sewage Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Thu, 23 Nov 2023 13:31:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg sewage Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பம் இப்ராஹிம் கார்டன் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கழிவுநீர் வடிகால் திட்டம் தொடங்கிவைப்பு. https://www.kottakuppamtimes.com/8407/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25b0%25e0%25ae%25be%25e0%25ae%25b9%25e0%25ae%25bf-3 https://www.kottakuppamtimes.com/8407/#respond Thu, 23 Nov 2023 13:24:45 +0000 https://www.kottakuppamtimes.com/?p=8407 கோட்டக்குப்பம் பழைய பட்டணப்பாதை மற்றும் மகாத்மா காந்தி சாலையை இணைக்கும் பிரதான சாலையான கோட்டக்குப்பம் இப்ராஹிம் கார்டன் பகுதியில் நீண்ட காலமாக கழிவு நீர் வாய்க்கால் இல்லாததால் சாலைகளில் கழிவு நீர் தேக்கமாக காணப்பட்ட வந்தது. இதனால், அப்பகுதி வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் என அனைவரும் தேங்கி நிற்கும் கழிவு நீரால் பெரும் அவதிக்கு உள்ளாகி வந்தனர். இதற்கு நிரந்தர...

The post கோட்டக்குப்பம் இப்ராஹிம் கார்டன் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கழிவுநீர் வடிகால் திட்டம் தொடங்கிவைப்பு. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் பழைய பட்டணப்பாதை மற்றும் மகாத்மா காந்தி சாலையை இணைக்கும் பிரதான சாலையான கோட்டக்குப்பம் இப்ராஹிம் கார்டன் பகுதியில் நீண்ட காலமாக கழிவு நீர் வாய்க்கால் இல்லாததால் சாலைகளில் கழிவு நீர் தேக்கமாக காணப்பட்ட வந்தது. இதனால், அப்பகுதி வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் என அனைவரும் தேங்கி நிற்கும் கழிவு நீரால் பெரும் அவதிக்கு உள்ளாகி வந்தனர்.

இதற்கு நிரந்தர தீர்வு வேண்டி பலமுறை அப்பகுதி மக்களால் மனு அளிக்கப்பட்டு வந்தது. மேலும், அதிகாரிகளும் இது சம்பந்தமாக பலமுறை ஆய்வு செய்தனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும், மழை நீர் வடிகாளுடன் கூடிய தரை தள தொட்டி அமைக்கும் பணி இன்று(23/11/2023) துவங்கப்பட்டது. இதன் மூலம் கழிவு நீர் மற்றும் மழை நீர் தேங்காதவாறு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், கோட்டக்குப்பம் நகர மன்ற தலைவர் S.S ஜெயமூர்த்தி, நகராட்சி ஆணையர் புகேந்திரி, 21-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் M. சைதானி முஹமது கவுஸ், நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

The post கோட்டக்குப்பம் இப்ராஹிம் கார்டன் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கழிவுநீர் வடிகால் திட்டம் தொடங்கிவைப்பு. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/8407/feed/ 0
கோட்டக்குப்பம் ஜமியத் நகர் பகுதியில் கழிவு நீர் சாலைகளில் ஓடும் அவலம். நடவடிக்கை எடுக்க வேண்டி நகராட்சியிடம் கோரிக்கை. https://www.kottakuppamtimes.com/7519/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%259c%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25a4%25e0%25af%258d-%25e0%25ae%25a8-4 https://www.kottakuppamtimes.com/7519/#respond Thu, 24 Nov 2022 07:52:37 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7519 கோட்டக்குப்பம் ஜமியத் நகர் 12-வது வார்டு, கோட்டை அருகில் உள்ள ஒரு தெருவில் கழிவு நீர் சாலைகளில் தேங்கி, வீடுகள் முன்பு தெப்பம் போல் கழிவு நீர் காட்சி அளிக்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, கொசு தொல்லையும் அதிகரித்து பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், கடந்த சில மாதமாக கழிவுநீர் வெளியேறி சாலையில் முழுவதும் தேங்கி நிற்பதால் அப்பகுதி வழியாக 20-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு செல்லும் பொதுமக்கள்...

The post கோட்டக்குப்பம் ஜமியத் நகர் பகுதியில் கழிவு நீர் சாலைகளில் ஓடும் அவலம். நடவடிக்கை எடுக்க வேண்டி நகராட்சியிடம் கோரிக்கை. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் ஜமியத் நகர் 12-வது வார்டு, கோட்டை அருகில் உள்ள ஒரு தெருவில் கழிவு நீர் சாலைகளில் தேங்கி, வீடுகள் முன்பு தெப்பம் போல் கழிவு நீர் காட்சி அளிக்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, கொசு தொல்லையும் அதிகரித்து பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல், கடந்த சில மாதமாக கழிவுநீர் வெளியேறி சாலையில் முழுவதும் தேங்கி நிற்பதால் அப்பகுதி வழியாக 20-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு செல்லும் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதுகுறித்து நகராட்சியிடம் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

உடனடியாக சாலைகளில் ஓடும் கழிவுநீர் பிரச்னைக்கு கோட்டக்குப்பம் நகராட்சி தீர்வு காண வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கோட்டக்குப்பம் ஜமியத் நகர் பகுதியில் கழிவு நீர் சாலைகளில் ஓடும் அவலம். நடவடிக்கை எடுக்க வேண்டி நகராட்சியிடம் கோரிக்கை. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7519/feed/ 0
கோட்டக்குப்பம் தௌலத் நகர் பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீரால் சுகாதார சீர்கேடு: பொதுமக்கள் அவதி. https://www.kottakuppamtimes.com/7421/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25af%258c%25e0%25ae%25b2%25e0%25ae%25a4%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%2595%25e0%25ae%25b0 https://www.kottakuppamtimes.com/7421/#respond Fri, 14 Oct 2022 07:14:46 +0000 https://www.kottakuppamtimes.com/?p=7421 கோட்டக்குப்பம் சமரசம் நகர் அருகிலுள்ள புதிதாக உருவாக்கப்பட்ட தௌலத் நகர் பகுதியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கழிவுநீர் வசதியின்றி சமரச நகர் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளில் உள்ள கழிவுநீர் வழிந்தோடி தௌலத் நகர் பகுதியில் உள்ள ஒரு காலி மனையில் சூழ்ந்து, குளம்போல் கழிவுநீர் காட்சியளிக்கின்றது. இதனால், அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. தேங்கி நிற்கும் கழிவுநீர் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு...

The post கோட்டக்குப்பம் தௌலத் நகர் பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீரால் சுகாதார சீர்கேடு: பொதுமக்கள் அவதி. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் சமரசம் நகர் அருகிலுள்ள புதிதாக உருவாக்கப்பட்ட தௌலத் நகர் பகுதியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் கழிவுநீர் வசதியின்றி சமரச நகர் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளில் உள்ள கழிவுநீர் வழிந்தோடி தௌலத் நகர் பகுதியில் உள்ள ஒரு காலி மனையில் சூழ்ந்து, குளம்போல் கழிவுநீர் காட்சியளிக்கின்றது. இதனால், அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

தேங்கி நிற்கும் கழிவுநீர் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் கொசு தொல்லையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், தேங்கி நிற்கும் கழிவு நீரில் பன்றிகள் அதிகளவில் சுற்றி வருகிறது.

வீட்டில் உள்ளே இருக்கும் குளிர்சாதன பெட்டியில் தண்ணீர் தேங்கியுள்ளதா என்று பரிசோதிக்கும் நகராட்சி ஊழியர்கள், இங்கு வெளியில் தேங்கி நிற்கும் கழிவுநீரை கண்டு எந்த வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்று அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது சம்பந்தமாக பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

மேலும், பல்வேறு தொற்று நோய் பரவுவதற்குள் தேங்கிய கழிவு நீரை போா்க்கால அடிப்படைகளில் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

The post கோட்டக்குப்பம் தௌலத் நகர் பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீரால் சுகாதார சீர்கேடு: பொதுமக்கள் அவதி. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/7421/feed/ 0