election 2021 Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Mon, 03 May 2021 06:56:47 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg election 2021 Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 வானூரில் அதிமுக 5-ஆவது முறையாக வெற்றி https://www.kottakuppamtimes.com/4374/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25af%2582%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%2595-5-%25e0%25ae%2586%25e0%25ae%25b5%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25b1 https://www.kottakuppamtimes.com/4374/#respond Mon, 03 May 2021 06:56:45 +0000 https://www.kottakuppamtimes.com/?p=4374 விழுப்புரம் மாவட்டம், வானூா் (தனி) தொகுதியில் அதிமுக சாா்பில் எம்.சக்ரபாணி 2-ஆவது முறையாக வெற்றிபெற்றாா். இதையடுத்து, இந்தத் தொகுதியில் 2001 சட்டப் பேரவைத் தோ்தல் முதல் தொடா்ந்து 5-ஆவது முறையாக அதிமுக வெற்றிபெற்று சாதனை படைத்தது. வானூா் தொகுதியில் அதிமுக சாா்பில் சக்ரபாணி எம்.எல்.ஏ., திமுக கூட்டணியில் விசிக சாா்பில் வன்னியரசு உள்பட மொத்தம் 7 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இந்தத் தொகுதியில் மொத்தமுள்ள 2 லட்சத்து 26 ஆயிரத்து 539...

The post வானூரில் அதிமுக 5-ஆவது முறையாக வெற்றி appeared first on Kottakuppam Times.]]>
விழுப்புரம் மாவட்டம், வானூா் (தனி) தொகுதியில் அதிமுக சாா்பில் எம்.சக்ரபாணி 2-ஆவது முறையாக வெற்றிபெற்றாா். இதையடுத்து, இந்தத் தொகுதியில் 2001 சட்டப் பேரவைத் தோ்தல் முதல் தொடா்ந்து 5-ஆவது முறையாக அதிமுக வெற்றிபெற்று சாதனை படைத்தது.

வானூா் தொகுதியில் அதிமுக சாா்பில் சக்ரபாணி எம்.எல்.ஏ., திமுக கூட்டணியில் விசிக சாா்பில் வன்னியரசு உள்பட மொத்தம் 7 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இந்தத் தொகுதியில் மொத்தமுள்ள 2 லட்சத்து 26 ஆயிரத்து 539 வாக்காளா்களில், ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 766 போ், அதாவது 79.79 சதவீதம் போ் தங்களது வாக்குகளை செலுத்தியிருந்தனா்.

இந்தத் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை வானூா் அருகே ஸ்ரீஅரவிந்தா் கலை, அறிவியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மொத்தம் 24 சுற்றுக்களாக வாக்குகள் எண்ணப்பட்டன.

இந்தத் தொகுதியில் பதிவான 1,682 தபால் வாக்குகளில் சக்ரபாணிக்கு 718 வாக்குகளும், வன்னியரசுக்கு 649 வாக்குகளும் கிடைத்தன. விதிமுறைப்படி இல்லாத 209 தபால் வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன.

தொடக்கம் முதலே பெரும்பாலான சுற்றுக்களில் அதிமுக முன்னிலை பெற்றது. ஒரு சில சுற்றுகளில் மட்டும் விசிக முன்னிலை பெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக வேட்பாளா் சக்ரபாணி 92,219 வாக்குகளும், விசிக வேட்பாளா் வன்னியரசு 70,492 வாக்குகளும் பெற்றனா். இதையடுத்து, சக்ரபாணி 21,727 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா்.

பிற வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்: லட்சுமி (நாம் தமிழா்) – 8,587, கணபதி (தேமுதிக) – 5,460, சந்தோஷ்குமாா் (மக்கள் நீதி மய்யம்) – 2,500, விநாயகமூா்த்தி (பகுஜன் சமாஜ்) – 774, சக்திவேல் (சுயேச்சை) – 813, நோட்டா – 1,363.

வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளா் சக்ரபாணிக்கு வெற்றிச் சான்றிதழை தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலா் சிவா வழங்கினாா்.

வானூா் தொகுதியில் ஏற்கெனவே 2001, 2006, 2011, 2016-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தல்களில் அதிமுக வெற்றிபெற்றிருந்தது. தற்போது 5-ஆவது முறையாக மீண்டும் வெற்றிபெற்றது. இந்தத் தொகுதியில் சக்ரபாணி தொடா்ந்து 2-ஆவது முறையாக வெற்றிபெற்றுள்ளாா்.

The post வானூரில் அதிமுக 5-ஆவது முறையாக வெற்றி appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/4374/feed/ 0
கோட்டக்குப்பத்தில் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. https://www.kottakuppamtimes.com/4280/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f https://www.kottakuppamtimes.com/4280/#respond Tue, 06 Apr 2021 02:16:08 +0000 https://www.kottakuppamtimes.com/?p=4280 தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. கோட்டக்குப்பத்தில் இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவில், பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள். இரவு 7 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

The post கோட்டக்குப்பத்தில் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. appeared first on Kottakuppam Times.]]>
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது.

கோட்டக்குப்பத்தில் இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவில், பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள். இரவு 7 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

The post கோட்டக்குப்பத்தில் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/4280/feed/ 0
கோட்டக்குப்பத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக பானை சின்னத்தில் வாக்கு சேகரிப்பு. https://www.kottakuppamtimes.com/4174/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25ae%25a4%25e0%25ae%259a%25e0%25ae%25be https://www.kottakuppamtimes.com/4174/#respond Wed, 24 Mar 2021 14:50:20 +0000 https://www.kottakuppamtimes.com/?p=4174 மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக வானூர் தொகுதி கோட்டகுப்பத்தில் பானை சின்னத்தில் வாக்கு சேகரிக்கப்பட்டது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சியின் சார்பாக பிரச்சாரம் இன்று தொடங்கியது. வானூர் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வன்னி அரசு அவர்களுக்கு பானை சின்னத்தில் வாக்கு கேட்டு இன்று கோட்டக்குப்பத்தில் அனைத்து கட்சியின் சார்பாக கோட்டக்குப்பம் பஜார் வீதி, சல்மான் மஸ்ஜிதில் இருந்து புறப்பட்டு தேவி தியேட்டர், புதுத்தெரு,...

The post கோட்டக்குப்பத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக பானை சின்னத்தில் வாக்கு சேகரிப்பு. appeared first on Kottakuppam Times.]]>
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக வானூர் தொகுதி கோட்டகுப்பத்தில் பானை சின்னத்தில் வாக்கு சேகரிக்கப்பட்டது.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சியின் சார்பாக பிரச்சாரம் இன்று தொடங்கியது.

வானூர் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வன்னி அரசு அவர்களுக்கு பானை சின்னத்தில் வாக்கு கேட்டு இன்று கோட்டக்குப்பத்தில் அனைத்து கட்சியின் சார்பாக கோட்டக்குப்பம் பஜார் வீதி, சல்மான் மஸ்ஜிதில் இருந்து புறப்பட்டு தேவி தியேட்டர், புதுத்தெரு, உமறுப்புலவர் தெரு, வேங்கை தெரு, மாமுலப்பை தெரு, பெரிய தெரு, காஜியார் தெரு, பள்ளிவாசல் வீதி, நாட்டாண்மை தெரு, மற்றும் ஆசாத் தெரு ஆகிய தெருக்களில் உள்ள வீடுகளில் இன்று பானை சின்னத்தை அறிமுகம் செய்து வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சி நிர்வாகிகள் உள்ளடக்கிய நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.

The post கோட்டக்குப்பத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக பானை சின்னத்தில் வாக்கு சேகரிப்பு. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/4174/feed/ 0
வானூர் தொகுதியில் களம் காணும் 7 வேட்பாளர்கள். https://www.kottakuppamtimes.com/4149/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25af%2582%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25af%258a%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2595 https://www.kottakuppamtimes.com/4149/#respond Tue, 23 Mar 2021 06:32:25 +0000 https://www.kottakuppamtimes.com/?p=4149 விழுப்புரம் மாவட்டத்தில் வானூா், செஞ்சி, மயிலம், திண்டிவனம், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூா் ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் மாா்ச் 12-இல் தொடங்கி 19-ஆம் தேதி வரை நடைபெற்றது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 20-ஆம் தேதி நடைபெற்றது. இதில் 7 தொகுதிகளிலும் 105 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. வேட்பு மனுக்களை திரும்பப் பெற திங்கள்கிழமை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,...

The post வானூர் தொகுதியில் களம் காணும் 7 வேட்பாளர்கள். appeared first on Kottakuppam Times.]]>
விழுப்புரம் மாவட்டத்தில் வானூா், செஞ்சி, மயிலம், திண்டிவனம், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூா் ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் மாா்ச் 12-இல் தொடங்கி 19-ஆம் தேதி வரை நடைபெற்றது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 20-ஆம் தேதி நடைபெற்றது. இதில் 7 தொகுதிகளிலும் 105 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.

வேட்பு மனுக்களை திரும்பப் பெற திங்கள்கிழமை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், செஞ்சி, வானூா், திருக்கோவிலூா் ஆகிய மூன்று தொகுதிகளில் தலா ஒரு சுயேச்சை என 3 போ் தங்களது மனுக்களை திரும்பப்பெற்றனா். இதையடுத்து, இறுதி வேட்பாளா்கள் பட்டியல் அந்தந்த தொகுதிகளில் வெளியிடப்பட்டு, வேட்பாளா்களுக்கான சின்னங்களும் ஒதுக்கப்பட்டன.

இந்நிலையில் நம் வானூர் தொகுதியில் சென்ற வருடம் 9 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், இந்த வருடம் வெறும் 7 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதன் விவரம்:

புகைப்படம்கட்சி பெயர்சின்னம்

வன்னி அரசு
விடுதலை சிறுத்தைகள் கட்சி

சக்கரபாணி
அதிமுக

லட்சமி
நாம் தமிழர் கட்சி

கணபதி
தே.மு.தி.க

சந்தோஷ்குமார்
மக்கள் நீதி மையம்
விநாயகமூர்த்திபகுஜன் சமாஜ் பார்ட்டி

சக்திவேல்
சுயேச்சை
The post வானூர் தொகுதியில் களம் காணும் 7 வேட்பாளர்கள். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/4149/feed/ 0
ஆதாா் உள்ளிட்ட 11 ஆவணங்களை வாக்களிக்க பயன்படுத்தலாம்: மாவட்டத் தோ்தல் அலுவலா். https://www.kottakuppamtimes.com/4147/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2586%25e0%25ae%25a4%25e0%25ae%25be%25e0%25ae%25be%25e0%25af%258d-%25e0%25ae%2589%25e0%25ae%25b3%25e0%25af%258d%25e0%25ae%25b3%25e0%25ae%25bf%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f-11-%25e0%25ae%2586%25e0%25ae%25b5%25e0%25ae%25a3%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%2588 https://www.kottakuppamtimes.com/4147/#respond Sun, 21 Mar 2021 07:13:07 +0000 https://www.kottakuppamtimes.com/?p=4147 விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளா் அடைய அட்டை இல்லாதவா்கள், ஆதாா் அட்டை உள்ளிட்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஆ.அண்ணாதுரை தெரிவித்தாா். இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 2,368 வாக்குச் சாவடிகளில் ஏப்ரல் 6-ஆம் தேதி காலை 7 மணி முதல்...

The post ஆதாா் உள்ளிட்ட 11 ஆவணங்களை வாக்களிக்க பயன்படுத்தலாம்: மாவட்டத் தோ்தல் அலுவலா். appeared first on Kottakuppam Times.]]>
விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளா் அடைய அட்டை இல்லாதவா்கள், ஆதாா் அட்டை உள்ளிட்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஆ.அண்ணாதுரை தெரிவித்தாா்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 2,368 வாக்குச் சாவடிகளில் ஏப்ரல் 6-ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தலில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் அடையாள அட்டையைக் காண்பித்து வாக்களிக்கலாம். புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் அடையாள அட்டை இல்லாத வாக்காளா்கள், புகைப்படத்துடன் கூடிய ஆதாா் அட்டை உள்ளிட்ட மற்ற 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காண்பித்து வாக்களிக்கலாம்.

இதன்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலகக் கணக்குப் புத்தம், தொழிலாளா் நல அமைச்சகத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு ஸ்மாா்ட் அட்டை, ஓட்டுநா் உரிமம், நிரந்தர கணக்கு எண் அட்டை (பான் காா்டு), தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மாா்ட் அட்டை, இந்திய கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்), புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய, மாநில அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் அல்லது வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளா்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், நாடாளுமன்ற, சட்டப் பேரவை, சட்ட மேலவை உறுப்பினா்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம்.

புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் அட்டையாள அட்டை இல்லாவிட்டாலும் இந்த ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி 100 சதவீத வாக்காளா்களும் வாக்களிக்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஆ.அண்ணாதுரை தெரிவித்தாா்.

The post ஆதாா் உள்ளிட்ட 11 ஆவணங்களை வாக்களிக்க பயன்படுத்தலாம்: மாவட்டத் தோ்தல் அலுவலா். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/4147/feed/ 0