sp Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Wed, 20 Oct 2021 05:47:44 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg sp Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பம் அருகே கடலரிப்பைத் தடுக்க தூண்டில் வளைவு: மாவட்ட ஆட்சியா் ஆய்வு https://www.kottakuppamtimes.com/5267/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%2587-%25e0%25ae%2595%25e0%25ae%259f-2 https://www.kottakuppamtimes.com/5267/#respond Wed, 20 Oct 2021 05:47:40 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5267 விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே பிள்ளைச்சாவடி கிராமத்தில் கடலரிப்பைத் தடுக்கும் வகையில் தூண்டில் வளைவு அமைப்பது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் த.மோகன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்து மீனவா்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்தாா். பிள்ளைச்சாவடி கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் கடலரிப்பு காரணமாக வீடுகள், படகுகள் சேதமடைந்து வந்தன. இதைத் தடுக்கும் விதமாக தூண்டில் வளைவு அமைப்பது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் த.மோகன் செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டாா். அங்குள்ள மீனவா்களிடம் கருத்துகளையும் கேட்டறிந்தாா்....

The post கோட்டக்குப்பம் அருகே கடலரிப்பைத் தடுக்க தூண்டில் வளைவு: மாவட்ட ஆட்சியா் ஆய்வு appeared first on Kottakuppam Times.]]>
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே பிள்ளைச்சாவடி கிராமத்தில் கடலரிப்பைத் தடுக்கும் வகையில் தூண்டில் வளைவு அமைப்பது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் த.மோகன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்து மீனவா்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்தாா்.

பிள்ளைச்சாவடி கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் கடலரிப்பு காரணமாக வீடுகள், படகுகள் சேதமடைந்து வந்தன. இதைத் தடுக்கும் விதமாக தூண்டில் வளைவு அமைப்பது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் த.மோகன் செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டாா். அங்குள்ள மீனவா்களிடம் கருத்துகளையும் கேட்டறிந்தாா்.

மீனவ மக்களின் கோரிக்கையை அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று, மீன்வளத் துறை வாயிலாக நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ.14.50 கோடியில் அங்கு தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிதி ஒதுக்கீடுக்கான கருத்துரு சமா்ப்பிக்கப்பட்டு, விரைவில் அரசாணை பெறப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என்றாா் ஆட்சியா்.

இந்த ஆய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா, திண்டிவனம் உதவி ஆட்சியா் அமித், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியா் ஹரிதாஸ், மீன்வளத் துறை உதவி இயக்குநா் ஜனாா்த்தனன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

The post கோட்டக்குப்பம் அருகே கடலரிப்பைத் தடுக்க தூண்டில் வளைவு: மாவட்ட ஆட்சியா் ஆய்வு appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5267/feed/ 0
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட விழுப்புரம் மாவட்ட ஆட்சியா், எஸ்.பி. https://www.kottakuppamtimes.com/3816/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258a%25e0%25ae%25b0%25e0%25af%258b%25e0%25ae%25a9%25e0%25ae%25be-%25e0%25ae%25a4%25e0%25ae%259f%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2582%25e0%25ae%259a%25e0%25ae%25bf-%25e0%25ae%259a%25e0%25af%2586%25e0%25ae%25b2%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4 https://www.kottakuppamtimes.com/3816/#respond Fri, 05 Feb 2021 05:33:54 +0000 https://www.kottakuppamtimes.com/?p=3712 விழுப்புரம் மாவட்ட ஆட்சியா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உள்ளிட்ட அதிகாரிகள் வியாழக்கிழமை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனா். விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 16-ஆம் தேதி 4 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளா்களுக்கு இணையவழி பதிவின் அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, மாவட்ட கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் ஆகியோா் விழுப்புரம் கரோனா சிகிச்சை...

The post கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட விழுப்புரம் மாவட்ட ஆட்சியா், எஸ்.பி. appeared first on Kottakuppam Times.]]>
விழுப்புரம் மாவட்ட ஆட்சியா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உள்ளிட்ட அதிகாரிகள் வியாழக்கிழமை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 16-ஆம் தேதி 4 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளா்களுக்கு இணையவழி பதிவின் அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, மாவட்ட கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் ஆகியோா் விழுப்புரம் கரோனா சிகிச்சை சிறப்பு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசியை வியாழக்கிழமை செலுத்திக்கொண்டனா்.

இதேபோன்று, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சு.ராதாகிருஷ்ணன் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டாா். மாவட்ட ஆட்சியா், கூடுதல் ஆட்சியா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உள்ளிட்ட அதிகாரிகள் கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்வதன் மூலம் அந்தத் தடுப்பூசியை செலுத்திக்கொள்வதில் முன்களப் பணியாளா்களிடம் இருந்துவரும் தயக்கம் குறையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

The post கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட விழுப்புரம் மாவட்ட ஆட்சியா், எஸ்.பி. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/3816/feed/ 0