Corona awareness Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Sat, 08 Jan 2022 16:01:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg Corona awareness Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பதில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிப்பு. https://www.kottakuppamtimes.com/5616/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25ae%2595%25e0%25af%258d-2 https://www.kottakuppamtimes.com/5616/#respond Sat, 08 Jan 2022 16:01:14 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5616 கோட்டக்குப்பதில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு காவல்துறை சார்பில் அபராதம் விதிக்கப்பட்டது. ஒமைக்ரான் தொற்று பரவலை தடுக்கும் விதமாக காவல் துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டன. கோட்டக்குப்பம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், கடந்த சில தினங்களாக காவல் ஆய்வாளர் திரு. ராபின்சன் அவர்கள் தலைமையில் முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, முகக்கவசம் அணியாதவர்களுக்கு இலவசமாக முகக்கவசங்கள் வழங்கி வந்தார். மேலும், விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்...

The post கோட்டக்குப்பதில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிப்பு. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பதில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு காவல்துறை சார்பில் அபராதம் விதிக்கப்பட்டது. ஒமைக்ரான் தொற்று பரவலை தடுக்கும் விதமாக காவல் துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டன.

கோட்டக்குப்பம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், கடந்த சில தினங்களாக காவல் ஆய்வாளர் திரு. ராபின்சன் அவர்கள் தலைமையில் முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, முகக்கவசம் அணியாதவர்களுக்கு இலவசமாக முகக்கவசங்கள் வழங்கி வந்தார். மேலும், விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், இன்று(08/01/2022) கோட்டக்குப்பதில் காவல் ஆய்வாளர் தலைமையில், முகக்கசவம் அணியாத பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் 6 பேருக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அவர்களுக்கு காவல் ஆய்வாளர் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்.

இனிவரும் காலங்களில் பொது மக்கள், வியாபாரிகள், கடை ஊழியர்கள் அனைவரும் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது மற்றும் கைகளை அடிக்கடி கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது போன்ற ‘கோவிட் கட்டுப்பாட்டு நெறிமுறைகள்‘ கண்டிப்பாக கடைபிடிக்குமாறு கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

The post கோட்டக்குப்பதில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிப்பு. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5616/feed/ 0
கோட்டக்குப்பத்தில் கொரோனா விழிப்புணர்வு கூட்டம். https://www.kottakuppamtimes.com/5565/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%258a%25e0%25ae%25b0-5 https://www.kottakuppamtimes.com/5565/#respond Wed, 05 Jan 2022 15:35:41 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5565 கோட்டக்குப்பதில் இன்று 05.01.2022, மாலை 5:00 மணிக்கு, மனோன்மணி திருமண மண்டபத்தில் கோட்டக்குப்பம காவல் ஆய்வாளர் திரு. ராபின்சன் அவர்கள் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ECR ரோட்டில் அமைந்துள்ள கடற்கரை கிராமத்தை சேர்ந்த முக்கியஸ்தர்களிடம் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை குறித்து காவல் ஆய்வாளர் எடுத்துரைத்தார். அனைவரும் முககவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். பொது இடங்களில் முககவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். பொது இடங்களில் முககவசம்...

The post கோட்டக்குப்பத்தில் கொரோனா விழிப்புணர்வு கூட்டம். appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பதில் இன்று 05.01.2022, மாலை 5:00 மணிக்கு, மனோன்மணி திருமண மண்டபத்தில் கோட்டக்குப்பம காவல் ஆய்வாளர் திரு. ராபின்சன் அவர்கள் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ECR ரோட்டில் அமைந்துள்ள கடற்கரை கிராமத்தை சேர்ந்த முக்கியஸ்தர்களிடம் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை குறித்து காவல் ஆய்வாளர் எடுத்துரைத்தார்.

  1. அனைவரும் முககவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்.
  2. பொது இடங்களில் முககவசம் கண்டிப்பாக அணிய வேண்டும்.
  3. பொது இடங்களில் முககவசம் அணியாதவர்கள் அபராதம் செலுத்த வேண்டும்.
  4. வழிபாட்டு தலங்களில் அனுமதியில்லாத நாட்களில் வழிபாடு நடத்த கூடாது.
  5. தற்போது கால்நடைகளால் சாலைகளில் விபத்து ஏற்பட்டு வருகிறது. கால்நடைகளை வளர்ப்பவர்கள் அவர்களுடைய கால்நடைகள் சாலைகளில் திரிய அனுமதிக்க கூடாது. மேலும், சாலைகளில் கால்நடைகளை விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
  6. தமிழக அரசு லாக்டவுண் அறிவிப்பை மீறாமல் கடைபிடிக்க வேண்டும்.
  7. வாகனங்களில் வருபவர்கள் ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டினால் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும்.

என்று காவல் ஆய்வாளர் கூட்டத்தில் எடுத்துரைத்தார்.

The post கோட்டக்குப்பத்தில் கொரோனா விழிப்புணர்வு கூட்டம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5565/feed/ 0
கோட்டக்குப்பதில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய இன்ஸ்பெக்டர். https://www.kottakuppamtimes.com/5559/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595 https://www.kottakuppamtimes.com/5559/#respond Tue, 04 Jan 2022 13:00:30 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5559 இந்தியாவில் ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு 1,700-ஐ கடந்திருப்பது சற்று கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், கோட்டக்குப்பம் பகுதியில் கொரோனாவின் வீரியத்தை உணராத பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் சுற்றி திரிகின்றனர். இதனால் அவர்களை மட்டுமின்றி அவர்களை சார்ந்தவர்களுக்கும் நோய் தொற்று எளிதில் பரவுகிறது. இந்நிலையில், கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் திரு ம. ராபின்சன் மற்றும் போலீசார், இன்று 04.01.2022, மாலை...

The post கோட்டக்குப்பதில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய இன்ஸ்பெக்டர். appeared first on Kottakuppam Times.]]>
இந்தியாவில் ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு 1,700-ஐ கடந்திருப்பது சற்று கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும், கோட்டக்குப்பம் பகுதியில் கொரோனாவின் வீரியத்தை உணராத பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் சுற்றி திரிகின்றனர். இதனால் அவர்களை மட்டுமின்றி அவர்களை சார்ந்தவர்களுக்கும் நோய் தொற்று எளிதில் பரவுகிறது.

இந்நிலையில், கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் திரு ம. ராபின்சன் மற்றும் போலீசார், இன்று 04.01.2022, மாலை 4: 30 மணிக்கு, கோட்டகுப்பம் ரவுண்டானாவில் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் முகக்கவசம் அணியாதவர்களை அழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அப்போது முகக்கவசம் அணியாத 50 வாகன ஓட்டிகளுக்கு முகக்கவசங்களை அவர்கள் வழங்கினர்.

The post கோட்டக்குப்பதில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய இன்ஸ்பெக்டர். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5559/feed/ 0
கோட்டக்குப்பதில் கொரோனா வைரஸ் தொற்று விழிப்புணர்வு கூட்டம். https://www.kottakuppamtimes.com/4243/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%258a%25e0%25ae%25b0%25e0%25af%258b%25e0%25ae%25a9-3 https://www.kottakuppamtimes.com/4243/#respond Sat, 27 Mar 2021 08:00:42 +0000 https://www.kottakuppamtimes.com/?p=4243 கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவுவதால் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் குறித்து சுகாதாரத் துறை, காவல்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் இணைந்து கோட்டக்குப்பம் பேரூராட்சிக்குட்பட்ட வணிகர்கள் பொதுமக்களுக்கு இன்று (27-03-2021) காலை 11:00 மணி அளவில் கோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் வட்டார மருத்துவ அலுவலர் Dr. ஜெயபிரகாஷ், பேரூராட்சி செயல் அலுவலர் ராமலிங்கம், கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர்...

The post கோட்டக்குப்பதில் கொரோனா வைரஸ் தொற்று விழிப்புணர்வு கூட்டம். appeared first on Kottakuppam Times.]]>
கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவுவதால் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் குறித்து சுகாதாரத் துறை, காவல்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் இணைந்து கோட்டக்குப்பம் பேரூராட்சிக்குட்பட்ட வணிகர்கள் பொதுமக்களுக்கு இன்று (27-03-2021) காலை 11:00 மணி அளவில் கோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் வட்டார மருத்துவ அலுவலர் Dr. ஜெயபிரகாஷ், பேரூராட்சி செயல் அலுவலர் ராமலிங்கம், கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் சரவணன், மற்றும் சுகாதார ஆய்வாளர் ரவி ஆகியோர் கலந்துக்கொண்டு வியபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் ‘கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை, அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்’ என்ற எடுத்து கூறினார்.

நிகழ்வின் முடிவில் வியாபாரிகளும் மற்றும் பொதுமக்களும் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

The post கோட்டக்குப்பதில் கொரோனா வைரஸ் தொற்று விழிப்புணர்வு கூட்டம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/4243/feed/ 0
கோட்டக்குப்பதில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம். https://www.kottakuppamtimes.com/4225/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%258a%25e0%25ae%25b0%25e0%25af%258b%25e0%25ae%25a9-2 https://www.kottakuppamtimes.com/4225/#respond Thu, 25 Mar 2021 12:06:53 +0000 https://www.kottakuppamtimes.com/?p=4225 கொரோனா தொற்று 2-வது அலை தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் இன்று பேரூராட்சி செயல் அலுவலர் ராமலிங்கம் அவர்களின் தலைமையையில் கோட்டக்குப்பம் அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் வட்டார மருத்துவ அலுவலர் Dr. ஜெயபிரகாஷ், கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் சரவணன், சுகாதார மேற்பார்வையாளர் ராமலிங்கம், சுகாதார ஆய்வாளர் ரவி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் காமராஜ் ஆகியோர் கலந்துக்கொண்டு வியபாரிகள் சங்க நிர்வாகிகளுடன்...

The post கோட்டக்குப்பதில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம். appeared first on Kottakuppam Times.]]>
கொரோனா தொற்று 2-வது அலை தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் இன்று பேரூராட்சி செயல் அலுவலர் ராமலிங்கம் அவர்களின் தலைமையையில் கோட்டக்குப்பம் அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் வட்டார மருத்துவ அலுவலர் Dr. ஜெயபிரகாஷ், கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் சரவணன், சுகாதார மேற்பார்வையாளர் ராமலிங்கம், சுகாதார ஆய்வாளர் ரவி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் காமராஜ் ஆகியோர் கலந்துக்கொண்டு வியபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் கொரோணா நோய் தடுப்பு குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

தடுப்பூசி குறித்து பரவும் வதந்திகளால், தடுப்பூசி போட்டுக்கொள்வதில் பலரும் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், ‘கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை, அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்’ என்ற கோட்டக்குப்பம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வருகிற சனிக்கிழமை(27-03-2021) காலை 10:30 மணி அளவில், அனைத்து வியாபாரிகளுக்கும் கோட்டக்குப்பம் அரசு மேல்நிலை பள்ளியில், “தடுப்பூசியைப் பற்றி விழிப்புணர்வு” நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

The post கோட்டக்குப்பதில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/4225/feed/ 0
கோட்டக்குப்பம் மக்களாகிய நாம், விழிப்புடன் இருக்க வேண்டிய காலம் இது. இந்த கொரோனா தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள! https://www.kottakuppamtimes.com/2703/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25ae%25be%25e0%25ae%2595%25e0%25ae%25bf https://www.kottakuppamtimes.com/2703/#respond Wed, 19 Aug 2020 12:45:08 +0000 https://www.kottakuppamtimes.com/?p=2703 கொரானா கொதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரானா நோய் காரணமாக உலகமே ஸ்தம்பித்து நிற்கிறது. நோய்த் தொற்றினால் அனைத்தும் மேற்கொண்டு முன்னேறாமல் அப்படியே நிற்கிறது. அதன் தாக்கம் இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அரசு அறிவித்த ஒழுங்கு நடவடிக்கைகளை மக்கள் பின்பற்றியும், பின்பற்றாமலும் இருப்பதினால் தினந்தோறும் இந்தியாவில் ஒரு நாள் தொற்று 50 ஆயிரத்தை தாண்டி செல்கிறது. நமது தமிழ்நாட்டில் அதன் தாக்கம் சமீபமாக ஒரு நாளைக்கு 6 ஆயிரத்தை...

The post கோட்டக்குப்பம் மக்களாகிய நாம், விழிப்புடன் இருக்க வேண்டிய காலம் இது. இந்த கொரோனா தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள! appeared first on Kottakuppam Times.]]>
கொரானா கொதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

கொரானா நோய் காரணமாக உலகமே ஸ்தம்பித்து நிற்கிறது.

நோய்த் தொற்றினால் அனைத்தும் மேற்கொண்டு முன்னேறாமல் அப்படியே நிற்கிறது.

அதன் தாக்கம் இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அரசு அறிவித்த ஒழுங்கு நடவடிக்கைகளை மக்கள் பின்பற்றியும், பின்பற்றாமலும் இருப்பதினால் தினந்தோறும் இந்தியாவில் ஒரு நாள் தொற்று 50 ஆயிரத்தை தாண்டி செல்கிறது.

நமது தமிழ்நாட்டில் அதன் தாக்கம் சமீபமாக ஒரு நாளைக்கு 6 ஆயிரத்தை சராசரியாக கொண்டுள்ளது. நாம் தொலைக்காட்சிகளிலும் செய்தித்தாள்களிலும், இந்த ஊரில் எத்தனை பேருக்கு கொரானா தொற்று ஏற்பட்டு சிகிச்சை அளிக்கிறார்கள் என்று அந்த செய்திகளை அன்னியமாக கடந்து கடந்து வந்தோம்.

ஆரம்பத்தில் ஒரே ஒரு தொற்றினால் நமது ஊர் அரசு நடவடிக்கைகளாலும் மக்களின் பதட்டத்தினாலும் அல்லோகலப்பட்டது.

நாட்கள் செல்லச் செல்ல மக்களிடையே காணப்பட்ட விழிப்புணர்வின் காரணமாக அச்சத்தின் காரணமாகவும் அரசு நடவடிக்கை காரணமாகவும், நமது ஊரில் கொரானா தொற்று இல்லாத நிலையில் இருந்தோம்.

ஆனால் தற்பொழுது //கொரானாவோடு வாழப் பழகிக் கொள்ளுங்கள்// என்ற கூற்றுக்கு ஏற்ப நாம் எந்தவிதமான கட்டுப்பாடுகளையும் பின்பற்றாமல், நமக்கு “வராது நம் அருகில் இருக்காது” என்ற அலட்சியத்தினால், இன்று நமது அருகில் உள்ள புதுச்சேரியில் ஒரு நாளின் தொற்று எண்ணிக்கை சராசரியாக 400 கடக்கிறது. அதன் தாக்கமாக கோட்டகுப்பத்தில் பல பேர்களுக்கு அறிந்தும் அறியாமல் தொற்று இருந்து கொண்டு இருக்கிறது.

இதை நாம் இங்கு சொல்லக் காரணம் நம்மில் அனைவருக்கும் இதுவரையில் பரிசோதனை செய்யப்படவில்லை. கொரானா நோயினாலோ அல்லது வேறு ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் அவர்கள் தாங்களாகவே சென்று பரிசோதனை கூடங்களில் பரிசோதனை செய்து கொண்டதில் அவர்களே ஆச்சரியப்படும் வகையில் அவர்களுக்கு கொரானா தொற்று இருப்பது அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.

சில சகோதரர்கள் சந்தேகத்தின் பேரில் தங்களைத் தாங்களாகவே பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டதில், அதில் தங்களுக்கு கொரானா தொற்று உள்ளது என்ற பரிசோதனை முடிவுகள் கிடைத்ததால் அவர்களும் அவரின் குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ள வீட்டாரும் மிகுந்த அதிர்ச்சி அடைந்து உள்ளார்கள்.

இதற்கெல்லாம் என்ன காரணம் என்பதை நாம் முழுமையாக உணர வேண்டும்.

செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் ஒரு தேர்தல் முடிவினை அறிவிப்பது போல இந்த ஊரில் எத்தனை பேருக்கு என்று தினம் தினம் செய்தி அறிவிப்பு வருகிறது. நாம் போற போக்கில் கண்டும் கேட்டும் கடந்து சென்ற நிலையில், இன்று நமதூரில் நமது அருகிலேயே நமக்கு வேண்டப்பட்டவருக்கு, நமது சகோதரர்களுகோ நமது நண்பருக்கோ தொற்று உள்ளது என்பதை அறியும்போது நாம் நம்முடைய செயல்பாட்டில் மிகுந்த அலட்சியமாக இருப்பதையே காட்டுகிறது.

தேவையில்லாமல் வெளியேறுவதையும். முகக்கவசம் இல்லாமல் பாதுகாப்பு வளையம் இல்லாமல் சென்று வருவதும் இதற்கெல்லாம் முக்கியக் காரணமாக அறியப்படுகிறது.

இணை நோயின் காரணமாக மருத்துவம் பார்க்கச் சென்றாலும் கொரானா பரிசோதனை செய்யப்பட்டு அதில் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் இணை நோய்க்கு மருத்துவம் பார்க்காமல் தனிமைப்படுத்தப்படுவது, தற்போது நடைபெற்று வருகிறது. இதன் மூலம் சம்மந்தப்பட்டவர்கள் மன உளைச்சல் அடைந்து அதனால் சில மரணங்கள் ஏற்பட்டதை நாம் அறிகிறோம்.

நமக்கு நோய் தொற்று ஏற்பட்டால் நம்மோடு முடிகின்ற விஷயம் இல்லை. நமது பிள்ளைகள், நமது மனைவி, நமது சகோதரர்கள், நமது தாய் தந்தையர்கள், சுற்றத்தார்கள், அக்கம்பக்கத்தினர் போன்ற பலருக்கும் அதன் மூலம் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ள நிலையில் நம்மோடு முடியக்கூடிய விசயம் இல்லாததால் நாம் இந்த விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

நோய்த் தொற்றின் காரணமாக பல விதமான விழிப்புணர்வு காணொளிகள் அறிவிப்புகள் செய்யப்பட்டும் அந்த அறிவிப்புகளை எல்லாம் நாம் அலட்சியம் செய்து, இன்று நமது பகுதியில் பல சகோதரர்கள் நோய்த் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதை அறியமுடிகிறது.

இதுபோன்ற சூழ்நிலைகள் தொடர்ந்தால் நமதூரில் அதிகப்படியான நோய் தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டு நாம் அனைவரும் பெரும் பாதிப்புக்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்படும். ஆகவே நம்முடைய செயல்பாடுகளை நம்முடைய அன்றாட நடவடிக்கைகளை சரியாக திட்டமிட்டு, நம்முடைய வியாபாரங்களை தொழில்களை மிகுந்த திட்டமிடலுடன் செயல்பட்டு, நமது பகுதியில் சமீபத்தில் பரவி வரும் நோய்தொற்றை ஒழிக்கக் கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் செய்ய வேண்டும்.

இது சம்பந்தமாக நமது இணையதளத்தில் பலவிதமான அறிவிப்புகளை நாம் செய்துள்ளோம். ஆனால் தற்போது சூழ்நிலையில் எந்த விதமான அறிவிப்புகக்கும் மக்கள் செவி சாய்க்காமல் தான்தோன்றித்தனமாக அலட்சியமாக இருப்பதை கண்டு வருகிறோம்.

நமது ஊரிலேயே நாம் இரண்டு மரணங்களை கண்டும் விழிப்புணர்வு பெறாமலேயே இருக்கிறோம்.

இனி வரும் நாட்களில் இது போன்ற எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடக்காமல் நாம், நமது நகரை முன்னுதாரணமான நகரமாக மாற்றுவோம்.

The post கோட்டக்குப்பம் மக்களாகிய நாம், விழிப்புடன் இருக்க வேண்டிய காலம் இது. இந்த கொரோனா தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள! appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/2703/feed/ 0
கோட்டக்குப்பத்தில் கொரோனா பரவல் தடுப்பு குறித்து செயல் அலுவலர் அவர்களின் காணொளி. https://www.kottakuppamtimes.com/2312/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%258a%25e0%25ae%25b0%25e0%25af%258b https://www.kottakuppamtimes.com/2312/#respond Fri, 03 Jul 2020 03:30:00 +0000 https://www.kottakuppamtimes.com/?p=2312 கோட்டக்குப்பம் மக்கள் கொரோனா பரவலைத் தடுக்கசெய்ய வேண்டிய வழிமுறைகளை, கோட்டகுப்பம் டைம்ஸ் இணையதளத்திற்கு பிரத்தியோகமாக வழங்கிய கோட்டக்குப்பம் செயல் அலுவலரின் காணொளி. கோட்டக்குப்பம் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, எங்களின் செயலியை பதிவிறக்கம் செய்யவும் – https://play.google.com/store/apps/details?id=com.kottakuppamtimes.news

The post கோட்டக்குப்பத்தில் கொரோனா பரவல் தடுப்பு குறித்து செயல் அலுவலர் அவர்களின் காணொளி. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் மக்கள் கொரோனா பரவலைத் தடுக்க
செய்ய வேண்டிய வழிமுறைகளை, கோட்டகுப்பம் டைம்ஸ் இணையதளத்திற்கு பிரத்தியோகமாக வழங்கிய கோட்டக்குப்பம் செயல் அலுவலரின் காணொளி.

கோட்டக்குப்பம் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, எங்களின் செயலியை பதிவிறக்கம் செய்யவும் – https://play.google.com/store/apps/details?id=com.kottakuppamtimes.news

The post கோட்டக்குப்பத்தில் கொரோனா பரவல் தடுப்பு குறித்து செயல் அலுவலர் அவர்களின் காணொளி. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/2312/feed/ 0