viyabarigal sangam Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Fri, 06 Oct 2023 07:09:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg viyabarigal sangam Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 மின்வெட்டை கண்டித்தும், துணை மின் நிலையம் அமைக்க வலியுறுத்தியும் கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் மனு. https://www.kottakuppamtimes.com/8278/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25af%2586%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%2588-%25e0%25ae%2595%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d https://www.kottakuppamtimes.com/8278/#respond Fri, 06 Oct 2023 07:03:24 +0000 https://www.kottakuppamtimes.com/?p=8278 கோட்டக்குப்பத்தில் நிலவி வரும் தொடர் மின்வெட்டை கண்டித்தும், துணை மின் நிலையம் அமைக்க வலியுறுத்தியும் கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கம் தொடர் போராட்டம் அறிவித்து இருந்தது. இந்நிலையில், முதல் கட்டமாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அவர்களையும், விழுப்புரம் மாவட்ட செயற்பொறியாளர் (பொது)அவர்கள், SE அவர்கள், கண்டமங்கலம் செயற்பொறியாளர் (EE) அவர்கள் மற்றும் வானூர் வட்டாட்சியர் என அனைவருக்கும் இன்று ஒரே நாளில் தலைவர் (மாநில இணைச்செயலாளர்) அன்சர் பாஷா அவர்களின்...

The post மின்வெட்டை கண்டித்தும், துணை மின் நிலையம் அமைக்க வலியுறுத்தியும் கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் மனு. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பத்தில் நிலவி வரும் தொடர் மின்வெட்டை கண்டித்தும், துணை மின் நிலையம் அமைக்க வலியுறுத்தியும் கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கம் தொடர் போராட்டம் அறிவித்து இருந்தது.

இந்நிலையில், முதல் கட்டமாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அவர்களையும், விழுப்புரம் மாவட்ட செயற்பொறியாளர் (பொது)அவர்கள், SE அவர்கள், கண்டமங்கலம் செயற்பொறியாளர் (EE) அவர்கள் மற்றும் வானூர் வட்டாட்சியர் என அனைவருக்கும் இன்று ஒரே நாளில் தலைவர் (மாநில இணைச்செயலாளர்) அன்சர் பாஷா அவர்களின் தலைமையில், துணைத் தலைவர் பயாஸ், பொருளாளர் கமால் ஹசேன், இணை செயலாளர் சாகுல் ஹமீத் மற்றும் துணைச் செயலாளர் துபைல் அஹமத் கொண்ட குழுவினர் மனு அளித்தனர். இவர்களுடன், விழுப்புரம் மாவட்ட தமிழ்நாடு வணிக சங்க பேரமைப்பின் பொருளாளர் முபாரக் அலி உடன் இருந்தார்.

The post மின்வெட்டை கண்டித்தும், துணை மின் நிலையம் அமைக்க வலியுறுத்தியும் கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் மனு. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/8278/feed/ 0
கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் 3-ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம். https://www.kottakuppamtimes.com/7463/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25a9%25e0%25af%2588%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2581-2 https://www.kottakuppamtimes.com/7463/#respond Mon, 07 Nov 2022 06:12:32 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7463 தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பின் அங்கமான கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நேற்று(06/11/2022) மாலை 6 மணி அளவில் கோட்டக்குப்பம் மேயர் முத்துப்பிள்ளை திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் உயர்மட்ட குழு தலைவர்கள் தலைமை தாங்கினார்கள். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வணிக சங்க பேரமைப்பின் விழுப்புரம் மாவட்ட மாநில இணைச் செயலாளர் மோகன் அவர்கள், மாவட்ட துணைத் தலைவர் முபாரக் அலி, மாவட்ட...

The post கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் 3-ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம். appeared first on Kottakuppam Times.]]>
தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பின் அங்கமான கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நேற்று(06/11/2022) மாலை 6 மணி அளவில் கோட்டக்குப்பம் மேயர் முத்துப்பிள்ளை திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு சங்கத்தின் உயர்மட்ட குழு தலைவர்கள் தலைமை தாங்கினார்கள். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வணிக சங்க பேரமைப்பின் விழுப்புரம் மாவட்ட மாநில இணைச் செயலாளர் மோகன் அவர்கள், மாவட்ட துணைத் தலைவர் முபாரக் அலி, மாவட்ட பொருளாளர் சுசிந்திரன் கலந்து கொண்டு புதிய நிர்வாகத்தை அமைத்துக் கொடுத்து சிறப்புரையாற்றினார்கள்.

சங்கத்தின் தலைவராக மீண்டும் இரண்டாவது முறையாக அன்சர் பாஷா தேர்ந்தெடுக்கப்பட்டார். செயலாளராக முஹம்மது வக்கீல், பொருளாளராக கமால் ஹசேன், இணைச் செயலாளராக சாகுல் அமீது தேர்ந்தெடுக்கப்பட்டனர். துணைத் தலைவர்கள் ஹலில் பயாஸ், கதிர்வேல் செட்டியார், முகமது இலியாஸ், ஹமீது அத்தாவுள்ள, முஹம்மது பாரூக் , சவுரிராஜன் ஆகியிரும், துணை செயலாளராக பாபு என்கிற பக்ருதீன், முகமது இலியாஸ், சபீர் அகமது, துபையில் அகமது, தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

  • புதிய தீர்மானங்களாக சங்கத்தின் சார்பில் அனைத்து வியாபாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் மூன்றாம் கண் சிசிடிவி கேமரா மூன்றாம் கட்டமாக மகாத்மா காந்தி வீதி எம்.ஜி ரோட்டில் முழுமையாக அமைக்கப்படும்.
  • வியாபாரிகளுக்காக கோட்டக்குப்பம் நகராட்சி ஆணையரிடம் முறையாக மனு அளித்து வியாபாரிகளுக்காக பொது கழிப்பிடம் & வாடிக்கையாளர்கள் பயன்படக்கூடிய பேருந்து நிழல்குடை கட்ட முறையிடப்படும்.
  • உரிய அனுமதியின்றி உள்ளூர் வியாபாரிகளை பாதிக்கக்கூடிய நடமாடும் வெளியூர் வாகன வியாபாரிகளை அனுமதிக்க கூடாது என்று கோட்டக்குப்பம் நகராட்சி ஆணையரிடம் வலியுறுத்தப்படும்.
  • வருடத்திற்கு ஒருமுறை வியாபார திருவிழா நடத்திட சங்கத்தின் சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
  • சங்கத்தின் உறுப்பினர்களாக இருக்கக்கூடிய யாரேனும் இயற்கை எழுதினால்
    அவர்கள் குடும்பத்திற்கு சங்கத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைந்து, தங்கள் பங்குகளை வழங்கி ஒரு சிறந்த தொகையை அந்த குடும்பத்திற்கு வழங்கிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • தமிழ்நாடு வணிக நல வாரியத்தில் பதியாதவர்களுக்கு மீண்டும் பதியக்கூடிய வாய்ப்பினை உருவாக்கி தரப்படும்.

போன்ற 15 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர், துணை தலைவர்கள், துணைச் செயலாளர், அனைவரும் கூட்டத்தில் சிற்றரையாற்றினர்.

முடிவில் முஹம்மது இலியாஸ் அவர்கள் நன்றியுரை கூறினார்.

The post கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் 3-ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7463/feed/ 0
கோட்டக்குப்பத்தில் குற்ற செயலை தடுக்க வியாபாரி சங்க நிர்வாகிகளுடன் போலீஸார் ஆலோசனை. https://www.kottakuppamtimes.com/4684/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25b1%25e0%25af%258d https://www.kottakuppamtimes.com/4684/#respond Thu, 24 Jun 2021 12:38:59 +0000 https://www.kottakuppamtimes.com/?p=4684 சமீபகாலமாக கோட்டக்குப்பத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் குற்ற செயல்களை தடுக்க காவல்துறை பலவிதமான முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று அதற்கான ஆலோசனை கூட்டம் கோட்டக்குப்பம் பகுதியில் இயங்கும் வியாபாரம் வணிகர் சங்கங்களின் நிர்வாகிகளுடன் போலீசார் ஆலோசனை செய்தார்கள். இந்த ஆலோசனை கூட்டத்தில் கோட்டக்குப்பத்தில் வணிகர்கள் சங்கம் சார்பாக மகிமை முதல் நேஷனல் சூப்பர் மார்க்கெட் வரை கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதையும், காயிதேமில்லத் ஆர்சியில் பொருத்தப்பட்டுள்ள கேமராவின் தேவையை...

The post கோட்டக்குப்பத்தில் குற்ற செயலை தடுக்க வியாபாரி சங்க நிர்வாகிகளுடன் போலீஸார் ஆலோசனை. appeared first on Kottakuppam Times.]]>
சமீபகாலமாக கோட்டக்குப்பத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் குற்ற செயல்களை தடுக்க காவல்துறை பலவிதமான முயற்சிகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இன்று அதற்கான ஆலோசனை கூட்டம் கோட்டக்குப்பம் பகுதியில் இயங்கும் வியாபாரம் வணிகர் சங்கங்களின் நிர்வாகிகளுடன் போலீசார் ஆலோசனை செய்தார்கள். இந்த ஆலோசனை கூட்டத்தில் கோட்டக்குப்பத்தில் வணிகர்கள் சங்கம் சார்பாக மகிமை முதல் நேஷனல் சூப்பர் மார்க்கெட் வரை கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதையும், காயிதேமில்லத் ஆர்சியில் பொருத்தப்பட்டுள்ள கேமராவின் தேவையை குறித்து காவல்துறை அதிகாரிகள் பாராட்டி பேசினார்கள்.

இதுமட்டுமல்லாமல் விடுபட்ட அனைத்துப் பகுதிகளிலும் கேமராக்கள் பொருத்துவதற்கு வியாபாரிகள் மற்றும் காவல் துறையினர் இணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

கண்காணிப்பு கேமரா மூலம் குற்ற நடவடிக்கைகளை கண்காணித்து, அதன் மூலம் மேல் நடவடிக்கை எடுக்கவும், தடுக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று போலீசார் வலியுறுத்தினார்கள்.

அதேபோன்று, வியாபாரிகளும் தங்களுக்கு இருக்கும் சிரமங்களை போலீசாரிடம் எடுத்துரைத்தனர். வியாபாரத்தில் நடைபெறும் சிரமங்களை நிவர்த்தி செய்யவும் வணிகர்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக அடுத்து அனைத்து வியாபாரிகளையும் அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் K. முத்துக்குமரன், சப்-இன்ஸ்பெக்டர் E. தங்கவேல் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் A. கபீர் சாஹிப் ஆகியோர் போலீஸ் தரப்பிலும், வியாபாரிகள் தரப்பில் அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளர் அப்துல் ரவூப், துணை செயலாளர் பிலால் முஹம்மது, துணைத்தலைவர் பூபாலன், கௌரவத் தலைவர் சாகுல் அமீது, அமைப்பாளர் முகமது ரபிக், செய்தி தொடர்பாளர் அமீர் பாஷா, செயற்குழு உறுப்பினர் அப்துல் காதர் ஆகியோரும், எம்ஜி ரோடு வியாபாரிகள் சங்கம் சார்பாக அதன் தலைவர் நஜீர், அதன் துணைத் தலைவர் ரவி, அதன் செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.

The post கோட்டக்குப்பத்தில் குற்ற செயலை தடுக்க வியாபாரி சங்க நிர்வாகிகளுடன் போலீஸார் ஆலோசனை. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/4684/feed/ 0