mask Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com Sat, 08 Jan 2022 16:01:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.kottakuppamtimes.com/wp-content/uploads/2021/01/cropped-Site-Icon-32x32.jpg mask Archives » Kottakuppam Times https://www.kottakuppamtimes.com 32 32 கோட்டக்குப்பதில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிப்பு. https://www.kottakuppamtimes.com/5616/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25ae%2595%25e0%25af%258d-2 https://www.kottakuppamtimes.com/5616/#respond Sat, 08 Jan 2022 16:01:14 +0000 https://www.kottakuppamtimes.com/?p=5616 கோட்டக்குப்பதில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு காவல்துறை சார்பில் அபராதம் விதிக்கப்பட்டது. ஒமைக்ரான் தொற்று பரவலை தடுக்கும் விதமாக காவல் துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டன. கோட்டக்குப்பம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், கடந்த சில தினங்களாக காவல் ஆய்வாளர் திரு. ராபின்சன் அவர்கள் தலைமையில் முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, முகக்கவசம் அணியாதவர்களுக்கு இலவசமாக முகக்கவசங்கள் வழங்கி வந்தார். மேலும், விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்...

The post கோட்டக்குப்பதில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிப்பு. appeared first on Kottakuppam Times.]]>
கோட்டக்குப்பதில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு காவல்துறை சார்பில் அபராதம் விதிக்கப்பட்டது. ஒமைக்ரான் தொற்று பரவலை தடுக்கும் விதமாக காவல் துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டன.

கோட்டக்குப்பம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், கடந்த சில தினங்களாக காவல் ஆய்வாளர் திரு. ராபின்சன் அவர்கள் தலைமையில் முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, முகக்கவசம் அணியாதவர்களுக்கு இலவசமாக முகக்கவசங்கள் வழங்கி வந்தார். மேலும், விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், இன்று(08/01/2022) கோட்டக்குப்பதில் காவல் ஆய்வாளர் தலைமையில், முகக்கசவம் அணியாத பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் 6 பேருக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அவர்களுக்கு காவல் ஆய்வாளர் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்.

இனிவரும் காலங்களில் பொது மக்கள், வியாபாரிகள், கடை ஊழியர்கள் அனைவரும் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது மற்றும் கைகளை அடிக்கடி கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது போன்ற ‘கோவிட் கட்டுப்பாட்டு நெறிமுறைகள்‘ கண்டிப்பாக கடைபிடிக்குமாறு கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

The post கோட்டக்குப்பதில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிப்பு. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/5616/feed/ 0
கோட்டக்குப்பம் காவல் உள்கோட்டத்தில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு 4 நாள்களில் ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்து 600-ம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. https://www.kottakuppamtimes.com/4310/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25af%258b%25e0%25ae%259f%25e0%25af%258d%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b5%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2589%25e0%25ae%25b3%25e0%25af%258d https://www.kottakuppamtimes.com/4310/#respond Tue, 13 Apr 2021 12:58:22 +0000 https://www.kottakuppamtimes.com/?p=4310 விழுப்புரம் மாவட்டத்தில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு காவல் துறை மூலம் ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த 4 நாள்களில் மட்டும் ரூ.5.36 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் பொது இடங்களில் பொதுமக்கள் முகக் கவசம் அணியாவிட்டால் ரூ.200-ம் சமூக இடைவெளியைப் பின்பற்றாவிட்டால் ரூ.500-ம் பொது இடத்தில் எச்சில் துப்பினால் ரூ.500-ம் அபராதமாக விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு...

The post கோட்டக்குப்பம் காவல் உள்கோட்டத்தில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு 4 நாள்களில் ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்து 600-ம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. appeared first on Kottakuppam Times.]]>
விழுப்புரம் மாவட்டத்தில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு காவல் துறை மூலம் ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த 4 நாள்களில் மட்டும் ரூ.5.36 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் பொது இடங்களில் பொதுமக்கள் முகக் கவசம் அணியாவிட்டால் ரூ.200-ம் சமூக இடைவெளியைப் பின்பற்றாவிட்டால் ரூ.500-ம் பொது இடத்தில் எச்சில் துப்பினால் ரூ.500-ம் அபராதமாக விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது.

இதற்காக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 30 காவல் நிலையங்களுக்கு 300 அபராத ரசீது புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மாவட்டம் முழுவதும் கடந்த 8 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை முகக் கவசம் அணியாமல் வந்த 2,681 பேருக்கு ரூ.200 வீதமும், சமூக இடைவெளியைப் பின்பற்றாத 45 பேருக்கு ரூ.500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதன் மூலம் கடந்த 4 நாள்களில் மட்டும் ரூ.5 லட்சத்து 36 ஆயிரத்து 200 வரை அபராதம் வசூலிக்கப்பட்டது. இதில், விழுப்புரம் காவல் உள்கோட்டத்தில் அதிகபட்சமாக ரூ. 2 லட்சத்து 5 ஆயிரமும், திண்டிவனம் காவல் உள்கோட்டத்தில் ரூ.1 லட்சத்து 29 ஆயிரத்து 400-ம், செஞ்சி காவல் உள்கோட்டத்தில் ரூ.75 ஆயிரத்து 200-ம், கோட்டக்குப்பம் காவல் உள்கோட்டத்தில் ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்து 600-ம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

மேலும், சமூக இடைவெளியை பின்பற்ற நபா்களிடமிருந்து கடந்த 4 நாள்களில் ரூ.22,500 வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதில், விழுப்புரம் உள்கோட்டத்தில் ரூ.10,500-ம், திண்டிவனம் உள்கோட்டத்தில் ரூ.1,500-ம், செஞ்சி உள்கோட்டத்தில் ரூ.1,500-ம், கோட்டக்குப்பம் உள்கோட்டத்தில் ரூ.9ஆயிரமும் காவல் துறை மூலம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கரோனா விதிமீறலில் ஈடுபட்ட 2,726 நபா்களிடமிருந்து மொத்தம் ரூ.5,58,700 அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

The post கோட்டக்குப்பம் காவல் உள்கோட்டத்தில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு 4 நாள்களில் ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்து 600-ம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. appeared first on Kottakuppam Times.]]>
https://www.kottakuppamtimes.com/4310/feed/ 0