tneb Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Tue, 10 Sep 2024 15:39:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg tneb Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 தொடர் மின்வெட்டு எதிரொலி: கோட்டக்குப்பம் மின்வாரியம் எதிரில் தொலைக்காட்சி பெட்டிக்கு மாலை அணிவித்து முற்றுகை போராட்டம். https://www.kottakuppamtimes.com/9049/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25af%258a%25e0%25ae%259f%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25af%2586%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25af%2581-%25e0%25ae%258e%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25af%258a%25e0%25ae%25b2%25e0%25ae%25bf https://www.kottakuppamtimes.com/9049/#respond Tue, 10 Sep 2024 15:36:14 +0000 https://www.kottakuppamtimes.com/?p=9049 டெக்னாலஜியில் கொடிகட்டி பறக்கும் இந்தியாவில், பல கிராமப்புற ஊராட்சிகளில் கூட சீரான மின்வினியோகம் வழங்கப்படும் நிலையில், கோட்டக்குப்பம் பகுதியில் மட்டும் அடிக்கடி பவர் கட் செய்யப்படுவது வாடிக்கையாக்கிவிட்டது. தொடர் மின்வெட்டு இன்னும் 15 நாட்கள், 30 நாட்களில் சரி செய்யப்படும் என்ற புராணம் அவ்வப்போது மின்துறை அதிகாரிகளால் தெரிவிக்கப்படும் நிலையில், நாட்கள் செல்ல செல்ல தொடர் மின்வெட்டு எந்த மாற்றமும் இல்லாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் இன்று(10/09/2024), கோட்டக்குப்பம்...

The post தொடர் மின்வெட்டு எதிரொலி: கோட்டக்குப்பம் மின்வாரியம் எதிரில் தொலைக்காட்சி பெட்டிக்கு மாலை அணிவித்து முற்றுகை போராட்டம். appeared first on Kottakuppam Times.]]>
டெக்னாலஜியில் கொடிகட்டி பறக்கும் இந்தியாவில், பல கிராமப்புற ஊராட்சிகளில் கூட சீரான மின்வினியோகம் வழங்கப்படும் நிலையில், கோட்டக்குப்பம் பகுதியில் மட்டும் அடிக்கடி பவர் கட் செய்யப்படுவது வாடிக்கையாக்கிவிட்டது. தொடர் மின்வெட்டு இன்னும் 15 நாட்கள், 30 நாட்களில் சரி செய்யப்படும் என்ற புராணம் அவ்வப்போது மின்துறை அதிகாரிகளால் தெரிவிக்கப்படும் நிலையில், நாட்கள் செல்ல செல்ல தொடர் மின்வெட்டு எந்த மாற்றமும் இல்லாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்நிலையில் இன்று(10/09/2024), கோட்டக்குப்பம் பகுதியில் பல மணி நேரம் மின்விநியோகம் தடை செய்யப்பட்டது. இதனையடுத்து, கோபமடைந்த சமூக ஆர்வலர்கள் ஒன்று திரண்டு, மாலை 6 மணி அளவில் கோட்டக்குப்பம் மின்வாரியம் அலுவலக வாசலில் தொடர் மின்வெட்டால் பழுதடைந்த தொலைக்காட்சி பெட்டி மற்றும் மின் சாதன பொருட்களுக்கு மாலை அணிவித்து நூதன முறையில் முற்றுகை போராட்டம் செய்தனர்.

தகவல் அறிந்த கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் விஸ்வநாதன் சம்பவ இடத்திற்கு விரைந்து சமூக ஆர்வலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின், சம்பவ இடத்திற்கு விரைந்த இளமின் பொறியாளர் ஆதிமூலம், புதிய மின் பாதையின் பணி முழுவதுமாக நிறைவுற்றதாகவும், எதிர் வரும் சில தினங்களில் புதிய மின் பாதை வழியாக முழுமையாக மின்சாரம் வழங்கப்படும் என்பதனை தெரிவித்தார். இதனை ஏற்று அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், சிறிது நேரம் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.

The post தொடர் மின்வெட்டு எதிரொலி: கோட்டக்குப்பம் மின்வாரியம் எதிரில் தொலைக்காட்சி பெட்டிக்கு மாலை அணிவித்து முற்றுகை போராட்டம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/9049/feed/ 0
கோட்டக்குப்பத்தில் நள்ளிரவில் பரபரப்பு: தொடர் மின்வெட்டை கண்டித்து மக்கள் சாலை மறியல். https://www.kottakuppamtimes.com/9028/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25b3%25e0%25af%258d%25e0%25ae%25b3 https://www.kottakuppamtimes.com/9028/#respond Sun, 18 Aug 2024 08:38:00 +0000 https://www.kottakuppamtimes.com/?p=9028 கோட்டக்குப்பத்தில் தொடர் மின்வெட்டு என்பது வாடிக்கையாக்கிவிட்டது. குறிப்பாக சனிக்கிழமை(17/08/2024) அன்று மட்டும் 15 முறை பவர் கட் செய்யப்பட்டது. மேலும், அன்று இரவு நீண்ட நேரம் பவர் கட் செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கோட்டக்குப்பம் மின்சார வாரியம் எதிரில் முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு வந்து பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். போலீசார் பேச்சுவார்த்தைக்கு பொதுமக்கள் உடன்படவில்லை. மேலும், காந்தி ரோட்டில் இருபுறமும்...

The post கோட்டக்குப்பத்தில் நள்ளிரவில் பரபரப்பு: தொடர் மின்வெட்டை கண்டித்து மக்கள் சாலை மறியல். appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பத்தில் தொடர் மின்வெட்டு என்பது வாடிக்கையாக்கிவிட்டது. குறிப்பாக சனிக்கிழமை(17/08/2024) அன்று மட்டும் 15 முறை பவர் கட் செய்யப்பட்டது. மேலும், அன்று இரவு நீண்ட நேரம் பவர் கட் செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கோட்டக்குப்பம் மின்சார வாரியம் எதிரில் முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு வந்து பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். போலீசார் பேச்சுவார்த்தைக்கு பொதுமக்கள் உடன்படவில்லை. மேலும், காந்தி ரோட்டில் இருபுறமும் வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டது.

அதன் பிறகு, கோட்டக்குப்பம் ரவுண்டானாவில் பொதுமக்கள் முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், கிழக்கு கடற்கரை சாலை நள்ளிரவில் 1 மணி நேரத்திற்கும் மேல் வாகனங்கள் சம்பித்து நின்றது. மேலும், சம்பவ இடத்திற்கு வந்த கோட்டக்குப்பம் இளமின் ஆய்வாளரிடம் பொதுமக்கள் சராசரியாக கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதன் பிறகு போலீசாரம், மின்சார வாரிய அதிகாரிகளும் ஞாயிற்றுக்கிழமை காலை சமாதான பேச்சு வார்த்தை நடைபெறும் என்று தெரிவித்தனர். இதனால் நள்ளிரவில் சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இன்று(18/08/2024) மின்வெட்டு பிரச்சினை குறித்து கோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பொதுமக்கள், மின் அதிகாரிகள் இடையே சமரச கூட்டம் நடைபெற்றது. இதில் மின்வாரிய இளநிலை பொறியாளர் ஏழுமலை தலைமையில் ஊழியர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி தலைமையிலான போலீசார் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், மின்வெட்டு பிரச்சினை தொடர்பாக பொதுமக்கள் சரமாரியாக புகார் தெரிவித்தனர். அப்போது மின்வாரிய அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து வைத்தனர். 15 நாட்களுக்குள் புது பீடர் மூலம் சீரான மின்சாரம் வழங்கப்படும் என மின் அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

The post கோட்டக்குப்பத்தில் நள்ளிரவில் பரபரப்பு: தொடர் மின்வெட்டை கண்டித்து மக்கள் சாலை மறியல். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/9028/feed/ 0
தமிழ்நாடு மின்சார துறை அமைச்சரை சந்தித்த கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கம் நிர்வாகிகள்: துணை மின் நிலையம் உடனடியாக அமைத்து தொடர் மின்வெட்டை சரி செய்ய கோரிக்கை. https://www.kottakuppamtimes.com/8951/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25b4%25e0%25af%258d%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%259f%25e0%25af%2581-%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25be%25e0%25ae%25b0-%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25b1%25e0%25af%2588-%25e0%25ae%2585 https://www.kottakuppamtimes.com/8951/#respond Wed, 14 Aug 2024 08:19:13 +0000 https://www.kottakuppamtimes.com/?p=8951 கோட்டக்குப்பம் பகுதியில் நீண்ட காலமாக தொடர் மின்வெட்டு நிலவி வருகிறது. துணை மின் நிலையம் அமைத்து உடனடியாக தொடர் மின்வெட்டை சரி செய்ய வேண்டி பல ஆர்ப்பாட்டங்கள், கடையடைப்பு, போராட்டங்கள், மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த மாற்றமும் இல்லாமல் நாளொன்றுக்கு பல மணி நேரம் தொடர் மின்வெட்டு நிலவி வருகிறது. இதனால், பொதுமக்கள் மட்டுமல்லாமல் வியாபாரிகளும் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர். இந்நிலையில், மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, டான்ஜெட்கோ...

The post தமிழ்நாடு மின்சார துறை அமைச்சரை சந்தித்த கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கம் நிர்வாகிகள்: துணை மின் நிலையம் உடனடியாக அமைத்து தொடர் மின்வெட்டை சரி செய்ய கோரிக்கை. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் பகுதியில் நீண்ட காலமாக தொடர் மின்வெட்டு நிலவி வருகிறது. துணை மின் நிலையம் அமைத்து உடனடியாக தொடர் மின்வெட்டை சரி செய்ய வேண்டி பல ஆர்ப்பாட்டங்கள், கடையடைப்பு, போராட்டங்கள், மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த மாற்றமும் இல்லாமல் நாளொன்றுக்கு பல மணி நேரம் தொடர் மின்வெட்டு நிலவி வருகிறது. இதனால், பொதுமக்கள் மட்டுமல்லாமல் வியாபாரிகளும் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர்.

இந்நிலையில், மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, டான்ஜெட்கோ நிர்வாக இயக்குநர் ராஜேஷ் லக்கானி ஐ.ஏ.எஸ் ஆகிய இருவரையும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா முன்னிலையில் கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கம் நிர்வாகிகள் நேற்று(13/08/2024) சந்தித்து கோட்டக்குப்பத்தில் நிலவிவரம் தொடர் மின்வெட்டைக் குறித்தும், மின்வெட்டால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அன்றாடம் படும் இன்னல்களை பற்றியும் எடுத்துரைத்தனர். இதையெடுத்து, இதற்கான சரியான தீர்வு காணப்படும் என உறுதி அளித்தனர்.

இந்நிகழ்வில், கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் A. அன்சர் பாஷா, செயலாளர் முஹம்மது வக்கீல், பொருளாளர் கமால் ஹசேன், துணைத் தலைவர் A. முஹம்மது இலியாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

The post தமிழ்நாடு மின்சார துறை அமைச்சரை சந்தித்த கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கம் நிர்வாகிகள்: துணை மின் நிலையம் உடனடியாக அமைத்து தொடர் மின்வெட்டை சரி செய்ய கோரிக்கை. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/8951/feed/ 0
கோட்டக்குப்பத்தில் தொடர் மின்வெட்டை கண்டித்து, துணை மின் நிலையம் அமைக்க வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். https://www.kottakuppamtimes.com/8839/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25af%258a%25e0%25ae%259f-4 https://www.kottakuppamtimes.com/8839/#respond Sat, 18 May 2024 13:46:57 +0000 https://www.kottakuppamtimes.com/?p=8839 கோட்டக்குப்பத்தில் தொடர் மின்வெட்டை கண்டித்தும், சீரான மின்சாரத்தை வழங்கிடவும், துணை மின் நிலையம் அமைக்க வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோட்டக்குப்பம் கிளையின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று(18/05/2024) மாலை நகராட்சி அலுவலகம் அருகில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் முஹம்மது சல்மான் ஃபார்ஸி தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் முஹம்மது இலியாஸ், மாவட்டத் துணைச் செயலாளர் முஹம்மது அன்சாரி மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு...

The post கோட்டக்குப்பத்தில் தொடர் மின்வெட்டை கண்டித்து, துணை மின் நிலையம் அமைக்க வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பத்தில் தொடர் மின்வெட்டை கண்டித்தும், சீரான மின்சாரத்தை வழங்கிடவும், துணை மின் நிலையம் அமைக்க வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோட்டக்குப்பம் கிளையின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று(18/05/2024) மாலை நகராட்சி அலுவலகம் அருகில் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் முஹம்மது சல்மான் ஃபார்ஸி தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் முஹம்மது இலியாஸ், மாவட்டத் துணைச் செயலாளர் முஹம்மது அன்சாரி மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநிலத்துணைப் பொதுச்செயலாளர் ஏ. முஜிபுர் ரஹ்மான் கண்டன உரை நிகழ்த்தினார். அவர் பேசியபோது, “மக்களின் அடிப்படை தேவையான மின்சாரத்தை கூட இப்பகுதிக்கு வழங்க முடியாத ஆளும் கட்சி, ஆண்ட கட்சி, சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர், மின்வாரிய அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆகியோர்களின் அலட்சியப் போக்கை கண்டித்தும், மேலும் சீரான மின்சாரம் மற்றும் துணை மின் நிலையம் அமைக்க வேண்டி இப்பகுதி மக்கள் பல கண்டன ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தும் இதுவரை சீரான மின்சாரத்தை வழங்காதது ஏன், என கேள்வி எழுப்பினார். குறைந்த மின்னழுத்தம் காரணமாக மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதாகி வருவதால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் எனவும், இதற்கு விரைவில் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும்” எனவும் கூறினார்.

மேலும், தமிழக அரசின் மின்வாரியம் மற்றும் நகராட்சி நிர்வாகத்துக்கு எதிராக பதாகை ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினார். ஆர்ப்பாட்டத்திற்கு, ஏராளமான ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் உட்பட 700-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்கள் கண்டனங்களை தெரிவித்தனர்.

The post கோட்டக்குப்பத்தில் தொடர் மின்வெட்டை கண்டித்து, துணை மின் நிலையம் அமைக்க வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/8839/feed/ 0
கோட்டக்குப்பம் மக்கள் நல கூட்டமைப்பினர் மின்வாரிய அதிகாரியுடன் துணை மின் நிலையம் அமைக்க மேற்கொள்ளப்பட்ட பணிகளை குறித்து கேட்டறிந்தனர். https://www.kottakuppamtimes.com/8427/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25b2 https://www.kottakuppamtimes.com/8427/#respond Tue, 28 Nov 2023 05:30:22 +0000 https://www.kottakuppamtimes.com/?p=8427 கோட்டக்குப்பம் நகராட்சி முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்கவும், நகராட்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான துணை மின் நிலையத்தை உடனடியாக அமைத்திடவும், கோட்டக்குப்பம் மக்கள் நல கூட்டமைப்பு சார்பில் தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் கடையடைப்பு கடந்த மாதம் நடைபெற்றது. அதில், “கோட்டக்குப்பம் பகுதிக்கு டிசம்பர் 31க்குள் துணை மின் நிலையம் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும், தவறும் பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டம் தொடரும்” என கோட்டக்குப்பம்...

The post கோட்டக்குப்பம் மக்கள் நல கூட்டமைப்பினர் மின்வாரிய அதிகாரியுடன் துணை மின் நிலையம் அமைக்க மேற்கொள்ளப்பட்ட பணிகளை குறித்து கேட்டறிந்தனர். appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் நகராட்சி முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்கவும், நகராட்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான துணை மின் நிலையத்தை உடனடியாக அமைத்திடவும், கோட்டக்குப்பம் மக்கள் நல கூட்டமைப்பு சார்பில் தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் கடையடைப்பு கடந்த மாதம் நடைபெற்றது.

அதில், “கோட்டக்குப்பம் பகுதிக்கு டிசம்பர் 31க்குள் துணை மின் நிலையம் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும், தவறும் பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டம் தொடரும்” என கோட்டக்குப்பம் மக்கள் நல கூட்டமைப்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், கோட்டக்குப்பம் மக்கள் நல கூட்டமைப்பினர், கோட்டக்குப்பம் மின்சார வாரிய இளமின் பொறியாளர் ஆதிமூலம் அவர்களை நேற்று (27/11/2023) சந்தித்து, தொடர் மின்வெட்டை சரி செய்ய என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை கேட்டறிந்தனர்.

கோட்டக்குப்பம் பகுதியில் சுமார் 70 சதவீதம் பாலிமர் இன்சுலேட்டர்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள பாலிமர் இன்சுலேட்டர்களை அடுத்த பராமரிப்பு பணி அன்று நடைபெற உள்ளதாகவும், மேலும் துணை மின் நிலையம் அமைக்கும் இடங்களை கையகப்படுத்தும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்படுவதாகவும் இளமின் பொறியாளர் தெரிவித்தார்.

இறுதியாக, கோட்டக்குப்பம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான துணை மின் நிலையம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்குமாறும், கோட்டக்குப்பத்தில் நிலவிவரும் தொடர் மின்வெட்டையும், குறைவழுத்த மின்சாரத்தை சீர் செய்யுமாறும் மக்கள் நல கூட்டமைப்பினர் கேட்டுக் கொண்டனர்.

The post கோட்டக்குப்பம் மக்கள் நல கூட்டமைப்பினர் மின்வாரிய அதிகாரியுடன் துணை மின் நிலையம் அமைக்க மேற்கொள்ளப்பட்ட பணிகளை குறித்து கேட்டறிந்தனர். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/8427/feed/ 0
கோட்டக்குப்பம் பகுதிக்கு டிசம்பர் 31-க்குள் விரைந்து துணை மின் நிலையம் அமைக்கவில்லையெனில் அடுத்த கட்ட போராட்டம் தொடரும் என மக்கள் நல கூட்டமைப்பு அறிவிப்பு. https://www.kottakuppamtimes.com/8302/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%258d-2 https://www.kottakuppamtimes.com/8302/#respond Thu, 26 Oct 2023 08:55:55 +0000 https://www.kottakuppamtimes.com/?p=8302 கோட்டக்குப்பம் பகுதியில் தினம் தினம் தொடர் மின்வெட்டையும் மற்றும் குறைந்த மின்னழுத்தத்தையும் மக்கள் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், கோட்டக்குப்பம் நகராட்சி முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்கவும், நகராட்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான துணை மின் நிலையத்தை உடனடியாக அமைத்திடவும், கோட்டக்குப்பம் மக்கள் நல கூட்டமைப்பு சார்பில் தொடர் முழுக்க கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் கடையடைப்பு, நேற்று (25/10/2023) புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி...

The post கோட்டக்குப்பம் பகுதிக்கு டிசம்பர் 31-க்குள் விரைந்து துணை மின் நிலையம் அமைக்கவில்லையெனில் அடுத்த கட்ட போராட்டம் தொடரும் என மக்கள் நல கூட்டமைப்பு அறிவிப்பு. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் பகுதியில் தினம் தினம் தொடர் மின்வெட்டையும் மற்றும் குறைந்த மின்னழுத்தத்தையும் மக்கள் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், கோட்டக்குப்பம் நகராட்சி முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்கவும், நகராட்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான துணை மின் நிலையத்தை உடனடியாக அமைத்திடவும், கோட்டக்குப்பம் மக்கள் நல கூட்டமைப்பு சார்பில் தொடர் முழுக்க கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் கடையடைப்பு, நேற்று (25/10/2023) புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கோட்டக்குப்பம் நகராட்சி திடலில் நடைபெற்றது.

போராட்டத்திற்கு ஆதரவளித்து வணிகர்கள் கோட்டக்குப்பத்தில் இருந்து பெரிய முதலியார்சாவடி வரை உள்ள அனைத்து கடைகளும் அடைத்து தங்களின் கண்டனத்தை அரசுக்கு பதிவு செய்தனர். கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்ததால், எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் கோட்டக்குப்பதிலுள்ள முக்கிய பகுதிகள் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

இந்தப் போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் ஜி அபுபக்கர் அஜ்மஹால் அவர்கள் தலைமை தாங்கினார். சென்னை பத்திரிக்கையாளர் அய்யநாதன், தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் நிறுவன தலைவர் மங்கையர் செல்வன், மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சி திருநாவுக்கரசு, புதுவை மக்கள் உரிமை கூட்டமைப்பு சுகுமாரன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் மதிவாணன், உட்பட்ட பலர் கண்டன உரையாற்றினார்கள்.

இந்த கண்டன உரையில், “கோட்டக்குப்பம் ஊராட்சி, தேர்வு நிலை பேரூராட்சி, சிறப்பு பேரூராட்சி மற்றும் இரண்டாம் நிலை நகராட்சி என பெயரில் மட்டும் மாற்றிக் கொண்ட கோட்டக்குப்பம் எந்த ஒரு அடிப்படை வசதி இல்லாதது கண்டிக்கத்தக்கது எனவும், தொடர் மின்வெட்டால் மாணவர்களின் படிப்பு மற்றும் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாகவும், நோயாளிகள் பெரும் அவதி அடைவதாகவும், மின்சாரத்தை மட்டும் நம்பி தொழில் நடத்தும் சிறு மற்றும் குறு நிறுவனங்கள் மின்தடையால் பணிகள் பாதிக்கப்பட்டு அவதியடைந்து வருவதாகவும்” தெரிவித்தனர்.

உலகின் அதிக மழை பெய்யும் பகுதியான, இந்தியாவின் மேகாலயா சிரபுஞ்சியில் 24 மணி நேரமும் மழை பெய்யும் பகுதியில் மின்வெட்டு இல்லை. ஆனால், நமது பகுதியில் சிறு காற்று அடித்தாலும், மழை பொழிந்தாலும் பவர் கட் செய்யப்படுவது ஏன்? மேலும், அரசு அதிகாரிகள் தொடர் மின்வெட்டை குறித்து உயர் அதிகாரிகளுக்கும், அரசுக்கும் ஆவணம் செய்யாமல் அலட்சியம் காட்டுவதாகவும் குற்றம் சாட்டினர்.

இறுதியாக மக்கள் நல கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கூறிய போது, “இந்த போராட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்றது எனவும், மேலும் அரசு இது சம்பந்தமாக உடனடியாக தீர்வு காண வேண்டும். மேலும், கோட்டக்குப்பம் பகுதிக்கு டிசம்பர் 31க்குள் துணை மின் நிலையம் விரைந்து அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டம் தொடரும்” எனவும் தெரிவித்தார்.

இந்தப் போராட்டத்திற்கு, அனைத்து ஜமாத் நிர்வாகங்கள், கோயில் நிர்வாகங்கள், மீனவ பஞ்சாயத்தார்கள், வியாபாரிகள் சங்கங்கள், சமூக நல அமைப்புகள், தொழிற்சங்க பிரதிநிதிகள், உலமாக்கள் சபை மற்றும் பெண்கள், இளைஞர்கள் உட்பட ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு, கோஷமிட்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.

இந்தப் போராட்ட செய்தியானது அனைத்து நாளிதழ்களும் வெளியிடப்பட்டுள்ளது, குறிப்பாக டைம்ஸ் ஆப் இந்தியா, பாரத் டைம்ஸ், தி ஹிந்து, தினமணி, தினகரன், தினத்தந்தி, தினமலர் மற்றும் செயற்கைக்கோள் செய்தி தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டது. இதன் மூலம், அரசின் கவனத்திற்கு சென்றடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post கோட்டக்குப்பம் பகுதிக்கு டிசம்பர் 31-க்குள் விரைந்து துணை மின் நிலையம் அமைக்கவில்லையெனில் அடுத்த கட்ட போராட்டம் தொடரும் என மக்கள் நல கூட்டமைப்பு அறிவிப்பு. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/8302/feed/ 0
கோட்டக்குப்பத்தில் நாளை தொடர் மின்வெட்டை கண்டித்து கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம். https://www.kottakuppamtimes.com/8296/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%25b3-7 https://www.kottakuppamtimes.com/8296/#respond Tue, 24 Oct 2023 13:27:15 +0000 https://www.kottakuppamtimes.com/?p=8296 கோட்டக்குப்பம் பகுதிகளில் தொடர் மின்வெட்டு பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வரும் நிலையில் அதனை கண்டித்து, அனைத்து அமைப்புகளும் உள்ளடக்கிய “கோட்டக்குப்பம் மக்கள்நல கூட்டமைப்பு” சார்பில் கோட்டக்குப்பம் நகராட்சி முழுவதும் தடையில்லா மின்சாரம் மற்றும் துணை மின் நிலையம் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, கடையடைப்பு மற்றும் தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம், நாளை 25-10-2023 புதன்கிழமை, கோட்டக்குப்பம் நகராட்சி திடலில் நடைபெறவுள்ளது.

The post கோட்டக்குப்பத்தில் நாளை தொடர் மின்வெட்டை கண்டித்து கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம். appeared first on Kottakuppam Times.]]>

கோட்டக்குப்பம் பகுதிகளில் தொடர் மின்வெட்டு பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வரும் நிலையில் அதனை கண்டித்து, அனைத்து அமைப்புகளும் உள்ளடக்கிய “கோட்டக்குப்பம் மக்கள்நல கூட்டமைப்பு” சார்பில் கோட்டக்குப்பம் நகராட்சி முழுவதும் தடையில்லா மின்சாரம் மற்றும் துணை மின் நிலையம் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, கடையடைப்பு மற்றும் தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம், நாளை 25-10-2023 புதன்கிழமை, கோட்டக்குப்பம் நகராட்சி திடலில் நடைபெறவுள்ளது.

The post கோட்டக்குப்பத்தில் நாளை தொடர் மின்வெட்டை கண்டித்து கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/8296/feed/ 0
ஜூன் மாத மின் கட்டணத்துடன் கூடுதல் வைப்பு தொகை: ஷாக்கில் மக்கள்! https://www.kottakuppamtimes.com/8077/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%259c%25e0%25af%2582%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25a4-%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25a3%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%259f https://www.kottakuppamtimes.com/8077/#respond Mon, 12 Jun 2023 12:22:06 +0000 https://www.kottakuppamtimes.com/?p=8077 கோட்டக்குப்பம் பகுதியில் தொடர் மின்வெட்டு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. ஒரு நாளைக்கு பல முறை தடை செய்யப்படும் மின்சாரத்தால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் தொடர் மின்வெட்டு காரணமாக வணிகர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பகல் மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி குறைந்த மின் அழுத்தம் மின்சாரமே வருவதால் வீடுகளில் பயன்படுத்தப்படும் மிக்ஸி,  கிரைண்டர்,  பிரிட்ஜ், மின்விசிறி,  தொலைக்காட்சி மற்றும் மின்மோட்டார்களை முறையாக, முழுமையாக இயக்க முடியாத...

The post ஜூன் மாத மின் கட்டணத்துடன் கூடுதல் வைப்பு தொகை: ஷாக்கில் மக்கள்! appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் பகுதியில் தொடர் மின்வெட்டு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. ஒரு நாளைக்கு பல முறை தடை செய்யப்படும் மின்சாரத்தால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் தொடர் மின்வெட்டு காரணமாக வணிகர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பகல் மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி குறைந்த மின் அழுத்தம் மின்சாரமே வருவதால் வீடுகளில் பயன்படுத்தப்படும் மிக்ஸி,  கிரைண்டர்,  பிரிட்ஜ், மின்விசிறி,  தொலைக்காட்சி மற்றும் மின்மோட்டார்களை முறையாக, முழுமையாக இயக்க முடியாத நிலை உள்ளது. மேலும், இதனால் மின் சாதன பொருட்கள் பாதிப்படைவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். தொடர் மின்வெட்டு மற்றும் குறைந்த மின் அழுத்தம் மின்சாரம் சம்பந்தமாக அதிகாரிகளிடம் மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும், இதுவரை எந்த மாற்றமும் நடைபெறவில்லை.

இந்நிலையில், ஜூன் மாத மின் கட்டணத்துடன் கூடுதல் வைப்பு தொகையை மின் வாரியம் வசூல் செய்வதால், அதிக தொகை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மேலும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

தமிழக மின்வாரியம் வீடுகளில் இரு ஆண்டுகளுக்கு ஒரு முறையும், தொழிற்சாலைகளில் ஆண்டுதோறும் கூடுதல் வைப்பு தொகை வசூலிக்கிறது. இந்த தொகை, மின் இணைப்பு பெறும் போது குறிப்பிட்டிருந்ததை விட கூடுதல் மின்சாரம் பயன்படுத்தும் இணைப்புகளில் மட்டும் வசூலிக்கப்படுகிறது. கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலால் வீடுகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த பிரிவு நுகர்வோர்களிடம் இருந்து கூடுதல் வைப்பு தொகை வசூலிக்கும் பணி, ஏப்ரல் மாதத்துக்கு பதில் ஜூலை மாதம் தொடங்கியது.

அந்த நேரத்தில் கொரோனா ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. எனவே, பலரின் கோரிக்கையை ஏற்று, கூடுதல் வைப்பு தொகை வசூலிப்பு கைவிடப்பட்டது. இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை என்ற விதியின் கீழ், இந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் கூடுதல் வைப்பு தொகை வசூலிக்கும் பணியை தொடங்க மின் வாரியம் முடிவு செய்தது. அதேசமயம், மின் கட்டணம் உயர்த்தி 6 மாதங்களே ஆனதால் அந்த முடிவு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்தநிலையில், கடந்த மாத இறுதியில் மின் கணக்கீடு செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது, மின் அளவீட்டுக்குரிய தொகையாக, அந்த நுகர்வோர் பயன்படுத்திய யூனிட்டுக்கு உரிய தொகையை மின் அட்டையில் குறித்துச்சென்றனர். கோடைகாலம் என்பதால் பலருடைய வீடுகளில் மின் பயன்பாடு அதிகமாகி கட்டணமும் அதிகரித்து இருந்தது.

பள்ளி திறக்கும் நேரம், பள்ளிக்கட்டணம், சீருடை, புத்தகம் வாங்குதல் என்று பல செலவுகளை திட்டமிட்டு இருந்த பொதுக்கள் இந்த கூடுதல் மின் கட்டணத்தை எப்படி சமாளிக்க போகிறோம் என்று நினைத்துக்கொண்டிருந்தனர். இந்தவேளையில் வீட்டு உபயோக மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு கூடுதல் வைப்பு தொகை அறிவிப்பு வெளியிடப்பட்டு வருவது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கடந்த வாரம் முதல் வீடுகளில் கூடுதல் வைப்பு தொகை வசூலிக்கும் பணி தொடங்கி உள்ளது. எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என்ற விவரம், இந்த மாதம் மின்கட்டணம் செலுத்தும் போது தான் பலருக்கு தெரியவருகிறது.

உதாரணத்திற்கு கடைசி 12 மாதத்தில் நம்முடைய மொத்த மின் கட்டணம் 12 ஆயிரம் எனில்.. அதற்கான சராசரி தொகை 1000 அதன் 3 மடங்கு தொகை 3000 ரூபாய் நம்முடைய டெபாசிட்டில் இருக்க வேண்டும். ஒருவேளை 1000 உங்கள் டெப்பாசிட் இருக்கும் பட்சத்தில், மீதம் உள்ள 2000 ரூபாய் உங்களுடைய மின் கட்டணத்துடன் சேர்த்து வசூலிக்கப்படும்.

மேலும், 3000 ரூபாய் மின்கட்டணம் குறிக்கப்பட்டவர்களுக்கு வைப்புத்தொகையுடன் சேர்த்து 6,500 ரூபாய் செலுத்த வேண்டும் என்று காட்டுகிறது. மின்சார வாரியத்துக்கு நடப்பு மாதம் அதிக தொகை செலுத்த வேண்டியிருப்பதால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது, மின் இணைப்பு பெறும்போது குறிப்பிட்டிருந்ததை விட அதிக மின்சாரம் பயன்படுத்துவோரிடம் கூடுதல் வைப்புத்தொகை வசூலிக்கப்படுகிறது. மின்சாரம் வேண்டி விண்ணப்பிக்கும் போது தெரிவித்த மின் உபயோகத்தை காட்டிலும் கூடுதலாக உபயோகம் செய்வதற்கு மட்டுமே பொருந்தும். இந்த வைப்புத்தொகை கடைசி ஓராண்டில் பயன்படுத்திய மின்சார கட்டணத்தின் சராசரியை கணக்கிட்டு வசூலிக்கப்படும் என்றனர்.

The post ஜூன் மாத மின் கட்டணத்துடன் கூடுதல் வைப்பு தொகை: ஷாக்கில் மக்கள்! appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/8077/feed/ 0
மின் கம்பங்களில் உள்ள கேபிள் டிவி ஒயர் விளம்பர பலகை அகற்ற மின்வாரியம் உத்தரவு https://www.kottakuppamtimes.com/7726/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%25ae%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2589%25e0%25ae%25b3%25e0%25af%258d%25e0%25ae%25b3-%25e0%25ae%2595%25e0%25af%2587 https://www.kottakuppamtimes.com/7726/#respond Fri, 17 Feb 2023 15:15:47 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7726 மின் கம்பங்களில் உள்ள கேபிள் டிவி ஒயர் விளம்பர பலகை அகற்ற மின்வாரியம் உத்தரவு அளித்துள்ளது. மனித இழப்புகளை தடுக்கும் வகையில் 15 நாட்கள் நோட்டீஸ் அனுப்பி அகற்ற சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மனித உயிர்களுக்கு ஏற்படும் மின் விபத்துகளைத் தவிர்க்க, கேபிள் டெலிவிஷன் ஆபரேட்டர்கள் தனியார் ஆபரேட்டர்கள் மூலம் TANGEDCO வின் கம்பங்களில் கட்டப்பட்டிருக்கும் கேபிள் டிவி வயர்கள், விளம்பரப் பலகைகள் போன்றவற்றை...

The post மின் கம்பங்களில் உள்ள கேபிள் டிவி ஒயர் விளம்பர பலகை அகற்ற மின்வாரியம் உத்தரவு appeared first on Kottakuppam Times.]]>
மின் கம்பங்களில் உள்ள கேபிள் டிவி ஒயர் விளம்பர பலகை அகற்ற மின்வாரியம் உத்தரவு அளித்துள்ளது. மனித இழப்புகளை தடுக்கும் வகையில் 15 நாட்கள் நோட்டீஸ் அனுப்பி அகற்ற சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மனித உயிர்களுக்கு ஏற்படும் மின் விபத்துகளைத் தவிர்க்க, கேபிள் டெலிவிஷன் ஆபரேட்டர்கள் தனியார் ஆபரேட்டர்கள் மூலம் TANGEDCO வின் கம்பங்களில் கட்டப்பட்டிருக்கும் கேபிள் டிவி வயர்கள், விளம்பரப் பலகைகள் போன்றவற்றை அகற்றுவதற்கு மேலே முதல் மற்றும் இரண்டாவதாக மேற்கோள் காட்டப்பட்ட குறிப்புகளில் ஏற்கனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த அலுவலகத்திலிருந்து தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட போதிலும், சில பகுதிகளில், கேபிள் டிவி வயர்கள் TANGEDCO EB மின்கம்பங்களால் கட்டப்பட்டிருப்பது கவனிக்கப்படுகிறது. மனித உயிர்களுக்கு ஏற்படும் அசம்பாவித மின் விபத்துகளைத் தவிர்க்கும் வகையில், TANGEDCO EB மின்கம்பங்களில் உள்ள கேபிள் டிவி வயர்களை உடனடியாக அகற்றுமாறு கேபிள் டெலிவிஷன் ஆபரேட்டர்கள் மற்றும் தனியார் ஆபரேட்டர்களுக்கு 15 நாட்கள் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

விநியோக வட்டங்களில் உள்ள அனைத்து TANGEDCO அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை கடைபிடிக்கவும் மற்றும் புகார்களுக்கு இடமளிக்காமல் இருக்கவும், TANGEDCO மின்கம்பங்களை தவறாகப் பயன்படுத்துவதற்காக கேபிள் டெலிவிஷன் ஆபரேட்டர்கள் மற்றும் தனியார் ஆபரேட்டர்களைக் கட்டுப்படுத்தவும், TANGEDCO மின்கம்பங்களில் கட்டப்பட்டுள்ள அனைத்து கேபிள் டிவி வயர்களும் அகற்றப்படுவதை உறுதிசெய்யவும் பிரிவு அதிகாரியால் அடிக்கடி தள ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர்.

மின் விபத்துகளைத் தவிர்க்க ஒவ்வொரு மாதமும் நிர்வாகப் பொறியாளர் மற்றும் விநியோக பொறியாளர் தவறாமல் கண்காணிக்க வேண்டும். மின் விபத்து ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட கள அலுவலர்கள் பொறுப்பேற்க வேண்டும் மேலே உள்ள வழிமுறைகளை மீறுவதன் மூலம் நிகழ்கிறது என்றும் தெரிவித்துள்ளனர். அனைத்து தலைமைப் பொறியாளர்கள் மற்றும் விநியோகப் பகுதிகளும் எடுக்கப்பட்ட நடவடிக்கையை மதிப்பாய்வு செய்ய வேண்டும், அதுமட்டுமின்றி ஒவ்வொரு ஆய்வுக் கூட்டத்திலும் அறிக்கை வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

The post மின் கம்பங்களில் உள்ள கேபிள் டிவி ஒயர் விளம்பர பலகை அகற்ற மின்வாரியம் உத்தரவு appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7726/feed/ 0
கோட்டக்குப்பத்தில் தொடர் மின்வெட்டு சம்பந்தமாக மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மனு. https://www.kottakuppamtimes.com/7433/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25af%258a%25e0%25ae%259f-2 https://www.kottakuppamtimes.com/7433/#respond Mon, 17 Oct 2022 13:19:40 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7433 கோட்டக்குப்பத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பல மணி நேரங்கள் மின் தடை ஏற்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக, மனித நேய மக்கள் கட்சி சார்பில் நகர தலைவர் அபுதாஹிர் தலைமையில் உதவி செயற் பொறியாலரிடம் நேரடியாக மனு வழங்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, “கோட்டக்குப்பம்‌ நகராட்சியில்‌ நாள்தோறும்‌ சுமார்‌ 4 முறைக்கும்‌ மேலாக மின்தடை ஏற்படுகிறது. காலை வேளையில்‌ ஏற்படும்‌ மின்‌ தடையால்‌ பள்ளி மாணவர்கள்‌ மற்றும் வேலைக்கு...

The post கோட்டக்குப்பத்தில் தொடர் மின்வெட்டு சம்பந்தமாக மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மனு. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பல மணி நேரங்கள் மின் தடை ஏற்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக, மனித நேய மக்கள் கட்சி சார்பில் நகர தலைவர் அபுதாஹிர் தலைமையில் உதவி செயற் பொறியாலரிடம் நேரடியாக மனு வழங்கப்பட்டது.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, “கோட்டக்குப்பம்‌ நகராட்சியில்‌ நாள்தோறும்‌ சுமார்‌ 4 முறைக்கும்‌ மேலாக மின்தடை ஏற்படுகிறது. காலை வேளையில்‌ ஏற்படும்‌ மின்‌ தடையால்‌ பள்ளி மாணவர்கள்‌ மற்றும் வேலைக்கு செல்லும்‌ பெரியோர்கள்‌ மிகவும்‌ அவதிக்குள்ளாவதோடு மட்டுமல்லாமல்‌, நகராட்சியின்‌ மூலம்‌ வழங்கப்படும்‌ குடிநீர்‌ விநியோகம்‌ தடைபடுவதால்‌ பொதுமக்கள் அனைவரும்‌ பெறும்‌ சிரமத்திலும்‌, மன உலைச்சலிலும்‌ காலை நேரத்தை கடக்கிறார்கள்‌. காரணம்‌ கேட்டு தங்களை தொடர்புகொண்டால்‌ பிரச்சனையை சரி செய்து விட்டோம் வந்துவிடும்‌ என்று கூறுகிறீர்கள்‌. ஆனால்‌, மீண்டும்‌ சில மணித்துளிகளில்‌ மின்‌ தடை ஏற்படுகிறது. இது முன்பு கூறியதுபோல்‌ நாலொன்றுக்கு 4 முதல்‌ 5 முறை மின்‌ தடை ஏற்படுகிறது. நாங்கள்‌ விசாரித்ததில்‌ தமிழகத்தின்‌ வேறு பகுதிகளில்‌ இவ்வாளவு அதிக மின்தடையில்லை. ஏன்‌ நமது நகராட்சிப்‌ பகுதியில் மட்டும்‌ இவ்வாறு அடிக்கடி மின்‌ தடை ஏற்படுகிறது? அதற்கான காரணம்‌ என்ன என்று விளக்கவும்‌. மேலும்‌, மாதம்‌ ஒருமுறை பராமரிப்பிற்காக ஒருநாள்‌ மின்சாரத்தை தவறாமல்‌ நிறுத்துகிறீர்கள்‌. இந்த நாட்களில்‌ மின்மாற்றிகளையும்‌, பழுதடைந்துள்ள பழைய மின்‌ கடத்திகளையும்‌ முறையாக பராமரிக்கின்றீர்களா? என்று எங்களுக்கு ஐயமாக உள்ளது. விளக்கவும்‌” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில், மாவட்ட தலைவர் அஸ்கர் அலி, நகர செயலாளர் ஜரீத், நகர பொருளாலர் முஹம்மது யூசுப் (ஃபைசல்) மற்றும் உறுப்பினர்கள் அமீர்ஜான் (ம) ரியாஸ்தீன் உடன் இருந்தனர்.

மேலும், பத்து நாட்களுக்குள் மின் வினியோகம் சரி செய்ய வேண்டி வலியுறுத்தப்பட்டது.

The post கோட்டக்குப்பத்தில் தொடர் மின்வெட்டு சம்பந்தமாக மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மனு. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7433/feed/ 0