புதுச்சேரி செய்திகள் Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Wed, 15 Mar 2023 05:44:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg புதுச்சேரி செய்திகள் Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 வைரஸ் காய்ச்சல்: புதுவை பள்ளிகளுக்கு விடுமுறை! https://www.kottakuppamtimes.com/7846/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b5%25e0%25af%2588%25e0%25ae%25b0%25e0%25ae%25b8%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25af%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25b5%25e0%25af%2588-%25e0%25ae%25aa https://www.kottakuppamtimes.com/7846/#respond Wed, 15 Mar 2023 05:44:12 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7846 வைரஸ் காய்ச்சலின் பரவல் அதிகரித்துள்ளதால் புதுச்சேரி, காரைக்காலில் ஒன்று முதல் 8-ஆம் வகுப்பு வரை மார்ச்16 முதல் 26-ம் தேதி வரை பள்ளிகள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது இன்புளுயன்சா ஏ வைரஸின் துணை வைரசான இந்த வைரஸ் எச்3என்2 என அழைக்கப்படுகிறது. இந்த புதிய வகை வைரஸ் 15 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோரைதான் அதிகம் தாக்கும் என்று கூறப்படுகிறது....

The post வைரஸ் காய்ச்சல்: புதுவை பள்ளிகளுக்கு விடுமுறை! appeared first on Kottakuppam Times.]]>
வைரஸ் காய்ச்சலின் பரவல் அதிகரித்துள்ளதால் புதுச்சேரி, காரைக்காலில் ஒன்று முதல் 8-ஆம் வகுப்பு வரை மார்ச்16 முதல் 26-ம் தேதி வரை பள்ளிகள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்தியாவில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது இன்புளுயன்சா ஏ வைரஸின் துணை வைரசான இந்த வைரஸ் எச்3என்2 என அழைக்கப்படுகிறது.

இந்த புதிய வகை வைரஸ் 15 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோரைதான் அதிகம் தாக்கும் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடவேண்டும் என்று புதுவை சட்டப்பேரவையில் கோரிக்கை விடப்பட்டிருந்தது.

இந்நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவையில் கல்வியமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு வெளியிட்டார்.

அதில், புதுச்சேரியில் வைரஸ் தொற்று பரவி குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் ஆரம்ப பள்ளி முதல் 8-ம் வகுப்பு வரை அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் வரும் 16 முதல் 26 வரை விடுமுறை விடப்படுகிறது என்று அறிவித்தார்.

The post வைரஸ் காய்ச்சல்: புதுவை பள்ளிகளுக்கு விடுமுறை! appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7846/feed/ 0
புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை. https://www.kottakuppamtimes.com/7457/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%259a%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25af%2587%25e0%25ae%25b0%25e0%25ae%25bf-%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b0%25e0%25af%2588%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b2%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d https://www.kottakuppamtimes.com/7457/#respond Wed, 02 Nov 2022 15:46:32 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7457 நாளை 03/11/2022 அன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை பெய்யும் என்ற சென்னை வானிலை மையத்தின் அறிவிப்பையொட்டி, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

The post புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை. appeared first on Kottakuppam Times.]]>
நாளை 03/11/2022 அன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை பெய்யும் என்ற சென்னை வானிலை மையத்தின் அறிவிப்பையொட்டி, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

The post புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7457/feed/ 0
புதுச்சேரி முழுவதும் மின்தடை – உயரதிகாரிகளுடன் அமைச்சர் அவசர ஆலோசனை https://www.kottakuppamtimes.com/7398/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%259a%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25af%2587%25e0%25ae%25b0%25e0%25ae%25bf-%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25b4%25e0%25af%2581%25e0%25ae%25b5%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25a9 https://www.kottakuppamtimes.com/7398/#respond Sat, 01 Oct 2022 14:59:11 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7398 புதுச்சேரியில் மின் ஊழியர்கள் இன்று 4-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், மாநிலம் முழுவதும் இருளில் தத்தளித்து வருகிறது. பல்வேறு இடங்களில் பொதுமக்கள் தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி அரசின் மின் துறையை தனியார்மயமாக்க டெண்டர் அறிவிப்பு வெளியிட்டதையடுத்து, மின் துறை பொறியாளர்கள், ஊழியர்கள் உருவாக்கிய போராட்ட குழு செப்.28-ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி மின் துறை தலைமையகத்தில் இன்று 4-வது நாளாக அவர்கள்...

The post புதுச்சேரி முழுவதும் மின்தடை – உயரதிகாரிகளுடன் அமைச்சர் அவசர ஆலோசனை appeared first on Kottakuppam Times.]]>
புதுச்சேரியில் மின் ஊழியர்கள் இன்று 4-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், மாநிலம் முழுவதும் இருளில் தத்தளித்து வருகிறது. பல்வேறு இடங்களில் பொதுமக்கள் தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரி அரசின் மின் துறையை தனியார்மயமாக்க டெண்டர் அறிவிப்பு வெளியிட்டதையடுத்து, மின் துறை பொறியாளர்கள், ஊழியர்கள் உருவாக்கிய போராட்ட குழு செப்.28-ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி மின் துறை தலைமையகத்தில் இன்று 4-வது நாளாக அவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களிலும் மின் ஊழியர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். இதனால் மின் பழுது, பராமரிப்பு, அலுவல் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் புதுச்சேரி மற்றும் கிராமப்புற பகுதிகளில் மின்பராமரிப்பின்றி மின் தடை ஏற்பட்டுள்ளது. சீர் செய்ய ஆளின்றி நீண்ட நேரம் மின் விநியோகம் இல்லாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

இதனால் பாதிக்கப்படும் மக்கள், அந்தந்த பகுதிகளில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மின்சாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து சிக்னல்களும் இயக்கபடவில்லை. மாநிலம் முழுவதும் இருளில் ஸ்தம்பித்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மேலும் மின்விநியோகம் இல்லாததால் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தலைமை செயலகத்தில் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். சுயேட்சை சட்டப்பேரவை உறுப்பினர்களான நேரு மற்றும் பிரகாஷ்குமார் தலைமை செயலகம் வாசலில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மாநிலம் முழுவதும் மின்தடை ஏற்பட்ட சம்பவம் பூதாகரமாக வெடித்ததை தொடர்ந்து மின்சாரத்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில், காவல்துறையினர், மின்துறை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

The post புதுச்சேரி முழுவதும் மின்தடை – உயரதிகாரிகளுடன் அமைச்சர் அவசர ஆலோசனை appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7398/feed/ 0
புதுச்சேரியில் வைரஸ் காய்ச்சல் பரவுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க சுகாதாரத்துறை பரிந்துரை. https://www.kottakuppamtimes.com/7367/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%259a%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25af%2587%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25b5%25e0%25af%2588%25e0%25ae%25b0%25e0%25ae%25b8%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25af https://www.kottakuppamtimes.com/7367/#respond Fri, 16 Sep 2022 15:43:26 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7367 புதுச்சேரி: வைரஸ் காய்ச்சல் பரவுவதால் புதுச்சேரி பள்ளிகளுக்கு விடுமுறை தர சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது. வைரஸ் காய்ச்சல் பரவுவதால் புதுச்சேரியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது. புதுச்சேரியில் கடந்த 10 நாள்களாக காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பதால் சுகாதாரத்துறை இந்த முடிவை எடுத்துள்ளது. மருத்துவமனைக்கு வருபவர்களில் 50% பேர் சிறுவர்களாக இருப்பதால் பள்ளிகளை தற்காலிகமாக மூட சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது.

The post புதுச்சேரியில் வைரஸ் காய்ச்சல் பரவுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க சுகாதாரத்துறை பரிந்துரை. appeared first on Kottakuppam Times.]]>
புதுச்சேரி: வைரஸ் காய்ச்சல் பரவுவதால் புதுச்சேரி பள்ளிகளுக்கு விடுமுறை தர சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது.

வைரஸ் காய்ச்சல் பரவுவதால் புதுச்சேரியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது.

புதுச்சேரியில் கடந்த 10 நாள்களாக காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பதால் சுகாதாரத்துறை இந்த முடிவை எடுத்துள்ளது.

மருத்துவமனைக்கு வருபவர்களில் 50% பேர் சிறுவர்களாக இருப்பதால் பள்ளிகளை தற்காலிகமாக மூட சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது.

The post புதுச்சேரியில் வைரஸ் காய்ச்சல் பரவுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க சுகாதாரத்துறை பரிந்துரை. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7367/feed/ 0
அனைவரும் தடுப்பூசி போடுவது கட்டாயம்: புதுச்சேரி அரசு உத்தரவு https://www.kottakuppamtimes.com/5406/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2585%25e0%25ae%25a9%25e0%25af%2588%25e0%25ae%25b5%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%259f%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2582%25e0%25ae%259a%25e0%25ae%25bf-%25e0%25ae%25aa%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%2581%25e0%25ae%25b5 https://www.kottakuppamtimes.com/5406/#respond Sun, 05 Dec 2021 06:18:50 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5406 ‛‛புதுச்சேரியில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயம். கொரோனாவை தடுக்கும் வகையில் கட்டாய தடுப்பூசி சட்டம் உடனடியாக அமல்படுத்தப்படுகிறது,” என, சுகாதார துறை இயக்குனர் ஸ்ரீராமலு அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: கொரோனா நோய் தொற்று குறைந்துள்ளதை தொடர்ந்து புதுச்சேரியில் ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. நோய் தொற்றை தடுக்கவும் 100 சதவித தடுப்பூசி போட்ட யூனியன் பிரதேசமாக மாற்ற அரசு பல்வேறு முகாம்களை நடத்தி நடவடிக்கை எடுத்து...

The post அனைவரும் தடுப்பூசி போடுவது கட்டாயம்: புதுச்சேரி அரசு உத்தரவு appeared first on Kottakuppam Times.]]>
‛‛புதுச்சேரியில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயம். கொரோனாவை தடுக்கும் வகையில் கட்டாய தடுப்பூசி சட்டம் உடனடியாக அமல்படுத்தப்படுகிறது,” என, சுகாதார துறை இயக்குனர் ஸ்ரீராமலு அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: கொரோனா நோய் தொற்று குறைந்துள்ளதை தொடர்ந்து புதுச்சேரியில் ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. நோய் தொற்றை தடுக்கவும் 100 சதவித தடுப்பூசி போட்ட யூனியன் பிரதேசமாக மாற்ற அரசு பல்வேறு முகாம்களை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் பயனாக முதல் தவணை ஊசியை 7 லட்சத்து,70 ஆயிரம் பேரும் இரண்டாவது தவணை ஊசியை 4லட்சத்து, 48ஆயிரம் பேரும் செலுத்தி கொண்டுள்ளனர்.

புதுச்சேரியில் 77 சதவீதத்தினர் தடுப்பூசி போட்டுள்ள நிலையில் விடுபட்டவர்கள் சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் சிலர் முன்வராத காரணத்தினால் கட்டாயம் கொரோனா தடுப்பூசி சட்டம் புதுச்சேரியில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி பொது சுகாதார சட்டம் 1973ன் பிரிவு 54(1)விதியின் கீழ் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். இரண்டு தவணை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு வரக்கூடாது. மீறி வெளியே நடமாடினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post அனைவரும் தடுப்பூசி போடுவது கட்டாயம்: புதுச்சேரி அரசு உத்தரவு appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5406/feed/ 0
3 கட்டங்களாக வாக்குப்பதிவு – புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு https://www.kottakuppamtimes.com/5222/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=3-%25e0%25ae%2595%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25ae%25be%25e0%25ae%2595-%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf https://www.kottakuppamtimes.com/5222/#respond Wed, 22 Sep 2021 12:31:47 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5222 புதுச்சேரி மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உளள்து. உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகளை நிறைவு செய்த மாநில தேர்தல் ஆணையம், 5 நகராட்சிகள் மற்றும் 10 பஞ்சாயத்துகளிலும் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியலை வெளியிட்டது.  இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் இன்று அறிவித்துள்ளார்.  அதன்படி, புதுச்சேரியில் அக்டோபர் 21, 25, 28 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக உள்ளாட்சி...

The post 3 கட்டங்களாக வாக்குப்பதிவு – புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு appeared first on Kottakuppam Times.]]>
புதுச்சேரி மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உளள்து. உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகளை நிறைவு செய்த மாநில தேர்தல் ஆணையம், 5 நகராட்சிகள் மற்றும் 10 பஞ்சாயத்துகளிலும் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. 

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் இன்று அறிவித்துள்ளார். 

அதன்படி, புதுச்சேரியில் அக்டோபர் 21, 25, 28 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.  முதல் கட்டமாக காரைக்கால், மாகே, ஏனாம் பகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இரண்டாம் கட்டமாக, புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிகளுக்கும், 3ம் கட்டமாக அரியாங்குப்பம், பாகூர், நெடட்டப்பாக்கம், வில்லியனூர் பஞ்சாயத்துகளுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.

5 நகராட்சி சேர்மன், 116 நகராட்சி கவுன்சிலர்கள் உட்பட 1,149 பதவிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். கடைசி 1 மணி நேரம் கொரோனா பாதித்தவர்கள் வாக்களிக்கலாம். அக்டோபர் 31-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். 

The post 3 கட்டங்களாக வாக்குப்பதிவு – புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5222/feed/ 0
புதுச்சேரியில் நாளை பள்ளிகள் திறப்பு: ஏற்பாடுகள் தீவிரம் https://www.kottakuppamtimes.com/5130/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%259a%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25af%2587%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%25b3%25e0%25af%2588-%25e0%25ae%25aa%25e0%25ae%25b3%25e0%25af%258d%25e0%25ae%25b3 https://www.kottakuppamtimes.com/5130/#respond Tue, 31 Aug 2021 08:15:15 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5130 புதுச்சேரியில் புதன்கிழமை (செப்.1) பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், வகுப்பறைகளைத் தூய்மை செய்தல் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. புதுச்சேரி, காரைக்காலில் புதன்கிழமை (செப்.1) முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. புதுச்சேரியில் பள்ளிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைளை கல்வித் துறை வெளியிட்டது. அதில், அரை நாள் மட்டுமே நேரடி வகுப்புகள் இயங்கும். மதிய உணவு வழங்கப்படாது. சிறப்பு பேருந்துகள் ஏதும் இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 9 முதல் பிளஸ் 2...

The post புதுச்சேரியில் நாளை பள்ளிகள் திறப்பு: ஏற்பாடுகள் தீவிரம் appeared first on Kottakuppam Times.]]>
புதுச்சேரியில் புதன்கிழமை (செப்.1) பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், வகுப்பறைகளைத் தூய்மை செய்தல் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

புதுச்சேரி, காரைக்காலில் புதன்கிழமை (செப்.1) முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. புதுச்சேரியில் பள்ளிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைளை கல்வித் துறை வெளியிட்டது. அதில், அரை நாள் மட்டுமே நேரடி வகுப்புகள் இயங்கும். மதிய உணவு வழங்கப்படாது. சிறப்பு பேருந்துகள் ஏதும் இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக 9 முதல் பிளஸ் 2 வரையான வகுப்புகள் மட்டுமே திறக்கப்படுகின்றன. 9, பிளஸ் 1 மாணவா்களுக்கு திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும், 10, பிளஸ் 2 மாணவா்களுக்கு செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

பள்ளிகள் திறந்ததும் நாள்தோறும் மாணவா்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும். காய்ச்சல், இருமல் அறிகுறிகள் உள்ளவா்கள் வகுப்புகளுக்கு வர வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், மாணவா்களுக்கு வருகைப் பதிவேடு கட்டாயமாக்கப்படாமல், இணையதளம் வழியாகவும், வீடுகளிலிருந்து மாணவா்கள் கல்வி பயில வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, புதுச்சேரியில் பள்ளிகளைத் திறப்புக்கான முன்னேற்பாடுகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன. வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. சமூக இடைவெளியுடன் மாணவா்கள் அமரும் வகையில் இருக்கைகள் மாற்றியமைக்கப்பட்டும், கைகளை அடிக்கடி சுத்தம் செய்யும் வகையில் குடிநீா் பைப்புகள் அமைக்கப்பட்டும் வருகின்றன.

பாடப் புத்தகங்கள் கொண்டு வரப்பட்டு, முருங்கப்பாக்கம் தீரா் சத்தியமூா்த்தி மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. ஆசிரியா்களுக்கு கரோனா தடுப்பூசி இரு தவணையும் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், பள்ளிகளில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தி, மாணவா்களுக்கு தடுப்பூசி செலுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

The post புதுச்சேரியில் நாளை பள்ளிகள் திறப்பு: ஏற்பாடுகள் தீவிரம் appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5130/feed/ 0
புதுச்சேரியில் அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி! https://www.kottakuppamtimes.com/4030/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%259a%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25af%2587%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25ae%25e0%25ae%25b2%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581 https://www.kottakuppamtimes.com/4030/#respond Thu, 25 Feb 2021 14:26:52 +0000 https://www.kottakuppamtimes.com/?p=4030 புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்ததால் கடந்த 22 ஆம் தேதி நாராயணசாமி தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். நாராயணசாமி அமைச்சரவையின் ராஜினாமா ஏற்கப்பட்ட நிலையில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது குறித்து பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை அடுத்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், புதுச்சேரியில் தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி...

The post புதுச்சேரியில் அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி! appeared first on Kottakuppam Times.]]>
புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.

புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்ததால் கடந்த 22 ஆம் தேதி நாராயணசாமி தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

நாராயணசாமி அமைச்சரவையின் ராஜினாமா ஏற்கப்பட்ட நிலையில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது குறித்து பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை அடுத்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், புதுச்சேரியில் தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. மத்திய அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வந்துள்ளார்.

The post புதுச்சேரியில் அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி! appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/4030/feed/ 0
கோட்டக்குப்பம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் சுமார் 6 மணி நேரத்துக்கு மேல் கொட்டித் தீர்த்த மழை. https://www.kottakuppamtimes.com/3933/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa https://www.kottakuppamtimes.com/3933/#respond Sun, 21 Feb 2021 08:04:04 +0000 https://www.kottakuppamtimes.com/?p=3933 கோட்டக்குப்பம், புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. அடுத்த சில மணி நேரங்களில் பலத்த மழையாக பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை இடைவிடாமல் சுமார் 6 மணி நேரத்துக்கு மேல் கொட்டித்தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் காட்சியளிக்கிறது. இதேபோல் புதுச்சேரி பகுதிகளிலும் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளது. சில குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் உள்ளே புகுந்துள்ளது....

The post கோட்டக்குப்பம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் சுமார் 6 மணி நேரத்துக்கு மேல் கொட்டித் தீர்த்த மழை. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம், புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. அடுத்த சில மணி நேரங்களில் பலத்த மழையாக பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை இடைவிடாமல் சுமார் 6 மணி நேரத்துக்கு மேல் கொட்டித்தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் காட்சியளிக்கிறது.

இதேபோல் புதுச்சேரி பகுதிகளிலும் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளது. சில குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் உள்ளே புகுந்துள்ளது. இதனை, சரி செய்யும் பணி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கோட்டகுப்பம் பகுதி புகைப்படங்கள்

புதுச்சேரி பகுதி புகைப்படங்கள்

The post கோட்டக்குப்பம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் சுமார் 6 மணி நேரத்துக்கு மேல் கொட்டித் தீர்த்த மழை. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/3933/feed/ 0
கவர்னரை மத்திய அரசு திரும்ப பெற கோரி புதுவையில் 16-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் https://www.kottakuppamtimes.com/3815/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25ae%25b5%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25a9%25e0%25ae%25b0%25e0%25af%2588-%25e0%25ae%25ae%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%2585%25e0%25ae%25b0%25e0%25ae%259a%25e0%25af%2581-%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25af%2581 https://www.kottakuppamtimes.com/3815/#respond Thu, 04 Feb 2021 08:02:38 +0000 https://www.kottakuppamtimes.com/?p=3709 புதுவை மாநில வளர்ச்சிக்கு கவர்னர் கிரண்பெடி தடையாக இருந்து வருவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இந்தநிலையில் கவர்னரை திரும்ப பெறக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி காங்கிரஸ் தலைமையிலான மத சார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று மாலை முதலியார்பேட்டையில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு காங்கிரஸ்...

The post கவர்னரை மத்திய அரசு திரும்ப பெற கோரி புதுவையில் 16-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் appeared first on Kottakuppam Times.]]>
புதுவை மாநில வளர்ச்சிக்கு கவர்னர் கிரண்பெடி தடையாக இருந்து வருவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இந்தநிலையில் கவர்னரை திரும்ப பெறக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி காங்கிரஸ் தலைமையிலான மத சார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று மாலை முதலியார்பேட்டையில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம், முன்னாள் அமைச்சர் விசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா. கலைநாதன், ரா‌‌ஷ்ட்ரீய ஜனதாதள மாநில தலைவர் சஞ்சீவி உள்ளிட்ட மதசார்பற்ற கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
கவர்னர் கிரண்பெடியை மத்திய அரசு திரும்ப பெற கோரி கடந்த 26-ந் தேதி கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. ஆனால் மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கவர்னர் கிரண்பெடியும் தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை. எனவே கவர்னரை கண்டித்து நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) அண்ணாசிலை அருகில் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம்.

ஜனாதிபதியை சந்திக்க நேரம் ஒதுக்க கேட்டிருந்தோம். அவர் வருகிற 10-ந் தேதி நேரம் ஒதுக்கி உள்ளார்.
அன்றைய தினம் டெல்லி சென்று அவரை சந்தித்து கையெழுத்து இயக்கத்தின் மூலம் பெறப்பட்ட கையெழுத்துகளை அவரிடம் ஒப்படைக்க உள்ளோம். மத்திய அரசு கவர்னரை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை மனுவும் அளிக்க உள்ளோம். பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிற 16-ந் தேதி மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. மத்திய அரசு புதுவையை வஞ்சித்து வரும் நிலை, கவர்னர் கிரண்பெடி மாநில அரசுக்கு எந்தெந்த வழிகளில் தொல்லை கொடுத்து வருகிறார் என்பது குறித்தும், முழு அடைப்பு போராட்டம் குறித்தும் பொதுமக்களிடம் எடுத்து கூற வருகிற 14, 15-ந் தேதிகளில் மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் தெருமுனை பிரசாரம் நடத்தப்படும். இந்த போராட்டத்திற்கு கூட்டணி கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

The post கவர்னரை மத்திய அரசு திரும்ப பெற கோரி புதுவையில் 16-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/3815/feed/ 0