலங்களில் மழை தேங்கியும் மற்ற நாட்களில் சாலையிலிருந்து பால்வாடி கட்டிடத்தின் உள்ளே செல்ல சமமான பாதை இல்லாமல் பொதுமக்களும் குழந்தைகளும் மிகவும் சிரமப்பட்டு வந்தார்கள். தடுப்பூசி போடுவதற்கு வரும் கர்ப்பிணிப் பெண்களும், தாய்மார்களும் மிகுந்த சிரமத்துடன் அக்கட்டிடத்தை பயன்படுத்தி வந்துள்ளார்கள். மேலும் குழந்தைகள் அமரும் இடம் சமதளமாக இல்லாமல் தரை முழுவதும் பழுதடைந்து இருந்தது.

இதனைக்கண்ட பரகத் நகர், நகர்மன்ற உறுப்பினர் Y. நாசர் அலி அவர்கள் உடனடியாக அந்த கட்டிடம் மற்றும் பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு பால்வாடியில் சூழ்ந்து தண்ணீர் நிற்பதை தவிர்க்கும் வண்ணமாக மண் நிரப்பி பால்வாடி பகுதி முழுவதும் சம படுத்தப்படட்டு மற்றும் தரை தளங்களில் தரைகள் முழுவதுமாக சிமெண்ட் மூலம் பூசி சமன்படுத்தி கட்டிடத்திற்கு புது வண்ணம் தீட்டி இன்று புது பொலிவுடன் திகழ செய்துள்ளார்.

பல ஆண்டுகளாக இருந்து வந்த மக்களின் சிரமத்தை போக்க நடவடிக்கை எடுத்த நகர்மன்ற உறுப்பினர் Y. நாசர் அலி அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

The post பழுதடைந்த பால்வாடியை பளபளப்பாக மாற்றிய பரகத் நகர் கவுன்சிலர்…! appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6274/feed/ 0
கோட்டக்குப்பம் பரகத் நகர் அல்-மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸாவின் 12-ஆம் ஆண்டு விழா. https://www.kottakuppamtimes.com/6150/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25b0%25e0%25ae%2595%25e0%25ae%25a4%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%2595-4 https://www.kottakuppamtimes.com/6150/#respond Mon, 28 Mar 2022 05:57:44 +0000 https://www.kottakuppamtimes.com/?p=6150 கோட்டக்குப்பம் பரகத் நகர், அல் மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸாவின் 12-ஆம் ஆண்டு விழா நேற்று (27-03-2022) நடைபெற்றது. இதில் 360 மாணவ-மாணவிகள் மார்க்கக் கல்வி பயின்று வரும் மதரஸாவின் ஆண்டுவிழா நடைபெற்றது. மதரஸாவில் பாடம் பயின்று வரும் மாணவ மாணவிகள் தாங்கள் கற்ற கல்வியை வெளிப்படுத்தும் விதமாக நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை பள்ளிவாசல் மற்றும் மதரஸா நிர்வாகிகள் செய்திருந்தார்கள். இந்நிகழ்ச்சியில் மாணவ/மாணவிகளின் பெற்றோர்கள் மதியம் 2 மணி...

The post கோட்டக்குப்பம் பரகத் நகர் அல்-மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸாவின் 12-ஆம் ஆண்டு விழா. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் பரகத் நகர், அல் மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸாவின் 12-ஆம் ஆண்டு விழா நேற்று (27-03-2022) நடைபெற்றது. இதில் 360 மாணவ-மாணவிகள் மார்க்கக் கல்வி பயின்று வரும் மதரஸாவின் ஆண்டுவிழா நடைபெற்றது.

மதரஸாவில் பாடம் பயின்று வரும் மாணவ மாணவிகள் தாங்கள் கற்ற கல்வியை வெளிப்படுத்தும் விதமாக நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை பள்ளிவாசல் மற்றும் மதரஸா நிர்வாகிகள் செய்திருந்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாணவ/மாணவிகளின் பெற்றோர்கள் மதியம் 2 மணி முதலே காத்திருந்து, மதியம் 3 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி தொழுகை இடைவேளையை தவிர்த்து இடைவெளி இல்லாமல் தொடர்ந்து இரவு 10.45 மணி வரை நடைபெற்றது.

அனைத்து மாணவ மாணவிகளின் மேடையில் ஏற்றி பேசவைத்த மௌலானா அக்பர் ஹஜ்ரத் தலைமையிலான ஆசிரிய பெருமக்கள் சிறப்பாக செய்திருந்தார்கள்.

அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்காக பரிசுப் பொருட்கள் மற்றும் பொருளாதார உதவி செய்த அனைவருக்கும் நிர்வாகி நன்றியை தெரிவித்துக் கொண்டார்கள்.

நிகழ்ச்சியை பள்ளிவாசல் முத்தவல்லி பிலால் முஹம்மது, செயலாளர் அப்துல் நாசர், பொருளாளர் இப்ராஹீம் உள்ளிட்ட நிர்வாகிகளும், மதரஸா பொறுப்பாளர்கள் சபீர் வக்கீல், E. முஹம்மது ஷரீப், முஹம்மது ஷரீப் உள்ளிட்ட குழுவினர் சிறப்பாக செய்திருந்தார்கள்.

மாணவ மாணவிகளுக்கு பேரூராட்சி முன்னாள் தலைவர் அப்துல் ஹமீது தலைமையில் ஊரின் முக்கிய விருந்தினர்கள் பரிசுப் பொருட்களை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் 22-வது வார்டு கவுன்சிலர் நாசர், 17-வது வார்டு கவுன்சிலர் ரஹ்மத்துல்லாஹ் மற்றும் அனைத்து பள்ளிவாசல் முத்தவல்லிகள், இமாம்கள், நிர்வாகிகள், மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

The post கோட்டக்குப்பம் பரகத் நகர் அல்-மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸாவின் 12-ஆம் ஆண்டு விழா. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/6150/feed/ 0