pondicherry Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Sun, 05 Dec 2021 06:18:53 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg pondicherry Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 அனைவரும் தடுப்பூசி போடுவது கட்டாயம்: புதுச்சேரி அரசு உத்தரவு https://www.kottakuppamtimes.com/5406/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2585%25e0%25ae%25a9%25e0%25af%2588%25e0%25ae%25b5%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25ae%259f%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25af%2582%25e0%25ae%259a%25e0%25ae%25bf-%25e0%25ae%25aa%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%2581%25e0%25ae%25b5 https://www.kottakuppamtimes.com/5406/#respond Sun, 05 Dec 2021 06:18:50 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5406 ‛‛புதுச்சேரியில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயம். கொரோனாவை தடுக்கும் வகையில் கட்டாய தடுப்பூசி சட்டம் உடனடியாக அமல்படுத்தப்படுகிறது,” என, சுகாதார துறை இயக்குனர் ஸ்ரீராமலு அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: கொரோனா நோய் தொற்று குறைந்துள்ளதை தொடர்ந்து புதுச்சேரியில் ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. நோய் தொற்றை தடுக்கவும் 100 சதவித தடுப்பூசி போட்ட யூனியன் பிரதேசமாக மாற்ற அரசு பல்வேறு முகாம்களை நடத்தி நடவடிக்கை எடுத்து...

The post அனைவரும் தடுப்பூசி போடுவது கட்டாயம்: புதுச்சேரி அரசு உத்தரவு appeared first on Kottakuppam Times.]]>
‛‛புதுச்சேரியில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயம். கொரோனாவை தடுக்கும் வகையில் கட்டாய தடுப்பூசி சட்டம் உடனடியாக அமல்படுத்தப்படுகிறது,” என, சுகாதார துறை இயக்குனர் ஸ்ரீராமலு அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: கொரோனா நோய் தொற்று குறைந்துள்ளதை தொடர்ந்து புதுச்சேரியில் ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. நோய் தொற்றை தடுக்கவும் 100 சதவித தடுப்பூசி போட்ட யூனியன் பிரதேசமாக மாற்ற அரசு பல்வேறு முகாம்களை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் பயனாக முதல் தவணை ஊசியை 7 லட்சத்து,70 ஆயிரம் பேரும் இரண்டாவது தவணை ஊசியை 4லட்சத்து, 48ஆயிரம் பேரும் செலுத்தி கொண்டுள்ளனர்.

புதுச்சேரியில் 77 சதவீதத்தினர் தடுப்பூசி போட்டுள்ள நிலையில் விடுபட்டவர்கள் சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் சிலர் முன்வராத காரணத்தினால் கட்டாயம் கொரோனா தடுப்பூசி சட்டம் புதுச்சேரியில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி பொது சுகாதார சட்டம் 1973ன் பிரிவு 54(1)விதியின் கீழ் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். இரண்டு தவணை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு வரக்கூடாது. மீறி வெளியே நடமாடினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post அனைவரும் தடுப்பூசி போடுவது கட்டாயம்: புதுச்சேரி அரசு உத்தரவு appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5406/feed/ 0
புதுச்சேரியில் நாளை பள்ளிகள் திறப்பு: ஏற்பாடுகள் தீவிரம் https://www.kottakuppamtimes.com/5130/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%259a%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25af%2587%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%25b3%25e0%25af%2588-%25e0%25ae%25aa%25e0%25ae%25b3%25e0%25af%258d%25e0%25ae%25b3 https://www.kottakuppamtimes.com/5130/#respond Tue, 31 Aug 2021 08:15:15 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5130 புதுச்சேரியில் புதன்கிழமை (செப்.1) பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், வகுப்பறைகளைத் தூய்மை செய்தல் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. புதுச்சேரி, காரைக்காலில் புதன்கிழமை (செப்.1) முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. புதுச்சேரியில் பள்ளிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைளை கல்வித் துறை வெளியிட்டது. அதில், அரை நாள் மட்டுமே நேரடி வகுப்புகள் இயங்கும். மதிய உணவு வழங்கப்படாது. சிறப்பு பேருந்துகள் ஏதும் இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 9 முதல் பிளஸ் 2...

The post புதுச்சேரியில் நாளை பள்ளிகள் திறப்பு: ஏற்பாடுகள் தீவிரம் appeared first on Kottakuppam Times.]]>
புதுச்சேரியில் புதன்கிழமை (செப்.1) பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், வகுப்பறைகளைத் தூய்மை செய்தல் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

புதுச்சேரி, காரைக்காலில் புதன்கிழமை (செப்.1) முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. புதுச்சேரியில் பள்ளிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைளை கல்வித் துறை வெளியிட்டது. அதில், அரை நாள் மட்டுமே நேரடி வகுப்புகள் இயங்கும். மதிய உணவு வழங்கப்படாது. சிறப்பு பேருந்துகள் ஏதும் இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக 9 முதல் பிளஸ் 2 வரையான வகுப்புகள் மட்டுமே திறக்கப்படுகின்றன. 9, பிளஸ் 1 மாணவா்களுக்கு திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும், 10, பிளஸ் 2 மாணவா்களுக்கு செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

பள்ளிகள் திறந்ததும் நாள்தோறும் மாணவா்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும். காய்ச்சல், இருமல் அறிகுறிகள் உள்ளவா்கள் வகுப்புகளுக்கு வர வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், மாணவா்களுக்கு வருகைப் பதிவேடு கட்டாயமாக்கப்படாமல், இணையதளம் வழியாகவும், வீடுகளிலிருந்து மாணவா்கள் கல்வி பயில வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, புதுச்சேரியில் பள்ளிகளைத் திறப்புக்கான முன்னேற்பாடுகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன. வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. சமூக இடைவெளியுடன் மாணவா்கள் அமரும் வகையில் இருக்கைகள் மாற்றியமைக்கப்பட்டும், கைகளை அடிக்கடி சுத்தம் செய்யும் வகையில் குடிநீா் பைப்புகள் அமைக்கப்பட்டும் வருகின்றன.

பாடப் புத்தகங்கள் கொண்டு வரப்பட்டு, முருங்கப்பாக்கம் தீரா் சத்தியமூா்த்தி மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. ஆசிரியா்களுக்கு கரோனா தடுப்பூசி இரு தவணையும் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், பள்ளிகளில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தி, மாணவா்களுக்கு தடுப்பூசி செலுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

The post புதுச்சேரியில் நாளை பள்ளிகள் திறப்பு: ஏற்பாடுகள் தீவிரம் appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5130/feed/ 0
கவர்னரை மத்திய அரசு திரும்ப பெற கோரி புதுவையில் 16-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் https://www.kottakuppamtimes.com/3815/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25ae%25b5%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25a9%25e0%25ae%25b0%25e0%25af%2588-%25e0%25ae%25ae%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%2585%25e0%25ae%25b0%25e0%25ae%259a%25e0%25af%2581-%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25af%2581 https://www.kottakuppamtimes.com/3815/#respond Thu, 04 Feb 2021 08:02:38 +0000 https://www.kottakuppamtimes.com/?p=3709 புதுவை மாநில வளர்ச்சிக்கு கவர்னர் கிரண்பெடி தடையாக இருந்து வருவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இந்தநிலையில் கவர்னரை திரும்ப பெறக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி காங்கிரஸ் தலைமையிலான மத சார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று மாலை முதலியார்பேட்டையில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு காங்கிரஸ்...

The post கவர்னரை மத்திய அரசு திரும்ப பெற கோரி புதுவையில் 16-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் appeared first on Kottakuppam Times.]]>
புதுவை மாநில வளர்ச்சிக்கு கவர்னர் கிரண்பெடி தடையாக இருந்து வருவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இந்தநிலையில் கவர்னரை திரும்ப பெறக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி காங்கிரஸ் தலைமையிலான மத சார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று மாலை முதலியார்பேட்டையில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம், முன்னாள் அமைச்சர் விசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா. கலைநாதன், ரா‌‌ஷ்ட்ரீய ஜனதாதள மாநில தலைவர் சஞ்சீவி உள்ளிட்ட மதசார்பற்ற கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
கவர்னர் கிரண்பெடியை மத்திய அரசு திரும்ப பெற கோரி கடந்த 26-ந் தேதி கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. ஆனால் மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கவர்னர் கிரண்பெடியும் தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை. எனவே கவர்னரை கண்டித்து நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) அண்ணாசிலை அருகில் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம்.

ஜனாதிபதியை சந்திக்க நேரம் ஒதுக்க கேட்டிருந்தோம். அவர் வருகிற 10-ந் தேதி நேரம் ஒதுக்கி உள்ளார்.
அன்றைய தினம் டெல்லி சென்று அவரை சந்தித்து கையெழுத்து இயக்கத்தின் மூலம் பெறப்பட்ட கையெழுத்துகளை அவரிடம் ஒப்படைக்க உள்ளோம். மத்திய அரசு கவர்னரை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை மனுவும் அளிக்க உள்ளோம். பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிற 16-ந் தேதி மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. மத்திய அரசு புதுவையை வஞ்சித்து வரும் நிலை, கவர்னர் கிரண்பெடி மாநில அரசுக்கு எந்தெந்த வழிகளில் தொல்லை கொடுத்து வருகிறார் என்பது குறித்தும், முழு அடைப்பு போராட்டம் குறித்தும் பொதுமக்களிடம் எடுத்து கூற வருகிற 14, 15-ந் தேதிகளில் மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் தெருமுனை பிரசாரம் நடத்தப்படும். இந்த போராட்டத்திற்கு கூட்டணி கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

The post கவர்னரை மத்திய அரசு திரும்ப பெற கோரி புதுவையில் 16-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/3815/feed/ 0
மின்சார கட்டணம் ரத்து, கல்லூரி கட்டணம் ரத்து, இலவச மடிக்கணினி, கருணாநிதி சிற்றுண்டி திட்டம் : புதுவை முதல்வர் நாராயணசாமியின் சூப்பர் அறிவிப்புகள்!! https://www.kottakuppamtimes.com/2541/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25be%25e0%25ae%25b0-%25e0%25ae%2595%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%25a3%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25b0%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%2595%25e0%25ae%25b2 https://www.kottakuppamtimes.com/2541/#respond Mon, 20 Jul 2020 13:17:37 +0000 https://www.kottakuppamtimes.com/?p=2541 புதுச்சேரி : புதுச்சேரி சட்டசபையில் இன்று ரூ.9 ஆயிரம் கோடிக்கான பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார். வரலாற்றில் முதல் முறையாக துணைநிலை ஆளுநரின் உரையில்லாமல், புதுவையில் சட்டப்பேரவை தொடங்கப்பட்டு, இன்று முழு பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார். ஆளுநர் அனுமதி இல்லாமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, நியமன பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து புதுச்சேரி சட்டசபையில்...

The post மின்சார கட்டணம் ரத்து, கல்லூரி கட்டணம் ரத்து, இலவச மடிக்கணினி, கருணாநிதி சிற்றுண்டி திட்டம் : புதுவை முதல்வர் நாராயணசாமியின் சூப்பர் அறிவிப்புகள்!! appeared first on Kottakuppam Times.]]>
புதுச்சேரி : புதுச்சேரி சட்டசபையில் இன்று ரூ.9 ஆயிரம் கோடிக்கான பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார். வரலாற்றில் முதல் முறையாக துணைநிலை ஆளுநரின் உரையில்லாமல், புதுவையில் சட்டப்பேரவை தொடங்கப்பட்டு, இன்று முழு பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார். ஆளுநர் அனுமதி இல்லாமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, நியமன பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதையடுத்து புதுச்சேரி சட்டசபையில் இன்று மதியம் 12.00 மணிக்கு நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் நாராயணசாமி ரூ.9 ஆயிரம் கோடிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார்.

அப்போது முதல்வர் நாராயணசாமி பேசியதாவது,

*2020-21 நிதிநிலை ரூ.9 ஆயிரம் கோடியாக இருக்கும்.
இதில் ரூ.1966 கோடி சம்பளத்துக்கும், ரூ.1177 கோடி ஓய்வூதியத்துக்கும், ரூ.1625 கோடி கடனுக்கான வட்டி செலுத்துவதற்கும், ரூ.1525 கோடி மின்சாரத்தும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*பிற நலத்திட்ட உதவிகளுக்கு ரூ.896 கோடியும், தன்னாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு சார்பு நிறுவனங்களுக்கு ரூ.864 கோடியும் நிதி ஒதுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

*வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு குடிநீர் வரி ரத்து செய்யப்படும். 100 யூனிட்டிற்கு கீழ் பயன்படுத்தும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு மின்சார வரி ரத்து செய்யப்படும்.

*புதுச்சேரியில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், இலவச குடிநீர்.

*கருணாநிதி பெயரில் புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம். நவம்பர் 15-ந்தேதி முதல் காலை உணவாக இட்லி, கிச்சடி, பொங்கல் வழங்கப்படும்.

*வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் அனைவருக்கும் கல்லூரி கட்டணம் ரத்து. அனைத்து கல்லூரி கட்டணத்தையும் ரத்து செய்வதுடன் கல்லூரியில் சேர இலவசமாக விண்ணப்பம் வழங்கப்படும்.

*ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்துக்காக ரேசன் கடைகள் புத்தாக்கம் செய்யப்படும்.

*அரசு பள்ளியில் இறுதியாண்டு படிப்போர் இணையம் மூலம் கல்வி கற்க இலவச லேப்டாப் வழங்கப்படும்.

*ரூ. 4 கோடி செலவில் புதிய கல்வி தொலைக்காட்சி மற்றும் வானொலி தொடங்கப்படும்.புதுச்சேரியில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.

*நெல், சிறுதானியம் உள்ளிட்ட பயிர்வகைகளுக்கு மானியம் வழங்கப்படும்.போன் செய்தால் வீடுகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்படும். மாடித்தோட்டத்திற்கு 75% வழங்கப்படும்.

*இந்திரா காந்தி பெயரில், மருத்துவ காப்பீட்டுத்திட்டம் அறிமுகம் செய்யப்படும்.

முதல்வர் நாராயணசாமியின் மேற்கண்ட அறிவிப்புகள் புதுச்சேரி மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post மின்சார கட்டணம் ரத்து, கல்லூரி கட்டணம் ரத்து, இலவச மடிக்கணினி, கருணாநிதி சிற்றுண்டி திட்டம் : புதுவை முதல்வர் நாராயணசாமியின் சூப்பர் அறிவிப்புகள்!! appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/2541/feed/ 0
புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 112 பேருக்கு கொரோனா பாதிப்பு https://www.kottakuppamtimes.com/2413/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%259a%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25af%2587%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2587%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25af%2581-%25e0%25ae%2592%25e0%25ae%25b0%25e0%25af%2587 https://www.kottakuppamtimes.com/2413/#respond Wed, 08 Jul 2020 10:13:31 +0000 https://www.kottakuppamtimes.com/?p=2413 உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7.42 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில், 4.56 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2,17,121 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1,18,594  பேருக்கும், டெல்லியில் 1,02,831 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...

The post புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 112 பேருக்கு கொரோனா பாதிப்பு appeared first on Kottakuppam Times.]]>
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7.42 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில், 4.56 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2,17,121 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1,18,594  பேருக்கும், டெல்லியில் 1,02,831 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,151ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவில் இருந்து 584 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 14 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். 

The post புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 112 பேருக்கு கொரோனா பாதிப்பு appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/2413/feed/ 0