pondicherry news Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Tue, 31 Aug 2021 08:15:17 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg pondicherry news Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 புதுச்சேரியில் நாளை பள்ளிகள் திறப்பு: ஏற்பாடுகள் தீவிரம் https://www.kottakuppamtimes.com/5130/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%259a%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25af%2587%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25a8%25e0%25ae%25be%25e0%25ae%25b3%25e0%25af%2588-%25e0%25ae%25aa%25e0%25ae%25b3%25e0%25af%258d%25e0%25ae%25b3 https://www.kottakuppamtimes.com/5130/#respond Tue, 31 Aug 2021 08:15:15 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5130 புதுச்சேரியில் புதன்கிழமை (செப்.1) பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், வகுப்பறைகளைத் தூய்மை செய்தல் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. புதுச்சேரி, காரைக்காலில் புதன்கிழமை (செப்.1) முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. புதுச்சேரியில் பள்ளிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைளை கல்வித் துறை வெளியிட்டது. அதில், அரை நாள் மட்டுமே நேரடி வகுப்புகள் இயங்கும். மதிய உணவு வழங்கப்படாது. சிறப்பு பேருந்துகள் ஏதும் இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 9 முதல் பிளஸ் 2...

The post புதுச்சேரியில் நாளை பள்ளிகள் திறப்பு: ஏற்பாடுகள் தீவிரம் appeared first on Kottakuppam Times.]]>
புதுச்சேரியில் புதன்கிழமை (செப்.1) பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், வகுப்பறைகளைத் தூய்மை செய்தல் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

புதுச்சேரி, காரைக்காலில் புதன்கிழமை (செப்.1) முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. புதுச்சேரியில் பள்ளிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைளை கல்வித் துறை வெளியிட்டது. அதில், அரை நாள் மட்டுமே நேரடி வகுப்புகள் இயங்கும். மதிய உணவு வழங்கப்படாது. சிறப்பு பேருந்துகள் ஏதும் இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக 9 முதல் பிளஸ் 2 வரையான வகுப்புகள் மட்டுமே திறக்கப்படுகின்றன. 9, பிளஸ் 1 மாணவா்களுக்கு திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும், 10, பிளஸ் 2 மாணவா்களுக்கு செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

பள்ளிகள் திறந்ததும் நாள்தோறும் மாணவா்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும். காய்ச்சல், இருமல் அறிகுறிகள் உள்ளவா்கள் வகுப்புகளுக்கு வர வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், மாணவா்களுக்கு வருகைப் பதிவேடு கட்டாயமாக்கப்படாமல், இணையதளம் வழியாகவும், வீடுகளிலிருந்து மாணவா்கள் கல்வி பயில வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, புதுச்சேரியில் பள்ளிகளைத் திறப்புக்கான முன்னேற்பாடுகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன. வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. சமூக இடைவெளியுடன் மாணவா்கள் அமரும் வகையில் இருக்கைகள் மாற்றியமைக்கப்பட்டும், கைகளை அடிக்கடி சுத்தம் செய்யும் வகையில் குடிநீா் பைப்புகள் அமைக்கப்பட்டும் வருகின்றன.

பாடப் புத்தகங்கள் கொண்டு வரப்பட்டு, முருங்கப்பாக்கம் தீரா் சத்தியமூா்த்தி மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. ஆசிரியா்களுக்கு கரோனா தடுப்பூசி இரு தவணையும் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், பள்ளிகளில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தி, மாணவா்களுக்கு தடுப்பூசி செலுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

The post புதுச்சேரியில் நாளை பள்ளிகள் திறப்பு: ஏற்பாடுகள் தீவிரம் appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5130/feed/ 0
கவர்னரை மத்திய அரசு திரும்ப பெற கோரி புதுவையில் 16-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் https://www.kottakuppamtimes.com/3815/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25ae%25b5%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%25a9%25e0%25ae%25b0%25e0%25af%2588-%25e0%25ae%25ae%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%2585%25e0%25ae%25b0%25e0%25ae%259a%25e0%25af%2581-%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25af%2581 https://www.kottakuppamtimes.com/3815/#respond Thu, 04 Feb 2021 08:02:38 +0000 https://www.kottakuppamtimes.com/?p=3709 புதுவை மாநில வளர்ச்சிக்கு கவர்னர் கிரண்பெடி தடையாக இருந்து வருவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இந்தநிலையில் கவர்னரை திரும்ப பெறக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி காங்கிரஸ் தலைமையிலான மத சார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று மாலை முதலியார்பேட்டையில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு காங்கிரஸ்...

The post கவர்னரை மத்திய அரசு திரும்ப பெற கோரி புதுவையில் 16-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் appeared first on Kottakuppam Times.]]>
புதுவை மாநில வளர்ச்சிக்கு கவர்னர் கிரண்பெடி தடையாக இருந்து வருவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இந்தநிலையில் கவர்னரை திரும்ப பெறக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி காங்கிரஸ் தலைமையிலான மத சார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று மாலை முதலியார்பேட்டையில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம், முன்னாள் அமைச்சர் விசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா. கலைநாதன், ரா‌‌ஷ்ட்ரீய ஜனதாதள மாநில தலைவர் சஞ்சீவி உள்ளிட்ட மதசார்பற்ற கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
கவர்னர் கிரண்பெடியை மத்திய அரசு திரும்ப பெற கோரி கடந்த 26-ந் தேதி கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. ஆனால் மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கவர்னர் கிரண்பெடியும் தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை. எனவே கவர்னரை கண்டித்து நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) அண்ணாசிலை அருகில் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம்.

ஜனாதிபதியை சந்திக்க நேரம் ஒதுக்க கேட்டிருந்தோம். அவர் வருகிற 10-ந் தேதி நேரம் ஒதுக்கி உள்ளார்.
அன்றைய தினம் டெல்லி சென்று அவரை சந்தித்து கையெழுத்து இயக்கத்தின் மூலம் பெறப்பட்ட கையெழுத்துகளை அவரிடம் ஒப்படைக்க உள்ளோம். மத்திய அரசு கவர்னரை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை மனுவும் அளிக்க உள்ளோம். பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிற 16-ந் தேதி மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. மத்திய அரசு புதுவையை வஞ்சித்து வரும் நிலை, கவர்னர் கிரண்பெடி மாநில அரசுக்கு எந்தெந்த வழிகளில் தொல்லை கொடுத்து வருகிறார் என்பது குறித்தும், முழு அடைப்பு போராட்டம் குறித்தும் பொதுமக்களிடம் எடுத்து கூற வருகிற 14, 15-ந் தேதிகளில் மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் தெருமுனை பிரசாரம் நடத்தப்படும். இந்த போராட்டத்திற்கு கூட்டணி கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

The post கவர்னரை மத்திய அரசு திரும்ப பெற கோரி புதுவையில் 16-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/3815/feed/ 0
புதுச்சேரியில் கனமழையால் தெருக்களில் வெள்ளம்: முதல்வர் ஆய்வு https://www.kottakuppamtimes.com/3206/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%259a%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25af%2587%25e0%25ae%25b0%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%25a9%25e0%25ae%25ae%25e0%25ae%25b4%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25ae%25be%25e0%25ae%25b2 https://www.kottakuppamtimes.com/3206/#respond Fri, 04 Dec 2020 10:51:46 +0000 https://www.kottakuppamtimes.com/?p=3206 புதுச்சேரியில் இரண்டு நாள்களாக பெய்த கனமழையால் புதுச்சேரி நகர வீதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. அதை வெளியேற்றும் பணிகளை முதல்வர் வே.நாராயணசாமி வெள்ளிக்கிழமை காலை ஆய்வு செய்தார். கடந்த இரண்டு நாள்களாக புதுவை மாநிலம் முழுவதும் தொடர் அதிக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி இருப்பதால் முதல்வர் நாராயணசாமி வெள்ளிக்கிழமை காலை நெல்லித்தோப்பு தொகுதி அண்ணா நகர் பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டுஆய்வு செய்தார். காமராஜர்...

The post புதுச்சேரியில் கனமழையால் தெருக்களில் வெள்ளம்: முதல்வர் ஆய்வு appeared first on Kottakuppam Times.]]>
புதுச்சேரியில் இரண்டு நாள்களாக பெய்த கனமழையால் புதுச்சேரி நகர வீதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. அதை வெளியேற்றும் பணிகளை முதல்வர் வே.நாராயணசாமி வெள்ளிக்கிழமை காலை ஆய்வு செய்தார்.

கடந்த இரண்டு நாள்களாக புதுவை மாநிலம் முழுவதும் தொடர் அதிக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி இருப்பதால் முதல்வர் நாராயணசாமி வெள்ளிக்கிழமை காலை நெல்லித்தோப்பு தொகுதி அண்ணா நகர் பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டுஆய்வு செய்தார்.

காமராஜர் தொகுதி ரெயின்போ நகர், வெங்கட்டா நகர், கிருஷ்ணா நகர் ஆகிய பகுதிகளுக்கு தண்ணீரில் நடந்து சென்று பார்வையிட்டவர், அதிகாரிகளிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இன்னும் கூடுதலாக மின்மோட்டார் மூலம் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும் படி உத்தரவிட்டார். ஏற்கனவே ஒரு சில பகுதிகளில் மின் மோட்டார் மூலம் பணிகள் நடப்பதையும் பார்வையிட்டார். 

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 124 மி.மீ. மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல்வரின் ஆய்வின் போது காமராஜர் சட்டப்பேரவை உறுப்பினர் ஜான் குமார், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

The post புதுச்சேரியில் கனமழையால் தெருக்களில் வெள்ளம்: முதல்வர் ஆய்வு appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/3206/feed/ 0