MG road Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Fri, 26 Feb 2021 15:29:23 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg MG road Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 புதுச்சேரி நேரு வீதியை மிஞ்சும் கோட்டக்குப்பம் காந்தி ரோடு! https://www.kottakuppamtimes.com/4033/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%259a%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25af%2587%25e0%25ae%25b0%25e0%25ae%25bf-%25e0%25ae%25a8%25e0%25af%2587%25e0%25ae%25b0%25e0%25af%2581-%25e0%25ae%25b5%25e0%25af%2580%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25af%2588-%25e0%25ae%25ae https://www.kottakuppamtimes.com/4033/#respond Fri, 26 Feb 2021 15:15:31 +0000 https://www.kottakuppamtimes.com/?p=4033 புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டார மக்கள் தங்களின் தேவைகளுக்கு பொருட்களை வாங்க குவியும் இடம் புதுச்சேரி நேரு வீதி, காந்தி வீதி, அண்ணாசாலை. அதில் பிரதானமாக இடம்பிடிப்பது நேரு வீதி. அதேபோன்று கோட்டக்குப்பம் மக்களும் பொதுவாக தங்களின் தேவைக்கு பொருட்கள் வாங்க புதுச்சேரியை நோக்கியே படையெடுப்பார்கள். குறிப்பாக புதுச்சேரி நேரு வீதி அமைந்துள்ள கடைகளில் பொருட்களை வாங்குவார்கள். அதனால் அந்த கடைத்தெரு மின் விளக்குகளாலும், மக்கள் நடமாட்டத்தினாலும் பரபரப்பாகவே காணப்படும். அந்த...

The post புதுச்சேரி நேரு வீதியை மிஞ்சும் கோட்டக்குப்பம் காந்தி ரோடு! appeared first on Kottakuppam Times.]]>
புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டார மக்கள் தங்களின் தேவைகளுக்கு பொருட்களை வாங்க குவியும் இடம் புதுச்சேரி நேரு வீதி, காந்தி வீதி, அண்ணாசாலை.

அதில் பிரதானமாக இடம்பிடிப்பது நேரு வீதி.

அதேபோன்று கோட்டக்குப்பம் மக்களும் பொதுவாக தங்களின் தேவைக்கு பொருட்கள் வாங்க புதுச்சேரியை நோக்கியே படையெடுப்பார்கள்.

குறிப்பாக புதுச்சேரி நேரு வீதி அமைந்துள்ள கடைகளில் பொருட்களை வாங்குவார்கள். அதனால் அந்த கடைத்தெரு மின் விளக்குகளாலும், மக்கள் நடமாட்டத்தினாலும் பரபரப்பாகவே காணப்படும்.

அந்த காட்சிகளை நினைவுபடுத்தும் விதமாக தற்போது கோட்டகுப்பம் காந்தி வீதி மகிமை முதல் ரவுண்டானா வரையும், மேலும் ரவுண்டானா முதல் ஆரோவில் பெரிய முதலியார் சாவடி வரையும் பரபரப்பு காணப்படுகிறது.

இதற்கு காரணம் மகிமை முதல் ரவுண்டானா வரையில் புதிது புதிதாக பல கடைகள் திறக்கப்பட்டுள்ளது.

சிறிய பெரிய ஜவுளி கடைகள், வீட்டு தேவை பொருட்கள் கடை, பிளாஸ்டிக் பொருட்கள் கடைகள், ஹார்டுவேர்ஸ் கடைகள், வீடு கட்டுமான பொருட்கள் கடைகள், பெரிய சைவம் மற்றும் அசைவ ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், பாஸ்ட் புட் கடைகள், பிரியாணி கடைகள், சிறு சுகாதார மையங்கள், பியூட்டி பார்லர் என்று பல தரப்பு கடைகள் இங்கு புதிது புதிதாக உருவாகி பகல் நேரங்களில் போக்குவரத்து நெருக்கமும், இரவு நேரங்களில் மின் விளக்கு அலங்காரங்களாலும் மிகுந்த பரபரப்பாக காணப்படுகிறது.

கொரோனா நெருக்கடி கால கட்டத்தில் அருகிலுள்ள புதுச்சேரியில் நுழைவதற்கு தடைபட்டதால், தற்போது பல புதிய கடைகள் உருவாகியுள்ளது.

மாலை 6 மணிக்கு மேல் கோட்டக்குப்பம் காந்தி ரோட்டில் வாகன நெருக்கம் ஏற்பட்டு மிகுந்த பரபரப்பாக காணப்படுகிறது. கடைகளில் பொருத்தப்பட்டுள்ள மின்விளக்குகளால் வீதி முழுவதும் பளிச்சென்று காணப்படுவதால் காந்தி வீதியில் பயணிக்கும் போது புதிய நகரத்துக்குள் நுழைந்தது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டு கடைகளின் மின்விளக்குகளால் வெளிச்சமாக காணப்படுகிறது.

சிறிது காலம் கோட்டக்குப்பத்தில் இருந்து வெளிநாட்டிலோ, வெளியூரிலோ இருந்து திரும்ப கோட்டக்குப்பம் வரும் நபர்கள் ஆச்சரியத்துடன் புதிய நகருக்கு நுழைந்தது போன்ற பிரமிப்பை அடைகிறார்கள்.

மேலும் இப்பகுதியில் புதிய கடைகள் தொடங்குவதற்கு கடைகளில் கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது என்று சில நண்பர்கள் பேசிக் கொள்வதும் காதில் விழுகிறது. அதேபோல், இப்பகுதியில் 4 புதிய வியபார சங்கம் அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எது எப்படியோ தங்களின் சுய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள தற்சார்பு எண்ணத்துடன் புதிது புதிதாக அமைந்துள்ள கடைகளில் கோட்டக்குப்பம் மக்கள் தங்கள் தேவைக்கான பொருட்களை வாங்கி அந்த கடைகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் எதிர்கால நெருக்கடி காலங்களில் நம் சுயசார்பு பெறக்கூடிய வாய்ப்பாக அமையும் என்பதே தெரிகிறது.

ஆகவே, நமது பகுதியில் அமைத்துள்ள அனைத்து கடைகளுக்கும் ஆதரவு அளிப்போம்.

The post புதுச்சேரி நேரு வீதியை மிஞ்சும் கோட்டக்குப்பம் காந்தி ரோடு! appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/4033/feed/ 0
கோட்டக்குப்பம் காந்தி ரோடு அடைப்பு. தமிழகத்தில் கடைபிடிக்கப்படும் தளர்வுகளற்ற முழு அடைப்பு கோட்டக்குப்பத்திலும். https://www.kottakuppamtimes.com/2572/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf-%25e0%25ae%25b0%25e0%25af%258b https://www.kottakuppamtimes.com/2572/#respond Sun, 26 Jul 2020 05:46:47 +0000 https://www.kottakuppamtimes.com/?p=2572 தமிழகத்தில் கொரானா தாக்கம் அதிகரித்து வருவதால் ஜூலை மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் அற்ற முழு அடைப்பு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக கோட்டக்குப்பத்திலும் முழு அடைப்பு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தமிழக பகுதி கோட்டக்குப்பத்தில் கடை அடைப்பட்டாலும் அருகிலுள்ள புதுச்சேரியில் வழக்கம் போல செயல்பட்டு வருவது சமீப நாட்களில் புதுச்சேரியில் கொரானா தாக்கம் அதிகரித்து வருகிறது. மேலும் புதுச்சேரி மக்கள் இந்த முழுஅடைப்பு நாட்களில் கோட்டக்குப்பத்தில் அதிக அளவில் வந்து...

The post கோட்டக்குப்பம் காந்தி ரோடு அடைப்பு. தமிழகத்தில் கடைபிடிக்கப்படும் தளர்வுகளற்ற முழு அடைப்பு கோட்டக்குப்பத்திலும். appeared first on Kottakuppam Times.]]>
தமிழகத்தில் கொரானா தாக்கம் அதிகரித்து வருவதால் ஜூலை மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் அற்ற முழு அடைப்பு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக கோட்டக்குப்பத்திலும் முழு அடைப்பு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தமிழக பகுதி கோட்டக்குப்பத்தில் கடை அடைப்பட்டாலும் அருகிலுள்ள புதுச்சேரியில் வழக்கம் போல செயல்பட்டு வருவது சமீப நாட்களில் புதுச்சேரியில் கொரானா தாக்கம் அதிகரித்து வருகிறது.

மேலும் புதுச்சேரி மக்கள் இந்த முழுஅடைப்பு நாட்களில் கோட்டக்குப்பத்தில் அதிக அளவில் வந்து செல்வதால் இங்கும் கொரானா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கருதி கோட்டக்குப்பம் முத்தியால்பேட்டை எல்லையில் காந்தி ரோட்டில் போலீசாரால் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு புதுச்சேரியில் இருந்து யாரும் கோட்டக்குப்பம் பகுதிக்கு வராத வண்ணம் தடுக்கப்பட்டுள்ளது.

மேலும் புதுச்சேரி முத்தியால்பேட்டையில் சமீப நாட்களில் அதிக அளவில் கொரானா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் போலீஸ் அதிகாரிளின் நடவடிக்கை முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த தடுப்பானது இன்று மட்டும் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முழு அடைப்பில் மருத்துவம், பால் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சமீபமாக புதுச்சேரியில் தொற்று அதிகரித்து வருவதால் கோட்டக்குப்பம் மக்கள் புதுச்சேரிக்கு அத்தியாவசியத் தேவை இன்றி தேவையில்லாமல் செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஞாயிற்றுக்கிழமையில் முக்கிய சாலை அடைக்கப்பட்டுள்ளதால் கோட்டக்குப்பம் முத்தியால்பேட்டை பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

The post கோட்டக்குப்பம் காந்தி ரோடு அடைப்பு. தமிழகத்தில் கடைபிடிக்கப்படும் தளர்வுகளற்ற முழு அடைப்பு கோட்டக்குப்பத்திலும். appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/2572/feed/ 0
கோட்டக்குப்பம் – காந்தி ரோட்டில் இருபுறமும் ஒரே நேரத்தில் நடைபாதை அமைக்கும் பணியால் மக்கள் மற்றும் வியாபாரிகள் அவதி. https://www.kottakuppamtimes.com/2556/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf-%25e0%25ae%25b0 https://www.kottakuppamtimes.com/2556/#respond Sat, 25 Jul 2020 16:55:01 +0000 https://www.kottakuppamtimes.com/?p=2556 கோட்டக்குப்பம் காந்தி ரோடு மேற்கு பகுதியில், கோட்டக்குப்பம் – முத்தியால்பேட்டை எல்லையிலிருந்து கோட்டக்குப்பம் ஆர்ச்சி வரை வாய்க்கால் அமைக்கும் பணிகள் கடந்த ஐந்து மாதங்களாக நடைபெற்று வருகிறது. அதற்காக சுமார் 6 அடி ஆழத்தில் 10 அடி அகலத்தில் பள்ளம் எடுக்கப்பட்டு அதில் வாய்க்கால் அமைக்கும் பணி ஐந்து மாதங்களுக்குப் பிறகு தற்போதுதான் முடிந்துள்ள நிலையில் வாய்க்காலை ஒட்டி நடைபாதை கற்கள் பதிக்கும் பணிக்காக அதை ஒட்டி பள்ளம் எடுக்கப்பட்டு...

The post கோட்டக்குப்பம் – காந்தி ரோட்டில் இருபுறமும் ஒரே நேரத்தில் நடைபாதை அமைக்கும் பணியால் மக்கள் மற்றும் வியாபாரிகள் அவதி. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் காந்தி ரோடு மேற்கு பகுதியில், கோட்டக்குப்பம் – முத்தியால்பேட்டை எல்லையிலிருந்து கோட்டக்குப்பம் ஆர்ச்சி வரை வாய்க்கால் அமைக்கும் பணிகள் கடந்த ஐந்து மாதங்களாக நடைபெற்று வருகிறது.

அதற்காக சுமார் 6 அடி ஆழத்தில் 10 அடி அகலத்தில் பள்ளம் எடுக்கப்பட்டு அதில் வாய்க்கால் அமைக்கும் பணி ஐந்து மாதங்களுக்குப் பிறகு தற்போதுதான் முடிந்துள்ள நிலையில் வாய்க்காலை ஒட்டி நடைபாதை கற்கள் பதிக்கும் பணிக்காக அதை ஒட்டி பள்ளம் எடுக்கப்பட்டு அதற்காக ஜல்லி கொட்டப்பட்டு வருகிறது.

மேற்சொன்ன இந்த பணிகள் கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிகள், இதுநாள் வரையில் முடியாத நிலையில் இதற்காக எடுத்த பள்ளம் மூடப்படாத நிலையில், இதற்காகவே அப்பகுதியில் தற்போது வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வரும் நிலையில், தற்போது அதே ரூட்டில் கிழக்குப் பகுதியில் நடைபாதை கற்கள் பதிக்க சுமார் ஐந்து அடி அகலத்தில் பள்ளங்கள் எடுக்கப்பட்டு வருகிறது.

ஒரு பகுதியில் நடைபெற்ற வேலையிலேயே போக்குவரத்தை நெரிசல் ஏற்பட்ட நிலையில் தற்போது மற்றொரு பகுதியிலும் வேலை தொடங்கியுள்ளார்கள்.

கிழக்குப் பகுதியில் வேலையை தொடங்கிய நிலையில் அதற்காக ஜேசிபி இயந்திரங்கள் பள்ளம் எடுப்பதும், எடுத்த மண்ணை கொண்டுசெல்ல அதை ஒட்டி லாரிகள் நிறுத்தப்பட்ட நிலையில் போக்குவரத்து நெருக்கடி கடுமையாக உள்ளது.

ஒரு பகுதி முழுவதும் வேலைகள் நிறைவு பெற்ற நிலையில் அடுத்த பகுதியை தொடங்காமல் ஒரு பகுதியை வேலை முடிக்காமலேயே மறுபகுதியை வேலை தொடங்க இருப்பதால் காந்தி ரோடு பொதுமக்களும், வியாபாரிகளும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். இந்த வேலையைச் செய்பவர்கள் பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு உடனடியாக முடிப்பதற்கான அனைத்துத் திட்டமிடலையும் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கிறது.

The post கோட்டக்குப்பம் – காந்தி ரோட்டில் இருபுறமும் ஒரே நேரத்தில் நடைபாதை அமைக்கும் பணியால் மக்கள் மற்றும் வியாபாரிகள் அவதி. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/2556/feed/ 0
புது வடிவம் பெறும் கோட்டக்குப்பம் காந்தி ரோடு: சைடு வாய்க்கால் மற்றும் நடைபாதை அமைப்பு. https://www.kottakuppamtimes.com/2490/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%25b5%25e0%25ae%259f%25e0%25ae%25bf%25e0%25ae%25b5%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25af%2586%25e0%25ae%25b1%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f https://www.kottakuppamtimes.com/2490/#respond Fri, 17 Jul 2020 12:24:34 +0000 https://www.kottakuppamtimes.com/?p=2490 கோட்டக்குப்பம் முத்தியால்பேட்டை எல்லையிலிருந்து பரகத் நகர் வரை காந்தி ரோட்டின் மேற்குப்பகுதியில் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. கடந்த மூன்று மாதங்களாக இதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. முதலில் மேற்சொன்ன பாதையில் கால்வாய் அமைக்கப்பட்டு அதன் மேல்புறம் மூடப்படுகிறது. அதை ஒட்டி உள்ள காலியிடத்தில் நடைபாதைக் என்று நடைபாதை கற்கள் பதிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக இந்த பணிகள் நடைபெறுவதால் அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி...

The post புது வடிவம் பெறும் கோட்டக்குப்பம் காந்தி ரோடு: சைடு வாய்க்கால் மற்றும் நடைபாதை அமைப்பு. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பம் முத்தியால்பேட்டை எல்லையிலிருந்து பரகத் நகர் வரை காந்தி ரோட்டின் மேற்குப்பகுதியில் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. கடந்த மூன்று மாதங்களாக இதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. முதலில் மேற்சொன்ன பாதையில் கால்வாய் அமைக்கப்பட்டு அதன் மேல்புறம் மூடப்படுகிறது. அதை ஒட்டி உள்ள காலியிடத்தில் நடைபாதைக் என்று நடைபாதை கற்கள் பதிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

கடந்த மூன்று மாதங்களாக இந்த பணிகள் நடைபெறுவதால் அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி இருந்து வருகிறது. மேலும் இப்பணிகளில் இப்பகுதி வியாபாரிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள். ஏற்கனவே கொரானா நெருக்கடிகளினால் 70% வியாபாரம் பாதித்த நிலையில், தற்போது இந்த பணிகளாலும் வியாபாரம் பாதித்து உள்ளதாக வியாபாரிகள் கூறிவருகிறார்கள். ஆகவே மேற்படி பணிகளை மிகத் துரிதமாக முடித்து பொது மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் உதவிட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுக்கிறது.

The post புது வடிவம் பெறும் கோட்டக்குப்பம் காந்தி ரோடு: சைடு வாய்க்கால் மற்றும் நடைபாதை அமைப்பு. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/2490/feed/ 0